விரைவில் பருக்கள் குணமாகனுமா? இதை ட்ரை பண்ணுங்க!!

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

பதின் பருவ தொடக்கத்தில், பூப்பெய்தும் காலகட்டத்தில் ஹார்மோன்களின் மாற்றத்தால் பருக்கள் தோன்றும். எண்ணெய் சருமமாக இருப்பின் பருக்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வந்து கொன்டே இருக்கும். பருக்கள் எப்போதும் முக அழகை கெடுக்கும் விதமாக இருப்பதால் தோன்றியவுடன் அதனை போக்குவதற்கு பல முறையை கையாள தொடங்குகின்றனர் இளம் வயதினர்.

பருக்களை போக்குவதற்கு இயற்கை தீர்வுகள் உள்ளன. ஆனால் எந்த ஒரு தீர்வையும் தொடர்ந்து பயன்படுத்தினால் தான் இவை கட்டுப்படும். அறிகுறிகளை பார்த்தபின் அவற்றை போக்க முயற்சித்தால் அவற்றை முற்றிலும் போக்க முடியாது. ஆனால் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்.

How to deal acne with home remedies

ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் சுற்றி பரு அல்லது கட்டி இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இதன்மூலம் பருக்கள் மறையாது. வீக்கமும், சிவப்பு நிறமும் சற்று குறையலாம். அடுத்த நாள் பெரிய மாற்றம் எதுவும் நடக்காது.

கற்றாழையை கூட பயன்படுத்தலாம். உடல் சூட்டினால் ஏற்பட்ட பரு அல்லது கட்டியாக இருந்தால் கற்றாழையின் குளிர்ச்சியால் சற்று அழுத்தம் குறைந்து காணப்படலாம்.

How to deal acne with home remedies

மேலே கூறிய தீர்வுகள் ஒன்று அல்லது இரண்டு பருக்கள் ஒரே நேரத்தில் எழும்பும்போது பயன்படுத்தலாம். பருக்கள் பல எண்ணிக்கையில் தோன்றும்போது இவை உடனடியாக பலன் தராது. உடனடி பலனுக்கு மருத்துவரை தான் அணுக வேண்டும்.

வீட்டு வைத்தியங்களின் பலன்:

வீட்டு வைத்தியங்களை செய்து பார்க்கலாம். ஆனால் ஒரே நாளில் இவற்றால் பலன் கிடைக்காது . டூத்பேஸ்ட், எலுமிச்சை சாறு போன்றவை பருக்களை மேலும் தீவிரமடைய செய்யும். டூத்பேஸ்ட் சருமத்திற்கு எரிச்சலை கொடுக்கும். எலுமிச்சை சருமத்திற்கு அரிப்பை கொடுக்கும்.

How to deal acne with home remedies

பருக்கள் உடைவது:

பருக்கள் தோன்றுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், சரியான முறையில் முகத்தை பராமரிக்காமல் இருப்பது, சருமம் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது, சருமத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பதால் பருக்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. மாசு மற்றும் தூசுகளினால் உண்டாகும் பருக்களுக்கு சரும தூய்மை தான் சிறந்த தீர்வு. வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வருவது மூலமாகவும் பருக்களை குறைக்கலாம்.

English summary

How to deal acne with home remedies

Home remedies to deal acne
Story first published: Tuesday, September 19, 2017, 17:07 [IST]