Latest Updates
-
ராகி ரவா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 05, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளை குவிக்கப் போறாங்களாம் -
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்!
உடனடியாக சரும பிரச்சனை தீரனுமா? இன்ஸ்டன்ட் பலனை தரும் இந்த குறிப்புகள் ட்ரை பண்ணுங்க.
சருமத்திலும் கூந்தலில் பிரச்சனைகள், பாதிப்புகள் இல்லாமல் இருக்காது. அத்தகைய சமயங்களில் நீங்கள் உடனடி தீர்வு காண இந்த இயற்கை குறிப்புகளை நாடுங்கள். நிச்சயம் பலனளிக்கும்.
சருமத்திற்கு தொடர்ந்து பராமரிப்பு கொடுத்தால்தான் சருமம் இளமையாக வசீகரமாக இருக்கும். இருப்பினும் சில பொருட்கள் உடனடியாக அழகை தரும். சரும மற்றும் கூந்தல் பாதிப்புகளை போக்கும்.

க்ரீம்கள் இவ்வாறு கொடுத்தாலும் அவற்றிலுள்ள கடும் ரசாயனங்கள் பக்க விளைவுகளை தரும். இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள் எந்தவித பக்கவிளைவுகள் இல்லாமல் உங்கள் பிரச்சனைகளை போக்கும். அவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உடனடியாக பளபளக்க :
சருமம் உடனடியாக பளபளக்க, சுத்தமான க்ரீன் தேயிலை தூளுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் மென்மையாக தேயுங்கள். சருமத்துளைகளில் தங்கியிருக்கும் பல அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேறிவிடும். முகம் மின்னும்.

கன்னம் சிவப்பாக :
சிலருக்கு மட்டும் கன்னச் சதுப்புகள் சிவப்பாக இருக்கும். அது அழகை அதிகரிக்கச் செய்யும். அதற்கு மேக்கப் எல்லாம் வேண்டாம். பீட்ரூட் சாறினை கன்னத்தில் பூசுங்கள். காய்ந்தும் அழுத்தி தேய்க்காமல் கழுவவும். கன்னங்கள் ரோஜா நிறத்தில் இருக்கும்.

நரை முடியை போக்க :
நரை முடி உடனடியாக மறையாது. இருந்தாலும் எலுமிச்சை சாறு உங்கள் நரை முடியின் நிறத்தை மாற்றும் தன்மைகொண்டது. எலுமிச்சை சாறை நேரடியாக தலையில் தேய்த்து சிறிது நேரம் சூரிய வெளிச்சத்தில் இருங்கள். நரைமுடி யின் நிறம் மாறும்.

கருவளையம் மறைக்க :
கருவளையத்தோடு ஒரு விழாவிற்கு போக முடியாது. அதை மறைக்க மேக்கப் செய்யும் முன் ஆரஞ்சு நிற லிப்ஸ்டிக்கை கண்களுக்கு அடியில் லேசாக தடவுங்கள். கருவளையம் மறைந்துவிடும். வீட்டிற்கு வந்ததும் மறக்காமல் கழுவி விடுங்கள்.

செல்லுலைட் :
உடலில் குறிப்பாக தொடைகளில் மடிப்பு மடிப்பாக கொழுப்பு செல்லுலைட் உருவாகும் அவற்றை போக்க, தினமும் காபிப் பொடியை ஆலிவ் எண்ணெயுடன் கலந்து தேயுங்கள். இதனால் அவை மறையும். கூடுதலாக சருமம் பளபளக்கும்.

நுனி வெடிப்பிற்கு :
கூந்தலின் நுனி வெடித்திருந்தால் அதனை சரிப்படுத்த பெட்ரோலியம் ஜெல்லியினால் நுனியில் த்டவுங்கள். இதனால் வெடிப்புகள் மேற்கொண்டு பரவாது. முடி உதிர்தலும் தடுக்கப்படும்.



Click it and Unblock the Notifications
