For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் ஏற்படும் தழும்புகள் மறைந்து சுத்தமான சருமம் பெறுவது எப்படி?

முகத்தில் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கான வழிகளை இந்த கட்டுரையில் காணலாம்.

By Ambika Saravanan
|

முகத்தில் எதாவது சர்ஜெரி செய்யும் போது அல்லது விபத்துகள் மூலம் காயங்கள் ஏற்படும் போது, அவை ஆறியபின் வடுக்களாக அல்லது வெட்டுகளாக தோற்றமளிக்கும்.

பருக்களை கிள்ளி விடுவதாலும், இந்த வடுக்கள் உண்டாகலாம். காலப் போக்கில் சில வடுக்கள் மறைந்து விடும். ஆனால் இவற்றை உடனடியாக போக்குவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உண்டு. இவற்றை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

Home remedies to get rid of blemishes and scars

வீட்டு வைத்தியங்கள் பெரும்பாலும் பாதுகாப்பானவை மற்றும் சிறந்த தீர்வுகள் தரக் கூடியவை. முயன்று பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 டிப்ஸ்- 1

டிப்ஸ்- 1

4 பாதாம் கொட்டைகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் அதன் தோலை உரித்து நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கவும். அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து வடுக்களின் மீது தடவவும். பாதாம் கொட்டைகளை சாப்பிடுவதால் சருமம் பொலிவாகும்.

இதில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சருமத்திற்கு ஊட்டச்சத்தை தருகிறது. ஆலிவ் ஆயிலை வடுக்களின் மீது மெதுவாக தடவி மசாஜ் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், வடுக்கள் அல்லது வெட்டுக்கள் மறைந்து விடு

டிப்ஸ்- 2 :

டிப்ஸ்- 2 :

முள்ளங்கி சாறுடன் சிறிது கடலை மாவு மற்றும் மோர் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனை செய்வதால் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும். வடுக்கள் உள்ள இடத்தில் சிறிது தேனை வைத்து அதன் மேல் பேண்ட்எய்ட் போட்டு விடவும். இதனால் முகத்தில் பருக்களால் ஏற்பட்ட கருங்கரைகள் உடனடியாக விலகும்.

டிப்ஸ் -3 :

டிப்ஸ் -3 :

பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் மாஸ்க் போல போட வேண்டும். 15 நிமிடத்திற்கு பிறகு தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்வதால் முகம் பொலிவடையும். முகத்தில் உள்ள வெட்டுக்கள் மற்றும் பருக்கள் மறையும் . மோரை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால் வடுக்கள் மறையும்.

 டிப்ஸ்- 4 :

டிப்ஸ்- 4 :

ஒரு மாதம் தொடர்ந்து தேன் கலந்து கேரட் ஜூஸ் பருகினால், முகம் தெளிவாகும். எல்லா வித அழுக்குகளும் முகத்தில் இருந்து மறைந்து முக வசீகரம் அதிகரிக்கும்.

தக்காளியை தோல் உரித்து மசித்து முகத்தில் தடவி ½ மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மறையும். வடுக்கள் தோன்றாது.

ஆரஞ்சு தோல் பவுடர் ½ டேபிள்ஸ்பூன், முல்தானிமிட்டி ½ டேபிள்ஸ்பூன் மற்றும் புதினா பேஸ்ட் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இதனை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

டிப்ஸ் - 5 :

டிப்ஸ் - 5 :

  • உருளைக்கிழங்கு ஜூஸை முகத்தில் தடவுவதால் முகத்தில் உள்ள களங்கங்கள் மறையும். இதனுடன் முல்தானிமிட்டியும் சேர்த்து தடவலாம்.
  • காய்ந்த ஆரஞ்சு பழ தோல் பவுடரை தயிருடன் சேர்த்து பேக் போல போடலாம். இதனால் சில தினங்களில் முகத்தில் உள்ள வடுக்கள் மறையும்.
  • கற்றாழை ஜெல் அல்லது க்ரீம் பயன்படுத்துவதால் , முகத்தில் பருக்களால் ஏற்படும் ஓட்டைகள் குறையும். சருமம் அழகாகும்.
  • எலுமிச்சை சாறை முகத்தில் வடுக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் வடுக்கள் மறையும்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home remedies to get rid of blemishes and scars

Home remedies to get rid of blemishes and scars
Story first published: Thursday, September 14, 2017, 10:55 [IST]
Desktop Bottom Promotion