பளபளக்கும் சருமத்திற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும்!

Written By:
Subscribe to Boldsky

தினமும் காற்றில் உள்ள மாசுக்கள் உங்களது முகத்தில் படிவதாலும், முகத்தில் எண்ணெய் வடிவது, துசிகள் படிவது, முகப்பருக்கள், சூரிய ஒளி போன்றவை உங்களது முகத்தில் உள்ள பொழிவை குறைக்கின்றன. என்ன தான் கலராக இருந்தாலும் சரி, கருப்பாக இருந்தாலும் சரி முகத்தில் ஒரு பொழிவு இருந்தால் அந்த நாளே உங்களுக்கு புத்துணர்ச்சி மிகுந்த ஒரு நாளாக இருக்கும்.

உங்களை காணும் அனைவரும், என்ன இன்று விஷேசம் ரொம்ப அழகா இருக்க... முகம் இப்படி மின்னுதே என்று ஆள் ஆளுக்கு விசாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படி நாழு பேர் விசாரித்தால், உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியாக தானே இருக்கும். அதுமட்டுமல்லாமல் அந்த நாளே வெகு சிறப்பாக இருப்பது உறுதி தான்.

இந்த முகப் பொலிவை பெற நீங்கள் பார்லர்களுக்கு சென்று சில ஆயிரங்களை செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டிலேயே எளிய முறையில், மிக குறைந்த செலவில் சில விஷயங்களை செய்வதன் மூலம் வீட்டிலேயே நீங்கள் எளிதாக மிகச்சிறந்த முக பொலிவை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தேன் மற்றும் பால்

1. தேன் மற்றும் பால்

உங்களது முகம் மாசு நிறைந்த காற்றினால் அசுத்தமாவதை தடுத்து, முக பொலிவை பெற தேன் மற்றும் பால் கலந்த கலவையை முகத்திற்கு தடவ வேண்டும். இது முகத்தில் உள்ள இறந்த செல்களை போக்கி முகத்திற்கு புது பொலிவை தருகிறது.

2. எண்ணெய் பசை

2. எண்ணெய் பசை

முகம் பொலிவற்று கிடப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை தான். இது வெளியில் இருக்கும் தூசி, கெமிக்கல்கள் போன்றவற்றை உள் இழுத்து, முகத்தில் பருக்களை தோன்ற செய்யும். இதற்கு சிறிதளவு ரோஸ் வாட்டரில், முல்தாணி மட்டியை கலந்து முகத்திற்கு அப்ளை செய்து, பின்னர் கழுவினால் முகம் எண்ணெய் பசைகள் இன்றி பளப்பளப்பாக இருக்கும்.

3. மஞ்சள், தேன் :

3. மஞ்சள், தேன் :

உங்களது சருமம் ஜீவனிழந்து கிடக்கிறதா? அதற்கு ஓட்ஸ், மஞ்சள், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் மிருதுவாக ஸ்கிரப் செய்தால், உங்களது முகம் புத்துணர்வு பெரும். ஸ்கின் செல்கள் புதுப்பிக்கப்படும். இது உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பிரகாசிக்க செய்யும்.

4. சோர்ந்த முகம்

4. சோர்ந்த முகம்

என்ன தான் மேக்கப் செய்து அழகை மேம்பட செய்தாலும், முகத்திற்கு ஒரு பவுடர் கூட போடாமல் முகத்தை மிளிர செய்வது தான் உண்மையான அழகாகும். சோர்ந்த, சில இடங்களில் கருப்பு கருப்பாக உள்ள சருமத்திற்கு எலுமிச்சை சாறு, தேன், கற்றாளை ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்திற்கு மசாஜ் செய்து, வெதுவெதுப்பாக உள்ள நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது முகத்திற்கு சிறந்த பொழிவை தரும்.

5. சந்தனம்

5. சந்தனம்

சந்தனம் முகத்திற்கு குளிர்ச்சியை அளித்து, முகப்பருக்களை போக்கும் தன்மை கொண்டது. சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் .

6. எலுமிச்சை

6. எலுமிச்சை

எலுமிச்சையில் ஆசிட் தன்மை உள்ளதால், இது சருமத்திற்கு மிகவும் நல்லது. தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 - 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம். எலுமிச்சை மற்றும் தக்காளி சென்சிடிவ் ஆன சருமம் உள்ளவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். எனவே அவர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம்.

7. பால்

7. பால்

முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 - 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.

8. இளநீர்

8. இளநீர்

இளநீர் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். சருமம் பளபளப்பாக மாறும்.

9. சீரகம்

9. சீரகம்

சீரகம் மற்றும் முள்ளங்கி ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.

10. புதினா

10. புதினா

புதினா முகத்தின் நிறத்தை மேம்படுத்தவும், முகத்தில் மினுமினுப்பை அதிகரிக்கும் மிகவும் சிறந்தது. புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்.

11. முட்டை

11. முட்டை

முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும். முட்டையின் வெள்ளை கரு முகத்தில் வளரும் சிறிய முடிகளை போக்கும் தன்மை கொண்டது. இதனால முகம் பார்க்க மிகவும் அழகாக மாறும்.

12. அன்னாச்சி சாறு

12. அன்னாச்சி சாறு

அன்னாச்சி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் சாறுகளை முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் உங்களது முகம் மிகுந்த ஆரோக்கியத்துடன் திகழும்.

13. தக்காளியின் பண்புகள்

13. தக்காளியின் பண்புகள்

தக்காளியானது முகத்தில் உள்ள சுருக்கம் மற்றும் கரும் புள்ளிகளை அகற்றி இளமையாக மற்றும் தன்மை கொண்டது. நீங்கள் தக்காளியை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் மட்டும் போதும். நினைத்து பார்க்க முடியாத மாற்றத்தை பெறலாம்.

14. முகம் பொழிவு பெற

14. முகம் பொழிவு பெற

முகம் பொழிவு இல்லாதவர்கள் ஒரு தக்காளியை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் ஒரு தேக்கரண்டி ரவையை கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முகம் பொழிவு பெறும்.

15. தக்காளி முகப்பூச்சு

15. தக்காளி முகப்பூச்சு

ஒரு தக்காளி மற்றும் தோல் சீவிய உருளை கிழங்கு இரண்டையும் நன்றாக பசை போல அரைத்து அதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகம் அழகில் ஜொலிக்கும்.

16. தங்க முகம்

16. தங்க முகம்

ஒரு தக்காளியை எடுத்து கூலாக அரைத்து அதனுடன் இரண்டு கரண்டி தயிர் கலந்து பூசி வர வெயில் நேரத்தில் முகம் தங்கம் போல் மின்னும். இதனை தொடர்ந்து செய்து வர கூடுதல் பலன் கிடைப்பது உறுதி.

17. முகத்தில் எண்ணை வடிகிறதா?

17. முகத்தில் எண்ணை வடிகிறதா?

ஒரு கரண்டி தயிர் மற்றும் ஒரு தக்காளியை எடுத்து அரைத்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகம் அலச வேண்டும். பின்பு எண்ணை பசை மாறி முகம் பொழிவுடன் காணப்படும்.

18. உடல் மென்மையாக

18. உடல் மென்மையாக

தக்காளியை நன்றாக அரைத்து அதனுடன் எழுமிச்சை சாறு கலந்து அதை முகம் , கழுத்து, கை , கால் மற்றும் உடல் முழுவதும் பூசி வர உடல் மென்மையாகிவிடும். இதை வாரம் ஒரு முறை செய்தால் போதுமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to get glowing skin

How to get glowing skin
Story first published: Monday, October 23, 2017, 13:12 [IST]
Subscribe Newsletter