நெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்றுவது எப்படி?

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

இன்றைய நவ நாகரீக பெண்கள் கை விரல்களை அழகாக காட்டுவதற்கு நெய்ல் பாலிஷ் பயன்படுத்துகின்றனர். சில தினங்கள் அந்த நெய்ல் பாலிஷ் நகம் முழுவதும் இருக்கும். பின்பு சிறிதாக உதிரத் துவங்கும்.

பின்பு நெய்ல் பாலிஷ் ரிமூவர் கொண்டு நகத்தில் உரிந்த பாலிஷை அகற்றி புதிதாக போட்டுக் கொள்வார்கள் . இது நடைமுறை.

Effective ways to remove nail polish without remover

நகத்தில் இருக்கும் பாலிஷை அகற்றுவதற்கு ரிமூவர் தவிர வேறு பொருட்களும் உள்ளது. அதுவும் நம் வீட்டிலேயே .. ஆச்சர்யமாக இருக்கிறதா? வாருங்கள் அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டூத்பேஸ்ட் :

டூத்பேஸ்ட் :

சிறிதளவு டூத்பேஸ்ட் எடுத்து நகத்தில் தடவி, உங்கள் பழைய பிரஷ் கொண்டு லேசாக தேய்க்கவும். உங்கள் நகத்தில் இருக்கும் பாலிஷ் போயே போச்சு ! பேஸ்ட்டில் இருக்கும் எத்தில் அசிடேட் என்னும் வேதிப்பொருள் ரிமூவரிலும் உள்ளது.

டியோடரண்ட் :

டியோடரண்ட் :

டியோடரண்ட்டை எடுத்து நகத்தில் சிறிதளவு தெளிக்கவும். பின்பு ஒரு பஞ்சை எடுத்து நகத்தில் தேய்க்கவும். நகத்தில் உள்ள பாலிஷ் மறைய ரிமூவரை காட்டிலும் சிறிது கூடுதல் நேரம் எடுக்கும்.

சானிடைசர் :

சானிடைசர் :

கைகளை சுத்தம் செய்ய நமது பையில் எப்போதும் இருக்கும் ஒரு பொருள் சானிடைசர் . இந்த சானிடைசேரை பஞ்சில் தடவி நகத்தில் தேய்த்தால் நெயில் பாலிஷ் மறையும்.

சென்ட் :

சென்ட் :

சென்ட் எனப்படும் வாசனை திரவியத்தை பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பரில் தெளித்து நகத்தில் தேய்ப்பதால் பாலிஷ் மறையும்.

முடி ஸ்பிரே :

முடி ஸ்பிரே :

தலைக்கு போடும் ஸ்ப்ரேக்களை பயன்படுத்தி நெயில் பாலிஷை அகற்றலாம். அதில் இருக்கும் ஆல்கஹால் இதனை செய்ய உதவுகிறது.

ஆனால் இந்த ஹேர் ஸ்பிரேயை பயன்படுத்தும் போது பஞ்சால் உடனடியாக அகற்றிவிட வேண்டும். ஸ்பிரேயை தெளித்து சில நிமிடங்கள் விட்டு விட்டால் பஞ்சு நகத்தோடு ஒட்டி கொள்ளும்.

மேல் பூச்சு:

மேல் பூச்சு:

நகத்தில் பூசியிருக்கும் பாலிஷ் மேல் மறுபடியும் நெயில் பாலிஷை தடவி உடனே ஒரு பஞ்சை எடுத்து அதனை துடைக்கும் போது பழைய பாலிஷும் சேர்ந்து அழிந்து விடும்.

நாம் அனுதினம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு நகத்தில் பூசியிருக்கும் பாலிஷை அகற்ற வழி கிடைத்து விட்டது. இனிமேல் ரிமூவருக்கு பை பை ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Effective ways to remove nail polish without remover

Effective ways to remove nail polish without remover
Story first published: Tuesday, September 12, 2017, 10:17 [IST]
Subscribe Newsletter