உங்களை வயதானவர்கள் போல காட்டும் கைகளில் உள்ள சுருக்கங்களை எளிதில் மறைய செய்யலாம்!

Posted By:
Subscribe to Boldsky

நம்மில் பெரும்பாலோனர் முகத்தின் அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கைகள் மற்றும் கால்களை பராமரிப்பதற்கு தருவதில்லை.. நமது முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களது கண்களுக்கு தெரிவது நமது கைகளும் கால்களும் தான். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை நாம் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமல்லவா...?

நமது முதுமை தோற்றத்தை வெளிப்படுத்துவது முதலில் நமது கைகள் தான். ஆனால் சிலருக்கு கைகளில் சின்ன வயதிலேயே சுருக்கங்கள் வந்து அவர்களது தோற்றத்தை முதுமையாக காட்டும். இந்த சுருக்கங்கள் நீடித்து இருக்க கூடியவை அல்ல.. இந்த சுருக்கங்களை நாம் எளிதாக போக்கலாம். இந்த பகுதியில் உங்களது முதுமை தோற்றத்தை வெளிப்படுத்தும் இந்த சுருக்கங்களை போக்க சில வீட்டிலேயே செய்யக் கூடிய சிகிச்சை முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி நீங்கள் சிறந்த பலனை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. உருளைக்கிழங்கு

1. உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் உள்ள அமிலம், சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதுடன், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, சரும நிறத்தை அதிகரிப்பதோடு, சரும சுருக்கங்களையும் போக்கும். மேலும் உருளைக்கிழங்கு சருமத்தை மென்மையாக்கும்.

உருளைக்கிழங்கை வேக அரைத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, வாரத்திற்கு 2-3 முறை கை, கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்பு கடலை போட்டு கழுவ வேண்டும்.

2. முட்டை

2. முட்டை

சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை முட்டை மேம்படுத்தும். இது சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. முட்டையின் வெள்ளைக்கருவுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

3. வாழைப்பழம்

3. வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இரும்புச்சத்து மற்றும் இதர கனிமச்சத்துக்கள் உள்ளது. இது சுருக்கங்களை மறையச் செய்யும். அதற்கு வாழைப்பழத்தை மசித்து, அதனை கைகளில் தடவி நன்கு காய்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.

4. ஆலிவ் ஆயில்

4. ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை தினமும் கைகளில் தடவி குறைந்தது 30 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சரும செல்கள் ஊட்டம் பெற்று, வறட்சியால் சருமம் சுருக்கமடைவது தடுக்கப்படும்.

5. எலுமிச்சை

5. எலுமிச்சை

பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, கைகளில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் பாலில் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

6. அன்னாசி

6. அன்னாசி

அன்னாசி பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, அழகை அதிகரிக்கும். அதற்கு அன்னாசியை அரைத்து, அதனை கைகளில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

7. வெள்ளரிக்காய்

7. வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை அரைத்து, கைகளின் மேல் தடவி 30 நிமிடம் கழித்து கழுவுங்கள். இப்படி அடிக்கடி செய்து வந்தால், வறட்சி நீங்கி, சுருக்கங்களும் மறையும்.

8. அரிசி மாஸ்க்

8. அரிசி மாஸ்க்

2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, கைகளில் தடவி நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

9. தர்பூசணி

9. தர்பூசணி

தர்பூசணியை அரைத்து கைகளின் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், சுருக்கங்கள் வேகமாக மறையும்.

 10. தக்காளி

10. தக்காளி

தினமும் தக்காளி துண்டை கைகளில் தடவி, நன்கு காய்ந்த பின்பு கழுவ வேண்டும். இப்படி செய்து வருவதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சரும சுருக்கங்களை சீக்கிரம் மறையச் செய்யும்.

11. எலுமிச்சை மற்றும் பால்

11. எலுமிச்சை மற்றும் பால்

பாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, கைகளில் தடவி 20 நமிடம் கழித்துக் கழுவ வேண்டும்.

12. கடலை மாவு

12. கடலை மாவு

இது பழங்காலம் முதலாக பின்பற்றப்பட்டு வந்த ஒரு அழகு பராமரிப்பு செயலாகும். அது என்னவெனில், குளிக்கும் போது கடலை மாவைப் பயன்படுத்தி நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் இறந்த செல்கள் முழுமையாக நீக்கப்பட்டு, சரும சுருக்கமும் விரைவில் மறையும்.

13. கேரட் சாறு

13. கேரட் சாறு

ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன்  ஸ்பூன் காரட் சாறு கலந்து கைகளில் தடவி 15 நிமிடங்கள் நன்றாக உலர விடவும். நன்றாக உலர்ந்தது பஞ்சை வெதுவெதுப்பான நீரில் நனைத்துத் துடைக்கவும். தினமும் ஒரு முறை இவ்வாறு செய்துவர மெல்லிய கைகளில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

14. கிளிசரின்

14. கிளிசரின்

கிளிசரினுடன் சிறிது தேன் சேர்த்து கைகளில் தடவி மசாஜ் செய்து பிறகு குளிர்ந்த நீரில் கைகளை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்களது கைகளில் உள்ள சுருக்கங்கள் சீக்கிரமாகவே மறைவதை கண்கூடாக காணலாம்.

 15. முட்டைக்கோஸ்

15. முட்டைக்கோஸ்

ஒரு டீஸ்பூன் முட்டைக்கோஸ் சாறுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து கைகளில் தடவி 20 நிமிடம் உலரவிடவும். நன்றாக உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவவும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வந்தாலும் கைகளில் உள்ள சுருக்கம் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to reduce winkles in hand

How to reduce winkles in hand
Story first published: Monday, November 27, 2017, 10:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter