Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
முகத்தில் அசிங்கமாக உள்ள ப்ரௌன் நிற புள்ளிகளைப் போக்க சரும நிபுணர் கூறும் ஓர் எளிய வழி!
இங்கு முகத்தில் அசிங்கமாக உள்ள ப்ரௌன் நிற புள்ளிகளைப் போக்க சரும நிபுணர் கூறும் ஓர் எளிய வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
சிலருக்கு முகத்தில் ப்ரௌன் நிற புள்ளிகள் அல்லது தழும்புகள் இருக்கும். இவை ஒருவரது சுய மரியாதையை குறைப்பதோடு, அசிங்கமான தோற்றத்தையும் கொடுக்கும். இதைப் போக்க பலரும் கடைகளில் விற்கப்படும் க்ரீம்கள், லோசன்கள் போன்றவற்றை பயன்படுத்துவார்கள்.

அதில் இருக்கும் கெமிக்கல்கள், தற்காலிக மாற்றத்துடன், சருமத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் பிரபல சரும நிபுணர் ஒருவர் முகத்தில் அசிங்கமாக உள்ள ப்ரௌன் நிற புள்ளிகளைப் போக்க ஓர் எளிய இயற்கை வழியை தனது நோயாளிகளுக்குப் பரிந்துரைத்துள்ளார்.
அந்த வழியைப் பின்பற்றிய பலரும் நல்ல மாற்றத்தைக் கண்டுள்ளனர். இங்கு அது என்ன வழியென்று கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
வெங்காயம்
ஆப்பிள் சீடர் வினிகர்

வெங்காயம்
வெங்காயம் பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்குவதோடு, சரும பாதிப்பையும் தடுக்கும். இதற்கு அதில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஹைட்ராக்ஸி அமிலம், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

செய்முறை:
முதலில் சிறிது வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அத்துடன், சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:
பின் ஒரு பஞ்சுருண்டையால் அந்த கலவையை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பின் 10-15 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும்.

எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?
இந்த முறையை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றினால், முகத்தில் உள்ள அசிங்கமான ப்ரௌன் நிற புள்ளிகள் அல்லது தழும்புகள் முழுமையாக மறைந்துவிடும். முக்கியமாக ஒரு வாரம் இதை பின்பற்றினால், 7 நாட்களில் மறைய ஆரம்பித்திருப்பதைக் காணலாம்.



Click it and Unblock the Notifications
