For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் வறண்ட பாதங்களை மென்மையாக்க வீட்டு வைத்தியங்கள்!!

வறண்ட பாதங்களை மென்மையாக்க வீட்டிலிருந்தே எப்படி வழிமுறைகளை கையாளலாம் என இந்த கட்டுரையில் காணலாம்.

By Ambika Saravanan
|

உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது நமது பாதங்கள். ஒரு மனிதன் வாழ் நாளில் 150,000 மைல்களை விட அதிகமாக நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது 5 முறை உலகம் முழுதும் சுற்றுவதற்கு சமம்.

இந்த அளவுக்கு ஆற்றல் புரியும் நமது பாதங்களை நாம் காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்னை வறண்ட பாதங்கள். இதற்கான தீர்வை இப்போது பார்க்கலாம்.

How to care your dry feet using home remedies

பொதுவாக உடலில் நீர்சத்து அதிகம் இல்லாத போது சருமம் வறண்டு, வெடிப்புகள் ஏற்பட்டு கடினமாக மாறும். இதற்கு வெப்ப நிலையும் காரணமாக இருக்கலாம். அடிக்கடி சருமத்தை கடினமான சோப்கள் பயன்படுத்தி கழுவி கொன்டே இருப்பதாலும் இது ஏற்படலாம் .

சோரியாசிஸ் , மரபு வழி தோல் அழற்சி மற்றும் நீரிழிவு, கல்லீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வறண்ட சருமம் இருக்கலாம். இந்த வறண்ட சருமத்தை போக்கி மிருதுவான பாதங்களை பெற சில வழிகள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதங்களை பாதுகாக்க வேண்டும்:

பாதங்களை பாதுகாக்க வேண்டும்:

நம்மை அழகுபடுத்த பல விதமாக முயற்சி செய்கிறோம் . ஆனால் இந்த அழகு படுத்தும் முயற்சியில் முகத்திற்கு மற்றும் தலை முடிக்கு கொடுக்கும் கவனத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. பாதங்களை பாதுகாப்பதில், அதனை வறண்டு போகாமல் இருக்க செய்வதே ஒரு எளிய மற்றும் முதல் வழி .

குளிக்கும் நேரத்தை குறையுங்கள்:

குளிக்கும் நேரத்தை குறையுங்கள்:

5-10 நிமிடங்களுக்கு மேல் குளிக்க வேண்டாம். உங்கள் பாதங்களை அதற்கு மேல் நீரில் ஊற வைக்க வேண்டாம். நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும் போது பாதத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் மறைந்து தோல் வறண்டு விடும்.

சூடான நீரில் குளிக்கும் பழக்கும் வேண்டாம். வெது வெதுப்பான நீரில் குளிப்பதை வழக்கமாக கொள்வோம். சூடான நீர் சருமத்தில் உள்ள அதிகமான எண்ணெயை உரித்து எடுத்து விடும். மேலும் சருமம் கடினமாக மாறும்.

 ஈரப்பதத்தை செலுத்துங்கள்:

ஈரப்பதத்தை செலுத்துங்கள்:

பாதங்களை கழுவியவுடன், காய வைத்து, சிறிதளவு மாய்ஸ்சரைசர் தடவுங்கள். இதனால் கால் பாதங்களுக்கு ஈரப்பதம் கிடைக்கப்படுகிறது. விரல்களுக்கு இடையில் இதனை தடவ வேண்டாம். இவை பாக்டீரியாக்கள் நுழைய வழி வகுக்கும்.

பாதங்கள் வறண்டு காணப்படும்போது அல்லது பாதங்களுக்கு அதிக அழுத்தம்கொடுக்கும் போது வெடிப்புகள் ஏற்படலாம். இதனை தடுக்க, குளிக்கும் போது படிக கல்லை கொண்டு பாதங்களை உரசலாம். இதனால் பாதங்களில் படிந்துள்ள இறந்த செல்கள் மறைந்து விடும். குளித்த பிறகு பாதங்களுக்கு மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும். மழை மற்றும் குளிர் காலங்களில் பாதங்கள் மேலும் வறண்டு காணப்படும். இதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அடிக்கடி மாய்ஸ்சரைசர் தடவலாம்.

வறட்சியால் பாதத்தில் அரிப்பு ஏற்படலாம். இதனை சொரிவதால் தோலில் வெடிப்பு ஏற்படும். வெடிப்பு, நோய் தொற்றுக்கு வழி வகுக்கும். எண்ணெய் அல்லது கிரீம்களை தடவி கொன்டே இருப்பது அரிப்பை கட்டுப்படுத்தும்.

சருமத்தில் இயற்கையாகவே எண்ணெய் தன்மை இருக்கும். இது சருமத்திற்கு மென்மையை தரும். சருமம் நீர்ச்சத்தை இழக்காமல் இருப்பதற்கு , சிபம் என்ற ஒரு எண்ணெய் பொருளை உடல் உற்பத்திசெய்யும். இது ஒரு பாதுகாப்பு பகுதி போல் செயல்படும். ஆனால் நாம் பயன்படுத்தும் கடினமான சோப்கள் மற்றும் குளிர் காலத்தில் நம் மீது படும் காற்று போன்றவற்றால் இந்த பாதுகாப்பு பகுதி பலமிழந்து சருமம் நீர்ச்சத்தை இழக்கிறது. இதனால் சருமம் எரிச்சலடைகிறது. ஆகவே சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பது அவசியம்.

 பெட்ரோலியம் ஜெல்லி:

பெட்ரோலியம் ஜெல்லி:

பெட்ரோலியம் ஜெல்லி, சருமத்திற்கு நல்ல ஒரு பாதுகாப்பு கவசம். இது ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. பாதங்களை கழுவிய பின் சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியை தடவவும். இது ஈர்ப்பதை உள்ளே செலுத்தி பாதங்களுக்கு நீர்ச்சத்தை தருகிறது. அதில் இருக்கும் வழவழப்பான தன்மையால் ஈரப்பதம் நீடித்து இருக்கும்.

நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்:

நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்:

நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் பாதங்களுக்கு இயற்கையான எண்ணெய் பதத்தையும் ,மென்மையும் தருகின்றன . நல்லெண்ணெயில் லினோலிக் அமிலம் அதிகமாக இருக்கும். அதனால் உடலில் ஏற்படும் காயங்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.

தேங்காய் எண்ணெய்யில் லாரிக் அமிலம் என்னும் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இது ஈரப்பதத்தை மட்டும் தராமல் சிறந்த ஆன்டிசெப்டிக்காக இருக்கிறது. சருமம் வறண்டு இருக்கும் போது அரிப்பு ஏற்படும்.

இந்த அரிப்பினால் ஏற்படும் தொற்றில் இருந்து இந்த எண்ணெய் உடலை பாதுகாக்கும். தேங்காய் எண்ணெய்யை தொடர்ந்து 2 வாரங்கள் கால்களில் தடவும் போது சருமத்தில் இயற்கை எண்ணெய்யின் அளவு அதிகரித்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தேன்:

தேன்:

தேன் சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. பாக்டீரியா , பூஞ்சை போன்றவற்றை எதிர்த்து சருமத்தை தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. ஆகையால் பாதங்கள் வறண்டு காணப்படும்போது சிறிதளவு தேனை பாதங்களில் தடவுவதால் சிறந்த நன்மை கிடைக்கும்.

அவகேடோ:

அவகேடோ:

அவகேடோவில் அதிகமான அளவு கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. ஆகையால் இது ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர் . அவகேடோவை உங்கள் பாதங்களில் தேய்த்து 10-15 நிமிடம் கழித்து கழுவதால் பளிச்சென்ற பாதத்தை பெறலாம்.

பாதங்களை மென்மையாக்கி அழகுடன் இருக்க மேலே கூறிய முறைகளை பின்பற்றுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to care your dry feet using home remedies

How to care your dry feet using home remedies
Desktop Bottom Promotion