குளிர்காலத்தில் மென்மையான உதடுகள் பெற என்ன செய்ய வேண்டும் எனத் தெரியுமா

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

சுற்றுப் புற வெப்பநிலை குறையும் போது அது நமது சருமத்தையும் பாதிக்கிறது. குளிர்காலம் வந்தாலே நமது உதடுகள் வெடிப்புற்று மென்மை தன்மை இழந்து காணப்படும். இதற்கு காரணம் காற்றில் உள்ள ஈரப்பதம் குறைவதால் நமது உதடுகளும் வறண்டு வறட்சியோடு காணப்படும்.

நமது முகத்தை அழகாக காட்டுவதில் உதடுகளுக்கும் முக்கிய இடம் இருக்கிறது. அப்படிப்பட்ட உதடுகள் வறண்டு பொலிவிழந்து காணப்பட்டால் நீங்கள் என்ன தான் மேக்கப் போட்டாலும் அது பலனில்லாமல் தான் போகும்.

Natural Oils You Can Use To Nourish Chapped Lips In Winter

எனவே இந்த குளிர்காலத்தில் உங்கள் உதடுகளின் நிலையை நினைத்து கவலை படுகிறீர்களா அப்படியென்றால் நாங்கள் சொல்வதை கேளுங்கள். ஆமாங்க நாங்கள் சொல்லும் வழிகளை பின்பற்றினால் நீங்களும் குளிர்காலத்தில் ரோஜாப் பூ இதழ்களை போன்று மென்மையான உதடுகளை பெற இயலும்.

இதற்காக சில இயற்கை எண்ணெய்களை பயன்படுத்தி உங்கள் உதடுகளுக்கு போதுமான ஈரப்பதம் கொடுத்தாலே போதும் உங்கள் உதடுகள் புத்துயிர் பெறும்.

இந்த இயற்கை எண்ணெய் முறைகள் எளிதான மற்றும் செலவு குறைந்த நேரத்தை மிச்சப்படுத்தும் முறைகளும் கூட. இந்த எண்ணெய்களி்ல் உள்ள பொருட்கள் உங்கள் உதடுகளுக்கு ஈரப்பதம் கொடுத்து எல்லா நேரங்களிலும் மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் ஆக செயல்பட்டு உங்கள் வெடிப்புற்ற உதடுகளை குணப்படுத்துகிறது. மேலும் உங்கள் உதடுகளில் தேங்கி இருக்கும் இறந்த செல்களை நீக்கி பொலிவுறச் செய்யும். குளிர்காலத்தில் இந்த எண்ணெய்யை தினமும் படுப்பதற்கு முன் உங்கள் உதடுகளில் தடவி வந்தால் வெடிப்பில்லாத பட்டு போன்ற உதடுகளை பெற இயலும்.

சணல் விதைகள் எண்ணெய்

சணல் விதைகள் எண்ணெய்

சணல் விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் ஒரு இயற்கையான லிப் பாம் மாதிரி செயல்பட்டு குளிர்காலத்தில் மோசமாகும் உங்கள் உதடுகளை காக்கிறது.

இந்த எண்ணெய் உங்கள் உதடுகளுக்கு போதிய ஈரப்பதத்தை கொடுத்து வெடிப்பு மற்றும் தோல் உரிதலிருந்து காக்கிறது. இந்த எண்ணெய்யுடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து உதடுகளில் அப்ளே பண்ணி பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

 ஜோஜோபா ஆயில்

ஜோஜோபா ஆயில்

ஜோஜோபா ஆயில் ஒரு இயற்கையான புத்துயிர் கொடுக்கும் பொருள். இதை உதடுகளில் தடவும் போது நல்ல மாய்ஸ்சரைசர் ஆக செயல்படுகிறது. உதடுகளில் ஈரப்பதத்தை தக்க வைத்து பொலிவாக்குகிறது.

ஜோஜோபா ஆயிலுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து நல்ல உதடுகளில் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.

புதினா எண்ணெய்

புதினா எண்ணெய்

குளிர்காலத்தில் சருமத்தை அழகாக வைக்க புதினா எண்ணெய் முக்கியமாக பயன்படுகிறது. இந்த எண்ணெய்யை உங்கள் உதடுகளில் தடவும் போது ஈஸியாக ஈரப்பதத்தை ஈர்த்து வெடிப்புகளை நீக்கி அழகு படுத்துகிறது. இந்த ஆயிலுடன் சிறுது தேங்காய் எண்ணெய் கலந்து வாரத்திற்கு 3-4 தடவை உங்கள் உதடுகளில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் உதடுகளுக்கு மிகவும் சிறந்தது. வெடிப்பிலிருந்து உங்கள் உதடுகளை காக்க இது மிகவும் சிறந்தது. இந்த ஆயில் கண்டிப்பாக உங்கள் உதடுகளை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

இந்த ஆயிலை உங்கள் உதடுகளில் தடவி கொஞ்ச நேரம் அப்படியே விட்டு விடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற வீதம் செய்து வந்தால் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

 லாவண்டர் எண்ணெய்

லாவண்டர் எண்ணெய்

லாவண்டர் எண்ணெய் குளிர்காலத்தில் ஏற்படும் வறண்ட காற்றிலிருந்து உங்கள் உதடுகளை காக்கிறது. இந்த ஆயிலுடன் கோக்கோ பட்டரை கலந்து உங்கள் உதடுகளில் தடவ வேண்டும். இந்த கலவை ஒரு இயற்கையான லிப் பாம் மாதிரி செயல்பட்டு உங்கள் உதடுகளை மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைத்து கொள்ளும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் எல்லா வித அழகு பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்க கூடிய எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய்யில் அடங்கியுள்ள பொருட்கள் உங்கள் உதடுகளுக்கு ஈரப்பதம் மற்றும் நீர்ச்சத்து கொடுத்து பட்டு போல் ஆக்குகிறது.

இந்த ஆயிலை உங்கள் உதடுகளில் தடவி அப்படியே விட்டு விடுங்கள். குளிர்காலத்தில் உங்கள் அழகு முறைகளில் இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

விட்டமின் ஈ எண்ணெய்

விட்டமின் ஈ எண்ணெய்

விட்டமின் ஈ எண்ணெய் சருமத்திற்கு ஒரு சிறந்த பராமரிப்பு பொருளாகும். இது கண்டிப்பாக உங்கள் உதடுகளை மிகச் சிறந்த முறையில் பராமரிக்க உதவுகிறது. உதடுகளின் ஈரப்பதத்தை தக்க வைத்து அதன் மென்மை தன்மையை காக்கிறது. மேலும் உதட்டு சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

விட்டமின் ஈ மாத்திரைகளில் உள்ள எண்ணெய்யை எடுத்து உதடுகளில் தடவ வேண்டும். இதை குளிர்காலத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உதடுகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Oils You Can Use To Nourish Chapped Lips In Winter

Natural Oils You Can Use To Nourish Chapped Lips In Winter
Story first published: Monday, November 27, 2017, 19:00 [IST]