அழகு சாதனப் பொருட்களை ஆன்லைனில் வாங்குகிறீர்களா? நீங்கள் கவனிக்க வேண்டியவை!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

பியூட்டி பொருட்கள் வாங்க ஸ்டோர்க்கு சென்றால் போதாதா? ஏன் ஆன்லைனில் வாங்கனும் என கேட்பீங்க. நீங்கள் ஸ்டோர்க்கு போய் பொருட்கள் வாங்கினால் விலை அதிகம் இருப்பதோடு சலுகைகளும் கிடைப்பதில்லை. இந்த காலத்தில் உலகமே ஆன்லைன் மயமாக ஆகிவிட்டது.

எனவே நீங்கள் ஆன்லைனில் பியூட்டி பொருட்கள் வாங்கினால் நிறைய சலுகைகள் கிடைக்கின்றன. மேலும் குறைந்த விலையில் உங்களால் நிறைய பொருட்களும் வாங்க முடியும். உங்களுக்காக ஆன்லைனில் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது அனுபவத்தை கொண்டு சில டிப்ஸ்களை இங்கே கூறியுள்ளனர்.

இந்த டிப்ஸ்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கவா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க அவங்க என்ன தான் சொல்லி இருக்காங்கன்னு பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருத்து மற்றும் தரமதிப்பீடுகள்

கருத்து மற்றும் தரமதிப்பீடுகள்

நீங்கள் ஆன்லைனில் பியூட்டி பொருட்கள் வாங்கும் போது கலர்புல்லான விளம்பரம் மற்றும் அதன் விளக்கத்தை பார்த்து ஏமாறக் கூடாது.

நல்ல தரமான பொருட்களை தேர்வு செய்ய அந்த பொருட்களை பற்றிய மற்றவர்களின் கருத்துக்கள் மற்றும் அதன் தரமதிப்பீடுகளை மனதில் கொள்ள வேண்டும். இந்த முறையில் ஆராய்ந்து வாங்கினால் கண்டிப்பாக நல்ல பொருட்களை தேர்வு செய்யலாம். இதுவே மற்ற பொருட்களுக்கும் பொருந்தும்.

 2.பரிசோதனை செய்து பார்த்தல்

2.பரிசோதனை செய்து பார்த்தல்

உதாரணமாக ஒரு பவுண்டேஷன் அல்லது லோசன் வாங்குறீங்க என்றால் முதலில் நமக்கு அது ஒத்துக் கொள்ளுமா என்பதை பார்க்க வேண்டும். சரி இதை எப்படி பார்ப்பது என்றால் பியூட்டி ஸ்டோர்க்கு சென்று உங்களுக்கு தேவையான பொருட்களை பயன்படுத்தி பார்த்துக் கொள்ளுங்கள். அதையே ஆன்லைனில் ஆர்டர் பண்ணினால் உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.

3.தரம் மற்றும் அளவை சோதித்தல் :

3.தரம் மற்றும் அளவை சோதித்தல் :

நீங்கள் ஆன்லைனில் வாங்கும் நிறைய பொருட்களுக்கு சலுகைகள் கிடைக்கும். ஆனால் அவைகள் தரமற்ற மற்றும் அளவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே நன்றாக ஆய்வு செய்த பிறகு வாங்குங்கள்.

 4. பிராண்ட் பெயர் பார்த்தல் :

4. பிராண்ட் பெயர் பார்த்தல் :

ஆன்லைன் ஒரு பரந்த உலக வர்த்தகம். எனவே இதில் நிறைய நிறுவனங்கள் தங்கள் பிராண்ட்டை விற்க முயலுகின்றனர். இதில் உஙகளுக்கு தகுந்த பிராண்ட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். இருப்பினும் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் பிராண்ட் என்றால் பாதுகாப்பாக இருக்கும். இதில் இருக்கும் பேன்ஸி பெயர்கள் மற்றும் கலர்புல்லான பேக்கிங் பார்த்து ஏமாற வேண்டாம்.

5.மாதிரி சோதித்தல் :

5.மாதிரி சோதித்தல் :

சில ஆன்லைன் பிராண்ட்கள் மாதிரி இலவசமாக கொடுப்பார்கள். அதை வாங்கி பயன்படுத்தி உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டால் வாங்கலாம் போன்ற சலுகைகளும் உள்ளன. இதை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

 6. தகுந்த வெப்சைட் தேர்ந்தெடுத்தல்

6. தகுந்த வெப்சைட் தேர்ந்தெடுத்தல்

பியூட்டி பொருட்களுக்கென நிறைய வெப்சைட்கள் வந்துள்ளன. இதில் வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டை கொண்டு நல்ல வெப்சைட்டை தேர்ந்தெடுக்கலாம். புதிதாக ஆன்லைனில் வாங்குபவர்கள் கூகுள் சென்று தேடியும் மற்றும் உங்கள் நண்பர்களின் கருத்து கேட்டும் முடிவு பண்ணலாம். சில சிறிய வெப்சைட்கள் பணம் பரிமாற்றத்தில் மோசடி செய்ய வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இந்த கருத்துகளை மனதில் கொண்டு செயல்படுங்கள்.

7. ஒரே ஆன்லைனை தேர்ந்தெடுத்தல்

7. ஒரே ஆன்லைனை தேர்ந்தெடுத்தல்

பிராண்ட் பியூட்டி பொருட்கள் இல்லாமல் அதற்கு சம்பந்தப்பட்ட பொருட்களான பிரஷ் மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் ஆன்லைனி

8.ரிட்டன் பாலிசி அறிதல் :

8.ரிட்டன் பாலிசி அறிதல் :

ஆன்லைனில் வாங்கின பொருட்கள் சரியில்லை என்றால் அதை ரிட்டன் செய்வதற்கு ரிட்டன் பாலிசி அறிந்து கொள்ளுங்கள். எனவே அந்த வெப்சைட்டில் உள்ள ரிட்டன் பாலிசியை நன்றாக படித்துக் கொள்ளுங்கள். உதாரணமாக சாம்பு பாட்டிலை திறந்து விட்டால் வாங்க மாட்டோம் போன்ற குறிப்புகளை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.

9. வாய்ப்புகளை தேடுதல்

9. வாய்ப்புகளை தேடுதல்

ஸ்டோர்க்கு சென்று பொருட்கள் வாங்கினால் உங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது. ஆனால் ஆன்லைன் வர்த்தகத்தில் நீங்கள் நிறைய வாய்ப்புகளை பெறலாம். ஒரே பொருளுக்கு வெவ்வேறு விலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்த மாதிரி நிறைய வாய்ப்புகள் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும்

12. டெலிவரி பற்றி அறிதல் :

12. டெலிவரி பற்றி அறிதல் :

உங்களுக்கு குறிப்பிட்ட தேதியில் பொருள் தேவைப்படுகிறது. ஆனால் அதன் டெலிவரி தேதி தாமதமானதால் என்ன செய்வீர்கள். எனவே நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்களின் டெலிவரி தேதி, டெலிவரி கட்டணம் போன்றவற்றை அறிந்து கொள்வது நல்லது.

என்னங்க ஒரு தெளிவான ஆன்லைன் ஷாப்பிங் பண்ண ஐடியா கிடைச்சிடுச்சா? அப்புறம் இன்னும் ஏன் வெயிட் பண்றீங்க பியூட்டி பொருட்கள் வாங்கி அசத்துங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Shop Beauty Products Online

How To Shop Beauty Products Online