சீக்கிரம் வெள்ளையாக ஆசையா? அப்ப இந்த க்ரீன் டீ ஃபேஸ் பேக்கைப் போடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

க்ரீன் டீ உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தையும், அழகையும் அதிகரிக்க உதவும். இதற்கு க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன்கள் போன்றவை தான் முக்கிய காரணம். இவைகள் தான் ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது.

Green Tea Face Masks To Try At Home For Fair Skin

அதற்கு இந்த க்ரீன் டீயை தினமும் குடிப்பதுடன், அன்றாடம் முகத்திற்கு பயன்படுத்தியும் வர வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு மாசில்லாத அழகிய மற்றும் வெள்ளையான சருமம் வேண்டுமெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு க்ரீன் டீயைக் கொண்டு ஃபேஸ் பேக் தயாரித்து முகத்திற்குப் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரீன் டீ மற்றும் அரிசி மாவு மாஸ்க்

க்ரீன் டீ மற்றும் அரிசி மாவு மாஸ்க்

இந்த மாஸ்க் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க உதவும். அதற்கு 2 ஸ்பூன் அரிசி மாவுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் க்ரீன் டீ சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

க்ரீன் டீ மற்றும் மில்க் க்ரீம் மாஸ்க்

க்ரீன் டீ மற்றும் மில்க் க்ரீம் மாஸ்க்

1/2 கப் மில்க் க்ரீம்மை எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது க்ரீன் டீ சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதோடு 1 ஸ்பூன் சர்க்கரை பவுடர் மற்றும் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.

க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை மாஸ்க்

க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை மாஸ்க்

க்ரீன் டீயுடன் சிறிது எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்குவதோடு, முதுமைத் தோற்றமும் தடுக்கப்படும்.

க்ரீன் டீ மற்றும் தேன் மாஸ்க்

க்ரீன் டீ மற்றும் தேன் மாஸ்க்

சிறிது க்ரீன் டீயுடன், தேன் சேர்த்து கலந்து, அத்துடன் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த மாஸ்க் வறட்சியான சருமத்தினருக்கு மிகவும் நல்லது. இந்த மாஸ்க்கை அதிக வறட்சியான சருமம் கொண்டவர்கள், தினமும் 2 முறை பயன்படுத்தினால், சருமத்தில் ஈரப்பசை தக்கவைக்கப்படும்.

க்ரீன் டீ மற்றும் கற்றாழை மாஸ்க்

க்ரீன் டீ மற்றும் கற்றாழை மாஸ்க்

கற்றாழை ஜெல்லுடன் க்ரீன் டீ, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சரும பொலிவு அதிகரிக்கும்.

க்ரீன் டீ மற்றும் ஓட்ஸ் மாஸ்க்

க்ரீன் டீ மற்றும் ஓட்ஸ் மாஸ்க்

1/2 கப் ஓட்ஸ் பொடியுடன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் ஜொஜோபா ஆயில் மற்றும் க்ரீன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, இறந்த செல்களும் நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.

க்ரீன் டீ மற்றும் முட்டை வெள்ளைக்கரு மாஸ்க்

க்ரீன் டீ மற்றும் முட்டை வெள்ளைக்கரு மாஸ்க்

முகத்தில் பருக்கள் அதிகம் இருப்பவர்களுக்கு இந்த மாஸ்க் சிறந்ததாக இருக்கும். அதற்கு ஒரு முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது க்ரீன் டீ, எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

க்ரீன் டீ மற்றும் சர்க்கரை மாஸ்க்

க்ரீன் டீ மற்றும் சர்க்கரை மாஸ்க்

1 ஸ்பூன் சர்க்கரை, 2 ஸ்பூன் எப்சம் உப்பு, 1 ஸ்பூன் தேன் ஆகியவற்றுடன் சிறிது க்ரீன் டீ சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் சருமம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Green Tea Face Masks To Try At Home For Fair Skin

Did you know that you can prepare green tea face packs at home using the natural ingredients for fair skin. Read to know more.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter