For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த இரண்டு பொருள் மட்டும் இருந்தாலே மற்றவர் பொறாமைப்படும் அழகினை பெறலாம்!

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சீக்கிரமாக அழகை அதிகரிப்பது எப்படி?

By Lakshmi
|

அனைவருக்குமே தங்களது முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அதுவும் மெக்கப் எதுவும் போடாமலேயே முகம் பளிச்சிடும் அழகினை பெற வேண்டும் என்ற ஆசை நியாயமான ஒரு ஆசை தான்.. கெமிக்கல் பொருட்களை முகத்தில் அப்ளை செய்து முகத்தை சீரழிப்பதை விட இயற்கை பொருட்களை பயன்படுத்தி அழகு பெறுவது தான் உண்மையான அழகாகும்...

இயற்கை பொருட்களாலும் கெமிக்கல் பொருட்களை விட கூடுதல் அழகை உடனடியாக தர முடியும்.. அதுமட்டுமல்லாமல் இயற்கையான பொருட்கள் உங்களது அழகை சீரழியாமால் பாதுகாக்க வல்லது... இந்த பகுதியில் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முகத்தை எப்படி அழகுப்படுத்திக் கொள்வது என்பது பற்றி விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. கேரட் பேசியல்

1. கேரட் பேசியல்

கேரட் உங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல் உங்களது அழகை மேம்படுத்தவும் உதவுகிறது.. முதலில் ஆலிவ் ஆயிலை கொண்டு உங்களது முகத்தை மசாஜ் செய்து கொள்ளுங்கள் அதன் பின் முகத்தை கழுவி விடாமல் கேரட் சாறுடன் கடலை மாவை கலந்து முகத்திற்கு அப்ளை செய்து அரைமணி நேரம் கழித்து முகத்தில் இந்த மாஸ்க்கை மசாஜ் செய்து கழுவி வந்தால் உங்களது முகத்தில் உள்ள சுருங்கள் அனைத்தும் மறைந்து போகும்.

2. முட்டை பேசியல்

2. முட்டை பேசியல்

முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் சிறிதளவு கடலைமாவை கலந்து முகத்திற்கு பேக் போடுங்கள் இதனால் உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைவதோடு முகம் பளிச்சென்று பொலிவாக இருப்பதை காணலாம்.

3. வாழைப்பழம்

3. வாழைப்பழம்

நன்றாக பழுத்த வாழைப்பழத்தை எடுத்து பேஸ்ட் போல செய்து உங்களது முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இந்த மாஸ்க்கை 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இதனால் முகத்தில் சுருக்கங்கள் விழுவது தள்ளிப்போகும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உங்களது முகத்தை பளிச்சென்று வைக்கும்.

4. பால்

4. பால்

பாலை கொண்டு தினமும் உங்களது முகத்தை மசாஜ் செய்து வந்தால் உங்களது முகம் பொலிவடையும். மேலும் பாலுடன் கிளிசரின் கலந்து முகத்திற்கு மேல் நோக்கியவாறு மசாஜ் செய்து வந்தால் உங்களது முகம் இளமை பொலிவு பெறும்..!

5. கேரட் சாறு

5. கேரட் சாறு

கேரட் சாறுடன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளுக்கு தினமும் நன்றாக மசாஜ் செய்து வந்தால் உங்களது முகம் பொலிவடையும், கழுத்து பகுதிகளில் உள்ள அழுக்குகளும் சின்னச்சின்ன சுருக்கங்களும் சீக்கிரமாக மறைவதை நீங்கள் கண்கூடாக காணலாம்.

6. முட்டைக்கோஸ் சாறு

6. முட்டைக்கோஸ் சாறு

ஒரு டீஸ்பூன் முட்டைக்கோஸ் சாறுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் உலரவிடவும். நன்றாக உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வந்தாலும் முகச்சுருக்கம் நீங்கும்.

7. கடலை மாவு மற்றும் எலுமிச்சை

7. கடலை மாவு மற்றும் எலுமிச்சை

ஒரு டீஸ்பூன் தக்காளி சாறு, ஒரு டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, சில சொட்டுகள் எலுமிச்சை சாறு, பால் சிறிதுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவிட்டு கழுவ, மாசுமறுவற்ற முகத்துடன் உங்களது நிறமும் கூடும். சருமம் மிருதுவாக தக்காளி சாறுடன் சிறிது பீட்ரூட் சாறு எலுமிச்சை சாறு சேர்த்து தடவவும். இது நல்ல பலனை கொடுக்கும்.

8. பருக்கள் மறைய

8. பருக்கள் மறைய

முகப்பருக்கள் மறைய 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியுடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர், கற்பூர லோஷன்  டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் தண்ணீரில் கழுவி வரவும். இதனை வாரத்திற்கு இரண்டுமுறை செய்யவும்.

9. வெள்ளரிக்காய்

9. வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை மிக்ஸியில் அடித்து அதை முகத்தில் தடவி  மணி நேரம் அல்லது 1 மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். உங்களது சரும நிறம் கூடும். முகத்தில் உள்ள எண்ணெய் பசைகள் நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.

10. புதினா இலை

10. புதினா இலை

புதினா இலைச்சாறு, எலுமிச்சைச் சாறு ஆகியவைகளை வெந்நீரில் கலந்து வாரத்துகு 2 முறைகள் முகத்தில் ஆவி பிடித்தால் முகம் வசீகரமாக இருக்கும்.

11. பாலாடை

11. பாலாடை

இரவில் படுக்கும் முன்பு பாலாடையை மஞ்சள் கலந்து முகத்தில் தடவி விட்டு 1 மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் மிகவும் வனப்புடன் இருக்கும். இரவில் படுக்கும் முன் முகத்திற்கு வெண்ணெய் தடவலாம். பகலிலும் தடவலாம். ஆனால் தடவிய பிறகு வெய்யிலில் போகக்கூடாது.

12. பாசிப்பயறு மாவு

12. பாசிப்பயறு மாவு

எலுமிச்சை சாற்றில் பாசிப்பயற்றுமாவு கலந்து முகத்தில் தடவி வைத்து 1 மணி நேரம் கழித்த கழுவினால் முகம் நிறம் பெறும். முகத்தில் உள்ள ஈரப்பதம் அதிகரிக்கும். முகம் பொலிவாகவும் இருக்கும்.

13. குப்பை மேனி

13. குப்பை மேனி

குப்பை மேனி இலை, மஞ்சள், வேப்பிலை ஆகிய மூன்றையும் அரைத்து முகத்தில் தடவி வைத்து சிறிது நேரம் ஊற வைத்தபின் கழுவினால் முகத்தில் உள்ள முடி உதிர்ந்து விடும்.

14. தக்காளி சாறு

14. தக்காளி சாறு

தக்காளிச்சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் சமபங்கு எடுத்து கலந்து முகத்தில் முடி இருக்கும் இடத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்துக் கழுவினால் முடியின் நிறம் மாறி தோல் நிறத்தில் வந்துவிடும். நாளடைவில் இந்த முடியும் மறைந்துவிடும்.

15. முகத்தில் உள்ள முடிகள்

15. முகத்தில் உள்ள முடிகள்

மஞ்சள்பொடி, கடலைமாவு, பன்னீர் ஆகிய கலவையைக் குழைத்து முகத்தில் தடவி அழத்தத் தேய்க்க வேண்டும். இதுபோல் அடிக்கடி செய்து வந்தால் முகத்தில் உள்ள முடி அறவே நீங்கிவிடும்.

16. பால் மற்றும் தேன்

16. பால் மற்றும் தேன்

ஒரு தேக்கரண்டி பால், 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் நன்றாகக் கலக்கி, முகத்தில் தேய்த்து  மணி நேரம் கழித்து கழுவினால் முகப்பரு மறையும். இந்த முறையை நீங்கள் தொடந்து கடைப்பிடித்து வந்தால் உங்களது முக அழகு கூடும். நிறம் அதிகரிப்பதையும் நீங்கள் உணரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to get bright skin without makeup

How to get bright skin without makeup
Story first published: Wednesday, December 6, 2017, 19:03 [IST]
Desktop Bottom Promotion