2-3 நாட்களில் முகப்பருவைப் போக்க வேண்டுமா? இதோ ஓர் எளிய வழி!

Posted By:
Subscribe to Boldsky

வெயில் காலம் என்பதால் நிறைய பேர் முகப்பரு பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். முகப்பருவால் ஏராளமான மக்கள் தங்கள் அழகையே இழந்துள்ளனர். மேலும் முகப்பருவைப் போக்க கடைகளில் விற்கப்படும் பல க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித மாற்றமும் தெரிந்திருக்காது.

How To Get Rid of Acne & Pimples In 2-3 Days - Works 100%!!

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு வழியைப் பின்பற்றினால், நிச்சயம் 2-3 நாட்களிலேயே பருக்களைப் போக்கலாம். உங்களுக்கு அந்த வழி என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

முல்தானி மெட்டி - 2 டேபிள் ஸ்பூன்

கற்றாழை ஜெல் - 2-3 டேபிள் ஸ்பூன்

டீ-ட்ரீ ஆயில் - 3 துளிகள்

செய்முறை #1

செய்முறை #1

ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின் தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

இந்த மாஸ்க்கை தொடர்ந்து 2-3 நாட்கள் இரவில் செய்து வந்தால், பருக்கள் மற்றும் பருக்களால் வந்த தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

மற்றொரு எளிய மாஸ்க்

மற்றொரு எளிய மாஸ்க்

முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் கோடையில் செய்வதன் மூலமும், பருக்களைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Get Rid of Acne & Pimples In 2-3 Days - Works 100%!!

Want to know how to get rid of acne and pimples in 2-3 days? Read on to know more...