விரைவாக உங்களது நிறம் கூட வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

Written By:
Subscribe to Boldsky

வெயிலில் வெளியில் செல்வது, சரியான டயட்டை கடைப்பிடிக்காமல் இருப்பது, தூசி காற்று மாசுபாடுகள் ஆகியவை உங்களது முகத்தை கருமையாக்கி பொலிவிழக்க செய்யும். அதற்காக நாம் வெளியில் செல்லாமலும் இருக்க முடியாது. முகம் கருமையாவதை நினைத்து பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக கவலைப்படுகின்றனர்.

ஆனால் சில ஆண்கள் தங்களது முகத்திற்கு உரிய பராமரிப்பை கொடுப்பதில்லை. நீங்கள் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை டிரை செய்தால் உங்களது முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு, முகம் பளிச்சென மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக்கிங் சோடா பேஸ்ட் :

பேக்கிங் சோடா பேஸ்ட் :

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து முகத்திற்கு பேக் போட வேண்டும். இதனை 15 நிமிடங்கள் ஊற வைத்து சுத்தமான தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனை வெளியில் சென்று வந்த உடன் செய்து வந்தால் முகம் பிரகாசம் பெறும்.

வாழைப்பழம் மற்றும் பால் :

வாழைப்பழம் மற்றும் பால் :

வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் போல செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். இதனை செய்தால் உடனடியாக நல்ல பலன் தெரியும்.

ரோஸ் வாட்டர் :

ரோஸ் வாட்டர் :

ரோஸ் வாட்டர் மற்றும் பாலை ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி விட்டு, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

தேன் :

தேன் :

தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்

சர்க்கரை :

சர்க்கரை :

சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.

 தேங்காய் தண்ணீர் :

தேங்காய் தண்ணீர் :

தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள தழும்புகள், கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.

கற்றாழை ஜெல் :

கற்றாழை ஜெல் :

கற்றாழை ஜெல்லைக் கொண்டு முகமசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.

சூரியகாந்தி விதை :

சூரியகாந்தி விதை :

இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

மாம்பழத் தோல் :

மாம்பழத் தோல் :

மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to whiten your skin fast

how to whiten your skin fast
Story first published: Tuesday, September 26, 2017, 17:35 [IST]