ஒரே பயன்பாட்டில் கை, கால், கழுத்தில் உள்ள கருமையைப் போக்கும் அற்புத ஸ்கரப்!

Posted By:
Subscribe to Boldsky

சாதாரணமாகவே கோடைக்காலத்தில் வெயில் கொளுத்தும். அதிலும் அக்னி நட்சத்திர நாட்களில் சொல்லவா வேண்டும். சூரியக் கதிர்கள் சருமத்தில் படும்போதே நெருப்பில் இருக்கும் உணர்வைப் பெறுவோம். மேலும் வெயில் சருமத்தில் அதிகம் படும்போது, சரும நிறம் கருமையாக ஆரம்பிக்கும்.

In Just 1 Use Of This Scrub Removes Sun Tan And Dark Marks

குறிப்பாக வெயிலில் சுற்றும் போது, கை, கால், கழுத்து பகுதிகள் தான் வெயிலில் அதிகம் படுவதால், அப்பகுதிகள் மிகவும் கருப்பாகிவிடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஒரே உபயோகத்தில் கை, கால், கழுத்துப் பகுதியில் உள்ள கருமையைப் போக்கும் ஓர் அற்புத ஸ்கரப் குறித்து கொடுத்துள்ளது.

தேவையான பொருட்கள்:

* சர்க்கரை

* காபி பவுடர்

* மைசூர் பருப்பு

* பாதாம் எண்ணெய்

* தேன்

* டால்கம் பவுடர்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்முறை #1

செய்முறை #1

முதலில் மிக்ஸியில் 3 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பை போட்டு நன்கு பவுடர் செய்து கொள்ள வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின்பு ஒரு பௌலில் அந்த மைசூர் பருப்பு பொடியைப் போட்டு, அத்துடன் 1 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

செய்முறை #3

செய்முறை #3

பின் 2 டேபிள் ஸ்பூன் காபி பவுடரை அத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #4

செய்முறை #4

அடுத்து 2 டேபிள் ஸ்பூன் டால்கம் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

செய்முறை #5

செய்முறை #5

பின்பு அதோடு 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

செய்முறை #6

செய்முறை #6

இப்போது தயாரித்து வைத்துள்ள ஸ்கரப்பை காற்றுப் புகாத கண்ணாடி குடுவையில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

தயாரித்து வைத்துள்ள ஸ்கரப்பை தினமும் குளிக்கும் போது, 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து குளிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், கருமை நீங்குவதோடு, சருமமும் பட்டுப் போன்று இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

In Just 1 Use Of This Scrub Removes Sun Tan And Dark Marks

Try this scrub ro remove sun tan and dark marks. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter