கொழுக்கொழு கன்னங்களை பெற எளிய வழிமுறைகள்!

Written By:
Subscribe to Boldsky

உதடுகள் மற்றும் கண்களுக்கு அடுத்து முகத்தை அழகாக காட்டுவது, கன்னங்கள் தான். கொழுகொழுவென இருக்கும் கன்னங்கள் முகத்திற்கு அழகினை சேர்க்கும். ஆனால் சிலருக்கு கன்னங்கள் வற்றிப்போய் அழகையே கெடுக்கும். கன்னங்கள் கொழு கொழுப்பாக ஆக நீங்கள் அதிக சிரமப்பட தேவையில்லை.

தினமும் சிறிது நேரத்தை இதற்காக செலவழித்தால் போதுமானது. அதுவும் இயற்கை வழிமுறைகளை கையாழ்வதால் மட்டுமே கன்னங்களை கொழு கொழுவென மாற்ற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பலூன் ஊதுதல்

1. பலூன் ஊதுதல்

பலூன் ஊதும் பயிற்சியானது மிகவும் எளிமையானது. இது உங்களது கன்னம் மற்றும் முகத்தின் அழகை பாதுகாக்க உதவியாக இருக்கும். பலூனை வாயால் ஊதி, 1 நிமிடம் வரை காற்றை உங்களது வாயிலேயே அடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை செய்யலாம்.

2. ஆலிவ் ஆயில்

2. ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் ஒரு மிகச்சிறந்த நிவாரணியாகும். ஆலிவ் ஆயில் வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. சருமத்தை மிருதுவாக்குகிறது. முகத்தில் சுருக்கங்கள் விழாமல் தடுக்க இது உதவுகிறது. தினமும் ஒரு டிஸ்பூன் எக்ஸ்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலை பருக வேண்டும். மிதமான சூடுள்ள ஆலிவ் ஆயிலை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்யலாம்.

3. கற்றாளை

3. கற்றாளை

கற்றாளை முகத்தில் சுருக்கங்கள் விழுகாமல் தடுக்க உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகமாக உள்ளன.

கற்றாளை ஜெல்லை கொண்டு தினமும் முகத்திற்கு 10 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். இதனை தினமும் 2 முறை செய்ய வேண்டும்.

4. வெந்தயம்

4. வெந்தயம்

கொழுகொழுப்பான கன்னங்களை பெற வெந்தயம் ஒரு மிகச்சிறந்த தீர்வாகும். இதில் விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகமாக உள்ளன. வெந்தய பேஸ்ட்டை கன்னத்தில் இட்டு சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இதனை பத்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். இதனை தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை செய்ய வேண்டும்.

5. ஷியா பட்டர்

5. ஷியா பட்டர்

ஷியா பட்டரில் அதிகளவு ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது சருமத்தில் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கிறது. இதில் விட்டமின் இ அதிகமாக உள்ளது. ஷியா பட்டர் கன்னங்களை கொழுகொழுப்பாக மாற்ற பெரிதும் உதவியாக உள்ளது.

ஷியா பட்டரை கன்னங்களில் தடவி, கீழிருந்து மேலாக 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும் இதனை 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர் மிதமான சூடுள்ள நீரில் கழுவி விட வேண்டும். இதனை வாரத்தில் சில முறைகளாவது செய்ய வேண்டியது அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to get Chubby Cheeks fast

How to get Chubby Cheeks fast
Story first published: Monday, September 18, 2017, 10:47 [IST]