புளியை கொண்டு தங்க நிறமான சருமத்தை பெறுவது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

முகத்திற்கு பயன்படுத்த ஏற்ற பொருட்களில் நமது வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புளியும் ஒன்றாகும். ஆனால் இதனை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. புளியை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். இதனை பயன்படுத்தி முகத்திற்கு பொலிவையும், புத்துணர்ச்சியையும் ஊட்டலாம். முகத்தில் வடுக்கள், தோல் திட்டுக்களால் அவதிப்படுபவர்களுக்கு புளி சிறந்த பலனை கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகப்பொலிவிற்கு

முகப்பொலிவிற்கு

தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். அந்த தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

பேஷியல்

பேஷியல்

புளியை கொண்டு முகத்திற்கு பேஷியல் செய்யலாம். புளியை சிறிது அரைத்து, அதனுடன் பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவ வேண்டும். நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால் முகம் பளிச்சென்று காட்சி தரும். வடுக்களும் மறைய தொடங்கும்.

இறந்த செல்களை நீக்க

இறந்த செல்களை நீக்க

இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு பளிச் தோற்றம் தருவதிலும் புளியின் பங்களிப்பு அதிகம். புளியுடன் பால் கலந்து மென்மையான துணியால் முகத்தை தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வறட்சியை போக்க

வறட்சியை போக்க

புளியை ரோஸ் வாட்டரில் கலந்து ஸ்பிரேயாகவும் பயன்படுத்தலாம். அதனை கடுங்குளிர் மற்றும் கோடை காலங்களில் பயன்படுத்தி வருவது சரும வறட்சியை போக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்.

கருவளையம்

கருவளையம்

கண்களுக்கு அடியில் படரும் கருவளையங்களை போக்கவும் புளியை பயன்படுத்தலாம். புளி, பால், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து குழைத்து கண்களுக்கு அடியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த பாலை கொண்டு கண்களை கழுவிவர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to brighten your skin using tamarind

how to brighten your skin using tamarind
Story first published: Wednesday, September 27, 2017, 12:42 [IST]