முகத்தில் அசிங்கமாக இருக்கும் கரும்புள்ளிகளை எளிதான முறையில் நீக்குவது எப்படி?

Written By:
Subscribe to Boldsky

முகம் என்ன தான் பளபளப்பாக இருந்தாலும், முகத்தில் ஆங்காங்கே உள்ள கருமையும், கரும்புள்ளிகளும் முகத்தின் அழகை சீரழிப்பதாக இருக்கும். இந்த கரும்புள்ளிகளை போக்க நீங்கள் பார்லர் செல்வதை காட்டிலும், அழகிற்காக பயன்படுத்தப்படும் க்ரீம்களை பயன்படுத்துவதை காட்டிலும், வீட்டிலேயே இருக்கும் சில இயற்கை பொருட்களை கொண்டு இவற்றை நீக்குவது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெந்தய கீரை

வெந்தய கீரை

வெந்தய கீரை முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவதில் சிறந்தது. வெந்தய கீரையை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் காயவைத்து, பின்னர் முகத்தை கழுவி விட வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவிலேயே மாயமாக மறைந்து போய்விடும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

கொத்தமல்லி இலையானது உணவுக்கு நறுமனத்தையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருவதோடு மட்டுமல்லாமல் உங்களது சருமத்திற்கு அழகையும் கொடுக்கிறது. கொத்தமல்லி இலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் விரைவாக மறைந்துவிடும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறுடன் சிறிதளவு சர்க்கரையை கலந்து முகத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்குவதோடு, முகம் பளபளப்பாக இருக்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் நீங்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் முகத்திற்கு மிகவும் சிறந்த ஒரு பொருளாகும். ஓட்ஸை தூள் செய்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து, முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

தயிர்

தயிர்

தயிர் மற்றும் எலுமிச்சை இரண்டுமே சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகும். இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலந்து முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

தக்காளி

தக்காளி

தக்காளியை பேஸ்ட் செய்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு, முகம் பளிச்சென மாறும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீர் விட்டு பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு வாரத்தில் மூன்று நாட்கள் செய்து வருவதால் உங்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லை கொண்டு முகத்தை தினமும் 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகத்தில் எந்த ஒரு மாசு மருக்களும் இல்லாமல் முகம் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.

மாம்பழ தோல்

மாம்பழ தோல்

மாம்பழ தோல் முகத்திற்கு மிகவும் நல்லது. இந்த மாம்பழ தோலை நன்றாக அரைத்து பால் சேர்த்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளபளப்பாக மாறும். நிறம் கூடும்.

தேன்

தேன்

தேனில் எலுமிச்சை சாறு கலந்து முகத்திற்கு தினமும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் முகம் மென்மையாகவும், கரும்புள்ளிகள் எதுவும் இல்லாமலும் பளபளப்பாகவும் மாறும். நிறம் கூடும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து முகத்திற்கு அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின் ஸ்கிரப் செய்வது போல மசாஜ் செய்து பின்னர் கழுவி விட வேண்டும். இவ்வாறு இரண்டு வாரங்கள் செய்து வந்தாலே முகத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கி, முகம் மென்மையாக மாறும். பருக்கள் வராது.

தண்ணீர்

தண்ணீர்

தண்ணீர் தினமும் உடலுக்கு தேவையான அளவு குடிப்பதினால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி முகம் பொலிவாக இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தை நன்றாக மசித்து, அதில் பால் சேர்த்து முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும். இது போன்று தினமும் இரண்டு தடவைகள் செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும். இரண்டு வாரங்களில் முகத்தில் பொலிவு கூடியிருப்பதை நீங்கள் கண்கூடாக காணலாம்.

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீரை கொண்டு தினமும் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் முகம் பளபளப்பாக மாறும். முகத்தின் நிறம் கூடும்.

பால்

பால்

பாலை கொண்டு தினமும் காலையில் முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை, அழுக்கள் நீங்கி முகம் பளபளப்பாக மாறும். முகத்தின் வசீகரம் கூடும். இளமையான தோற்றம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Remove Dark Spots Easily

How to Remove Dark Spots Easily