சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் விரைவில் பலன் தரும் இந்த தைலம் பற்றி தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

சரும ஆரோக்கியத்திற்காக நாம் பல்வேறு விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். ஆரோக்கியமான சருமத்தை பெற நாம் தவறான தேர்வுகளை செய்து விடக்கூடாது. முகத்திற்கு கெமிக்கல் பொருட்களை உபயோகிப்பது என்பது தவறான ஒன்று... கெமிக்கல் பொருட்களை வாங்கி பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட, இயற்கை பொருட்களை பயன்படுத்துவது தான் சரியான ஒரு நல்ல யோசனையாக இருக்கும்.

How to reduce skin problems using kumkumadi lepam

ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் நிறத்திற்கு, சரியான ஊட்டச்சத்து பராமரிப்பு மற்றும் நிறைய கவனம் தேவைப்படுகிறது. அதனால் 15 பொருட்கள் உள்ள, சருமத்தை மிருதுவாகவும், ஒளிரவும் செய்யும் செயல்பாடுகளைப் போல் பல வகைகளைக் கொண்ட மூலிகை தயாரிப்பை விட வேறு எதுவும் சிறந்ததாக இருக்க முடியாது...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குங்குமாதி தைலம்

குங்குமாதி தைலம்

தென்னிந்தியா முழுவதும், குறிப்பாக கேரளாவில் ஒரு பொதுவான வீட்டு பெயரான ஒரு ஆயுர்வேத மூலிகை எண்ணெய், குங்குமாதி தைலம் குங்குமப்பூவை உருவாக்கப்படுகிறது. இந்த எண்ணெயின் முக்கிய மூலப்பொருள் குங்குமப்பூ. இது சருமத்தின் நிறம் மற்றும் அமைப்பை மேம்படுத்தும் தனிப்பட்ட குணத்தைக் கொண்டுள்ளது.

வியக்கத்தக்க மாற்றங்கள்

வியக்கத்தக்க மாற்றங்கள்

இந்தத் தைலம், முக சருமத்தின் மீது அதிசயங்கள் செய்யும் பல பொருட்களுடன் சேர்த்து, சந்தனம், தாமரை மகரந்தம் மற்றும் மஞ்சள் போன்ற இயற்கையான அழகு சாதன பொருட்களை கொண்டிருக்கிறது. இந்த இயற்கை தைலத்தை வாங்கி நீங்கள் பயன்படுத்தினால் சருமத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை காணலாம்.

பாக்டீரியா எதிர்ப்பு

பாக்டீரியா எதிர்ப்பு

குங்குமாதி தைலம் ஆனாது, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகளும் உடையது. இதன் விளைவாக, இது ஒரு ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் நிறமாக சருமத்தை வைப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நீடித்த காலத்திற்குப் பயன்படுத்தப்படும் போது, குங்குமப்பூ உங்கள் தோலிலிருந்து பழுப்பை நீக்குகிறது மற்றும் உங்களுக்கு ஒரு பிரகாசமான சருமத்தைக் கொடுக்கிறது.

சரும மாசுக்கள்

சரும மாசுக்கள்

வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகள் இருந்தால், முகம் மிகவும் பொலிவிழந்து, கருமையாகவும், அசிங்கமாகவும் காணப்படும். குங்குமாதி தைலம் அழற்சியை எதிர்க்கும் பண்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகளை கொண்டுள்ளது. மேலும், சருமப் பிரச்சினைகளின் தீவிரத்தையும் சருமத்தின் மாசுகளையும் குறைக்க உதவும் மஞ்சளையும் கொண்டிருக்கிறது.

இளமையுடன் இருக்கும்

இளமையுடன் இருக்கும்

குங்குமாதி தைல உட்பொருட்கள் சரும வளர்ச்சிக்கு ஊட்டமளித்து, சரும ஆரோக்கியத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த எண்ணெயை கொண்டு மசாஜ் செய்வதால், முக தசைகள் உறுதி ஆகும். முகத்தை ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ளவும், உதவுகிறது. இந்த குங்குமாதி தைல எண்ணெய்யை பயன்படுத்துவதால் உங்களது முகம் இளமையுடன் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.

சரும மாசுக்கள் நீங்கும்

சரும மாசுக்கள் நீங்கும்

மஞ்சள் மற்றும் சந்தனம் போன்ற குங்குமாதி தைல உட்பொருட்கள், சரும நிறத்தை வெளிர வைக்கும் திறன் கொண்டவை. இத்துடன், சரும மாசுகளை நீக்கும் திறனையும் கொண்டுள்ளது.

பருக்கள் மறையும்

பருக்கள் மறையும்

இந்த குங்குமாதி தைலத்தை பயன்படுத்தி வந்தால் பருக்கள் மறைவதை நீங்கள் கண்கூடாக காண முடியும். இது பருக்களுக்கும், பருக்களால் ஆன கரும்புள்ளிகளுக்கும் மிகச்சிறந்த எதிரியாகும்.

கருவளையம்

கருவளையம்

குங்குமாதி தைலத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் உங்களது கண்ணுக்கு கீழ் அசிங்கமாக இருக்கும் கருவளையங்கள் மறைந்து, முகத்திற்கு ஒரு நல்ல பிரகாசமான ஒளி கிடைக்கும்.

எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

இந்த எண்ணையை உபயோகிக்க, ஒரு சில துளிகளை கையில் எடுத்துக் கொண்டு அதை முகத்தில் தடவ வேண்டும். இந்த எண்ணெய்யை கொண்டு மிருதுவாக உங்களது முகத்தில் விரல்களால் முகம் முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். பருக்கள் இருந்தால், அழுத்தி மசாஜ் செய்யக் கூடாது.

எங்கு கிடைக்கும்?

எங்கு கிடைக்கும்?

குங்குமாதி தைலம் என்பது பல இடங்களில் சாதாரணமாகவே கிடைக்க கூடியது. இது நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும். இது குங்குமாதி தைலமாகவும், குங்குமாதி எண்ணெய்யாகவும் கிடைக்கும்.

மங்கை போக்க..

மங்கை போக்க..

மங்கு எனப்படுகிற கரும்புள்ளிகளையும் நீக்கும். இரவு படுக்கச் செல்வதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில் தடவிக்கொண்டு அப்படியே விட்டு விடலாம். காலையில் கழுவி விடலாம்.

எண்ணெய் பசை சருமம்

எண்ணெய் பசை சருமம்

எண்ணெய் பசையான சருமம் கொண்டவர்கள் குளிப்பதற்கு முன் தடவிக் கொண்டு, சிறிது நேரத்தில் குளித்து விட வேண்டும்.

குங்குமாதி லேபம் உபயோகிக்கிற போது சோப்பை தவிர்ப்பது நல்லது.

சோப்பிற்கு பதிலாக..

சோப்பிற்கு பதிலாக..

சோப்பிற்கு பதில் எலுமிச்சை தோல், பயத்தம் பருப்பு, கிச்சிலிக்கிழங்கு மூன்றும் சம அளவு சேர்த்து அரைத்த பொடியைத் தேய்த்துக் குளிக்க வேண்டும். இது சருமத்திலுள்ள இறந்த செல்களையும் நீக்கும். தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை உணரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to reduce skin problems using kumkumadi lepam

How to reduce skin problems using kumkumadi lepam
Story first published: Wednesday, November 22, 2017, 9:00 [IST]