நிரந்தர ஸ்ட்ரையிட்டனிங்க் செய்வதால் உண்டாகும் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா?

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

ஹேர் ஸ்ட்ரைட்டனிங் என்பது இப்பொழுது எல்லாரும் விரும்பி செய்யும் புதிய ட்ரெண்ட்டாக உள்ளது. இதனால் எந்த வித விளைவுகளும் இல்லாததால் எண்ணிலடங்காத பெண்கள் நிறைய செலவழித்து இதை செய்ய ஆரம்பித்தனர்.

ஹேர் ஸ்ட்ரைட்டனரை தொடர்ந்து பெண்கள் பயன்படுத்தி வரும் அவர்கள் கூந்தல் மென்மையாகவும் பட்டு போன்று வழவழப்பாகவும் மாறத் தொடங்கியது. இது ஒரு பக்கம் இருக்க சில பெண்கள் நிரந்தர ஹேர் ஸ்ட்ரைட்டனிங் செய்ய முற்பட்டனர். இந்த நிரந்தர ஹேர் ஸ்ட்ரைட்டனிங் முறை சலூன்களில் நிறைய ஹேர் ஸ்ட்ரைட்டனிங் பொருட்கள் மற்றும் ஹீட் ஸ்டைலில் கருவி கொண்டு செய்யப்படுகிறது.

must-know-side-effects-of-permanent-hair-straightening

இந்த நிரந்தர ஹேர் ஸ்ட்ரைட்டனிங் முறை 2-3 செசன்களில் செய்யப்படுகிறது. எனவே இந்த முறை உங்கள் பர்சை காலி செய்யாமல் விடாது.

ஆனால் ஆயிரக்கணக்கான பெண்கள் இதை செய்வதற்கு காரணம் இது ஒரு தடவை செலவழித்தால் போதும் என்பதால் இதை நாடுகின்றனர். ஆனால் இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. எனவே எந்த மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை இக்கட்டுரையில் காணலாம். இதை தெரிந்து கொண்டு செயல்படுவது உங்களுக்கு நன்மை அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி உதிர்தல்

முடி உதிர்தல்

ஹேர் ஸ்ட்ரைட்டனிங் செய்வதில் வரும் முக்கியமான பிரச்சினை முடி உதிர்தல் ஏற்படுகிறது. ஏனெனில் நமது முடியின் மயிர்க்கால்கள் வலுவிழந்து விடுகின்றனர். இதற்கு ஹேர் ஸ்ட்ரைட்டனிங் செய்யும் போது பயன்படுத்தப்படும் கெமிக்கல் தான் காரணமாகும். மேலும் ஹீட்டான கருவியை பயன்படுத்துவதால் அவை அதிகப்படியான முடி உதிர்விற்கு காரணமாகின்றன.

அதிகமான வறட்சி

அதிகமான வறட்சி

ஹேர் ஸ்ட்ரைட்டனிங் உங்கள் முடியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியாக்கி விடுகிறது. அதிகமான கெமிக்கல் மற்றும் ஹீட்டான கருவியை பயன்படுத்துவதால் இந்த மாதிரியான பக்க விளைவை அதிகப்படுத்தி விடுகிறது.

 அலற்சி

அலற்சி

இது இன்னொரு விதமான பிரச்சினை ஆகும். ஹேர் ஸ்ட்ரைட்டனிங் பண்ணுவதால் அலற்சியும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் கெமிக்கல்கள் மயிர்கால்களின் தன்மையையே மாற்றி விடுகிறது.

எனவே இதனால் நமது ஸ்கால்ப்பில் அலற்சி ஏற்படுகிறது. எனவே ஹேர் ஸ்ட்ரைட்டனிங் பண்ணும் போது நல்ல தரம் வாய்ந்த ஹேர் ஸ்ட்ரைட்டனிங் பொருட்களை கொண்டு செய்வது நல்லது.

கூந்தலின் வேர்க்கால்களை எரிக்கிறது

கூந்தலின் வேர்க்கால்களை எரிக்கிறது

தொடர்ந்து ஹேர் ஸ்ட்ரைட்டனிங் செய்யும் போது அதிகமான சூட்டினால் மயிர்க்கால்களை எரித்து விடுகின்றன இதனால் உங்கள் கூந்தல் கடின தன்மையுடன் வலுவாக மாறி விடுகின்றன. இந்த பிரச்சினையை நிறைய பெண்கள் சந்தித்துள்ளனர் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

 உடையும் முடிகள்

உடையும் முடிகள்

இந்த ஹேர் ஸ்ட்ரைட்டனிங் செய்வதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல் மற்றும் ஹீட் போன்றவை முடி உதிர்விற்கு காரணமாக அமைகின்றன. உடையும் இந்த முடிகளால் ஆரோக்கியமற்ற கூந்தல் தான் பரிசாக கிடைக்கிறது. இதை தடுக்க தினமும் உங்கள் பியூட்டி முறைகளில் ஹேர் சீரம் பயன்படுத்துங்கள். இவை உங்கள் கூந்தல் உடைவதிலிருந்து தடுத்து போதுமான ஈரப்பதத்தை கொடுக்கும்.

பொலிவிழந்து காணப்படுதல்

பொலிவிழந்து காணப்படுதல்

மற்றொரு பிரச்சினை கூந்தல் பொலிவிழந்து காணப்படும். இந்த ஹேர் ஸ்ட்ரைட்டனிங் முறை உங்கள் தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையையும் ஈரப்பதத்தையும் உறிஞ்சி கூந்தலை பொலிவு இல்லாமல் ஆக்கி விடுகிறது.

புதிய முடிகள் வளர்வதை தடுத்தல்

புதிய முடிகள் வளர்வதை தடுத்தல்

நிறைய ஹேர் கேர் எக்ஸ்பட்டின் கருத்து ஹேர் ஸ்ட்ரைட்டனிங் முறை உங்கள் கூந்தல் வளர்ச்சியை தடுக்கிறது என்பது தான். இதற்கு இதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல் மற்றும் ஹீட் தான் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

 மேல்தோல் பாதிப்படைதல்

மேல்தோல் பாதிப்படைதல்

இந்த நிரந்தர ஹேர் ஸ்ட்ரைட்டனிங் முறை செய்வதால் நமது ஸ்கால்ப்பில் உள்ள மேல் தோல் பாதிப்படைகிறது. இதனால் நமது ஸ்கால்ப் வலுவிழந்து ஆரோக்கியமற்றதாக மாறி விடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

must-know-side-effects-of-permanent-hair-straightening

Side Effects Of Permanent Hair Straightening,
Story first published: Sunday, December 17, 2017, 9:00 [IST]