For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்பகங்கள் எடுப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்!

தோய்வான மார்பங்களை சரி செய்ய இயற்கை வைத்தியங்கள்

By Sathya
|

பெண்கள் அனைவருமே கச்சிதமான வடிவமைப்புடன் உள்ள மார்பகங்களையே அதிகமாக விரும்புகிறார்கள். ஆனால் இது சில சமயங்களில் கடினமானதாக உள்ளது. மார்பக தோய்வு என்பது இயற்கையாகவே வயது அதிகரிக்கும் போது நடந்துவிடுகிறது. மார்பக தோய்வு என்பது பெண்களின் 40 வயதில் நடக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் இது தற்போது எல்லாம் மிகவும் முன்னராகவே நடந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சரியான பிராவை பெண்கள் உபயோகிக்காமல் இருப்பது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. உடற்பயிற்சி

1. உடற்பயிற்சி

மார்பகங்களின் அழகிற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமாகும். இதனை தினசரி செய்ய வேண்டும். மார்பங்களுக்கான புஷ் அப் பயிற்சிகள் ஆண்களுக்கானது மட்டுமல்ல. இதனை பெண்களும் செய்யலாம். டம்பெல் தூக்கும் உடற்பயிற்சி, கைகளை உயர்த்தி உடற்பயிற்சி செய்வது போன்றவை மார்பங்களின் அளவை பெரிதாக்கவும், தொங்காமல் பார்த்துக் கொள்ளவும் உதவும்.

2. ஐஸ் மசாஜ்

2. ஐஸ் மசாஜ்

ஐஸ் மசாஜ் தொங்கும் நிலையில் உள்ள மார்பகங்களுக்கு மிகச்சிறந்த தீர்வாகும். இரண்டு ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனை ஒரு நிமிடம் மட்டுமே செய்ய வேண்டும். அதன் பின் மார்பகங்களை சுத்தமான டவளில் துடைத்து விட்டு, பொருத்தமான பிராவை அணிந்து கொள்ளுங்கள். இதனை 3 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம்.

3. ஆலிவ் ஆயில்

3. ஆலிவ் ஆயில்

மார்பகங்களை ஆலிவ் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்தால் மார்பகங்கள் எழுச்சியடையும். ஆலிவ் எண்ணெய்யில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் மற்றும் ஃபேட்டி ஆசிட்டுகள் உள்ளன. இது மார்பகத்தில் உண்டாகும் செல் பாதிப்புகளை தடுக்கின்றன. அதுமட்டுமின்றி இவை சரும நிறத்தையும், மார்பகத்தின் வடிவமைப்பையும் மாற்றுகிறது.

சிறிதளவு ஆலிவ் ஆயிலை எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு, இதனை இரண்டு கைகளிலும் சூடு வரும் படி நன்றாக தேய்க்க வேண்டும். பின்னர் இந்த எண்ணெய்யை கொண்டு மார்பகங்களில் சுழற்சி முறையில் மசாஜ் செய்ய வேண்டும். இதனை வாரத்தில் 4 அல்லது 5 முறை செய்ய வேண்டும்.

4. வெள்ளரி மற்றும் முட்டை

4. வெள்ளரி மற்றும் முட்டை

முகத்திற்கு மாஸ்க் போடுவது போல மார்பகங்களுக்கும் மாஸ்க் போட வேண்டியது அவசியம். வெள்ளரியில் இயற்கையாகவே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகளவு புரோட்டின் மற்றும் விட்டமின்கள் உள்ளன. இவை மார்பகத்தின் அளவு மற்றும் தோய்வை சரியாக்க உதவுகிறது.

ஒரு சிறிய வெள்ளரிக்காயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவையும், 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்யையும் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை மார்பகத்தில் இட்டு முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதனை வாரம் ஒருமுறை டிரை செய்யலாம்.

5. முட்டையின் வெள்ளைக்கரு

5. முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கரு பெண்களின் மார்பக சுருக்கத்திற்கு மிகச்சிறந்த தீர்வாகும். ஒரு முட்டையை எடுத்துக் கொண்டு அதன் வெள்ளைக்கருவை நன்றாக கலக்க வேண்டும். இதனை மார்பகத்தில் அப்ளை செய்து முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

6. வெந்தயம்

6. வெந்தயம்

வெந்தயம் இயற்கை மருத்துவத்தில் மார்பகத்தில் உண்டாகும் பிரச்சனைகளை போக்க பயன்படுகிறது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளன. இது மார்பகத்தை இருக்கமாகவும், ஸ்மூத்தாகவும் இருக்க வைக்க உதவுகிறது.

கால் கப் வெந்தயப் பவுடரை எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியான பேஸ்ட்டாக செய்து கொள்ள வேண்டும். இதனை மார்பகத்தில் அப்ளை செய்து 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இதனை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.

7. மாதுளை

7. மாதுளை

மாதுளை முதுமையை தள்ளிப்போடுவதில் மிகவும் சிறந்த ஒன்றாகும். இது மார்பகங்கள் தொங்கிப் போவதில் இருந்து விடுதலை தருகிறது. மாதுளையின் தோலை அரைத்து அதில் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்து, மார்பகப்பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். இதனை 5 முதல் 10 நிமிடங்கள் தூங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டும்.

8. கற்றாளை

8. கற்றாளை

கற்றாளை சருமத்தை இறுக செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளன. இதனை மார்பகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து பிறகு கழுவி விட வேண்டும். இதனை வாரத்தில் 4 அல்லது 5 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் எடை குறைத்தல்

உடல் எடை குறைத்தல்

உடல் எடையை மிகவும் வேகமாக குறைக்கிறேன் என்று சாப்பிடாமல் இருப்பது, சீக்கிரமாக உடல் இளைப்பது போன்றவை மார்பக பகுதியில் தோய்வை உண்டாக்கும்.

நீச்சல்

நீச்சல்

நீச்சல் பயிற்சி செய்வது உங்களது மார்பகத்திற்கான மிகச்சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

natural remedies for breast sagging

natural remedies for breast sagging
Desktop Bottom Promotion