அழகு பராமரிப்புக்கு ஹைட்ரஜன் பெராக்சைடா!! தெரிஞ்சுக்க இத படிங்க

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

நாம் அன்றாடம் நிறைய கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அவைகளைப் பற்றி எதுவும் தெரியாமல் அதை பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால் ஹைட்ரஜன் பெராக்சைட்டின் பயன்கள் ஆய்வுகளால் மருத்துவ துறையில் நீருபிக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு இதன் நன்மைகள் அதிகம். நீங்கள் இப்பவே நினைப்பீர்கள் ஒரு பாட்டில் ஹைட்ரஜன் பெராக்சைடு வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று.

How To Use Hydrogen Peroxide In Your Beauty Care Regimen

இந்த ஹைட்ரஜன் பெராக்சைடு அழகு பராமரிப்புக்கு எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பதை பற்றி இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

இது வண்ணமற்ற நீர்ம நிலையில் கிடைக்கிறது. இதை அழகு பராமரிப்புக்கு பயன்படுத்தினால் உங்கள் சருமம் மற்றும் கூந்தல் அழகை கூட்டுகிறது. இது எல்லா வகையான சருமத்திற்கும் மற்றும் கூந்தலுக்கும் ஏற்றது.

நீங்கள் ஹைட்ரஜன் பெராக்சைடை பயன்படுத்துவதற்கு முன்னாடி அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதை அப்படியே பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ கூடாது இதனுடன் வேறு பொருட்களை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

இந்த ஹைட்ரஜன் பெராக்சைடு அழகு பராமரிப்புக்கு மட்டும் இல்லாமல் கிச்சன் மற்றும் லாண்ட்ரி தேவைகளுக்கும் இதன் சேவை நீள்கிறது.

சரி வாங்க இந்த ஹைட்ரஜன் பெராக்சைடை எப்படி உங்கள் சருமம் மற்றும் முடிக்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமான குளியல்

ஆரோக்கியமான குளியல்

அழற்சி, கொப்பளங்கள், ரேஷஸ் மற்றும் பூஞ்சை தொற்று போன்ற சரும பிரச்சினையை ஹைட்ரஜன் பெராக்சைடு சரி பண்ணுகிறது. இதற்கு 1/2 பாட்டில் ஹைட்ரஜன் பெராக்சைடை குளிக்கிற தண்ணீரில் கலக்க வேண்டும்.

நீங்கள் சுடு தண்ணீர் பயன்படுத்தினால் 3% ஹைட்ரஜன் பெராக்சைடை கலந்து 1/2 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு இதில் குளித்தால் உங்க சரும பிரச்சினைகள் காணாமல் போகும்.

சரும காயங்கள் மற்றும் தொற்றுகளை சரி செய்தல்

இது காயங்கள் மற்றும் தொற்றுகளின் மீது நன்றாக செயல்படுகிறது. இதற்கு காட்டன் பஞ்சில் ஹைட்ரஜன் பெராக்சைடை நனைத்து அதை காயங்களின் மீது தடவ வேண்டும்.

இதை 5-10 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். ஹைட்ரஜன் பெராக்சைடின் அளவு உங்கள் காயங்களின் ஆழம் மற்றும் வடிவத்தை பொருத்தது. இதை தினமும் பயன்படுத்தி வந்தால் உங்கள் காயங்கள் விரைவில் ஆறிவிடும்.

பாத பூஞ்சை தொற்று நீக்குதல்

பாத பூஞ்சை தொற்று நீக்குதல்

உங்கள் பாதங்களில் ஏற்படும் ஆணிகள் மற்றும் தடித்த தோல் போன்றவை வளருவது பூஞ்சை தொற்று ஆகும். இதற்கு நீங்கள் சமமான அளவு தண்ணீர் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்த்து அதில் உங்கள் கால்களை நன்றாக நனைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதி நன்றாக மூழ்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத விதத்தில் பாத ஆணிகள் மற்றும் தடித்த தோல் போன்றவை காணாமல் போய் விடும். தினமும் இதை பயன்படுத்தி நல்ல மாற்றத்தை பாதங்களில் காணுங்கள்.

 வாய் பராமரிப்பு

வாய் பராமரிப்பு

இந்த ஹைட்ரஜன் பெராக்சைடு உங்கள் வாய் பராமரிப்புக்கு நிறைய வேலையை செய்கிறது. வாய்ப்புண்கள், வாய் துர்நாற்றம், வெள்ளைப் பற்கள் போன்றவற்றை சரி செய்கிறது. இதற்கு 1 டேபிள் ஸ்பூன் அல்லது 2 டேபிள் ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்சைடை வாயில் போட்டு 10 நிமிடங்கள் அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதை துப்பி விட்டு வாயை நன்றாக கழுவினால் உங்கள் பிரச்சினை எல்லாம் காணாமல் போய்விடும். மேலும் சின்ன பல்வலிக்கும் கூட இதே முறையை பயன்படுத்தி பலன் பெறலாம்.

சமமான அளவு ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து வீட்டிலே டூத் பேஸ்ட் தயாரித்து பயன்படுத்தி வந்தால் கிருமி தொந்தரவிலிருந்து உங்கள் பற்களை காப்பாற்றலாம்.

ஹேர் ப்ளீச்

ஹேர் ப்ளீச்

நீங்கள் சன் - ப்ளீச் ஹேர் வேண்டும் என்று நினைத்தால் அதற்கு பார்லர் போக வேண்டும் என்று அவசியம் இல்லை. வீட்டிலேயே ஹைட்ரஜன் பெராக்சைடை கொண்டு செய்து விடலாம்.

இதற்கு நீங்கள் நல்லா சாம்பு மற்றும் கன்டிஷனர் போட்டு குளித்த பிறகு டூத் பிரஷ்யை கொண்டு ஹைட்ரஜன் பெராக்சைடை உங்கள் முடியில் தடவ வேண்டும். பிறகு 10-15 நிமிடங்கள் கழித்து பார்த்தால் உங்கள் முடி லேசாக ப்ளீச் ஆகி இருக்கும். உங்கள் முடி முழுவதுமாக ப்ளீச் ஆன பிறகு தலையை வாஷ் பண்ண வேண்டும்.

நகப் பராமரிப்பு

நகப் பராமரிப்பு

உங்களுக்கு வெள்ளை, அழகான மற்றும் சுத்தமான நகம் கிடைக்க நேரம் கிடைக்காமல் கஷ்டப்பட்டால் இருக்கவே இருக்கு ஹைட்ரஜன் பெராக்சைடு. இதற்கு உங்கள் கை மற்றும் கால் விரல் நகங்களை ஹைட்ரஜன் பெராக்சைடு தண்ணீரில் நனைத்து சிறிது நேரம் கழித்து எடுத்தால் போதும் நகங்கள் அழகாக மாறிவிடும். இதை தினமும் செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

முகப்பரு நீக்குதல்

முகப்பரு நீக்குதல்

நீண்ட காலமாக முகப்பரு தொந்தரவு இருக்கா? அப்போ இந்த ஹைட்ரஜன் பெராக்சைடை பயன்படுத்தி பாருங்கள். இதற்கு காட்டன் பஞ்சில் ஹைட்ரஜன் பெராக்சைடை நனைத்து உங்கள் முகப்பருவில் தடவினால் போதும் முகப்பரு பிரச்சினை குறைந்து விடும்.

மேலும் இதனுடன் குணப்படுத்தக் கூடிய எண்ணெய்களை சேர்த்துக் கொண்டால் இன்னும் நிறைய பலனை காணலாம்.

 அக்குள் பராமரிப்பு

அக்குள் பராமரிப்பு

அக்குள் நாற்றம் மற்றும் அக்குள் சரும கருப்பு உங்களை மற்றவர்கள் முன்னிலையில் இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு போய்விடும்.

என்ன செய்தாலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வில்லை என்றால் ஹைட்ரஜன் பெராக்சைடை பயன்படுத்தி பாருங்கள். ஒரு காட்டன் பஞ்சில் ஹைட்ரஜன் பெராக்சைடை நனைத்து அதை அக்குள் பகுதியில் நன்றாக துடைக்க வேண்டும்.

இதை தினமும் நீங்கள் உடை அணிவதற்கு முன்னால் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

இனி இந்த ஹைட்ரஜன் பெராக்சைடை பயன்படுத்தி எல்லா நன்மைகளையும் நீங்களும் பெறலாமே

 சரும காயங்கள் மற்றும் தொற்றுகளை சரி செய்தல்

சரும காயங்கள் மற்றும் தொற்றுகளை சரி செய்தல்

இது காயங்கள் மற்றும் தொற்றுகளின் மீது நன்றாக செயல்படுகிறது. இதற்கு காட்டன் பஞ்சில் ஹைட்ரஜன் பெராக்சைடை நனைத்து அதை காயங்களின் மீது தடவ வேண்டும். இதை 5-10 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். ஹைட்ரஜன் பெராக்சைடின் அளவு உங்கள் காயங்களின் ஆழம் மற்றும் வடிவத்தை பொருத்தது. இதை தினமும் பயன்படுத்தி வந்தால் உங்கள் காயங்கள் விரைவில் ஆறிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Use Hydrogen Peroxide In Your Beauty Care Regimen

How To Use Hydrogen Peroxide In Your Beauty Care Regimen
Story first published: Thursday, June 29, 2017, 15:00 [IST]