For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சன் ஸ்க்ரீன் லோஷன் எப்படி நீங்களே வீட்டிலேயே தயாரிக்கலாம் தெரியுமா?

வீட்டிலேயே இருக்கும் இயற்கை பொருட்களிலிருந்து சன் ஸ்க்ரீன் லோஷன் தயாரிக்க முடியும். எந்தெந்த பொருட்கள் சூரிய வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் என பார்க்கலாம்.

By Hari Dharani
|

வீட்டிற்கு வெளியே செல்லவேண்டுமெனில் சன்ஸ்கிரீன் என்பதை தவறாமல் நாம் சருமத்தில் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான சன்ஸ்கிரீன்கள் செயற்கை வேதிப்பொருட்களையும், கனிமங்களையும் உள்ளடக்கியதென்று உங்களுக்கு தெரியுமா?

மேலும் இவை பல உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இவை அவொபென்சென், பி ஏ பி ஏ (PABA), மற்றும் பென்ஸோபெனோன் ஆகிய வேதிப்பொருட்களை கொண்டுள்ளது.

DIY Sunscreen Recipes To Protect Your Skin From The Harsh Sunlight

இந்த வேதிப்பொருட்கள் உங்கள் உடலின் ட என் ஏ விற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. டி என் ஏ வை பாதிக்கும் மரபணு மாற்றக்காரணிகளாக (mutagens) அறியப்படுகிறது.

இத்தகு காரணங்களால் வீட்டில் இயற்கையான முறையில் தயாரிக்கும் சன்ஸ்கிரீன்களே சிறந்தவர்களாக கருதப்படுகிறது, மேலும் இவை பக்கவிளைவுகள் ஏதுமின்றி சிறப்பானதாக இருக்குமென்றும் நம்பப்படுகிறது.

வெயிலில் அதிகம் சுற்றி சருமம் ரொம்ப எரியுதா? இதோ சில டிப்ஸ்...

மேலும் நீங்கள் வாங்கும் சன்ஸ்கிரீன் பொருட்களில் உள்ள நச்சுப்பொருட்கள் அல்லது நாளமில்லா சுரப்பிகள் போன்ற வேதிப்பொருட்கள் தோல் புற்றுநோய்க்கு ஆளாக்கும் வாய்ப்புகளும் உள்ளது. மேலும் உங்கள் சருமத்தின் கதிரியக்க உற்பத்தியை தடுக்கிறது.

அதனால் கடையில் வாங்கும் சன்ஸ்கிரீன்களை உபயோகிப்பதை தவிர்த்து விட்டு வீட்டிலேயே தயாரிக்கும் முறையை பின்பற்றுங்கள். இந்த கட்டுரையில் சிறந்த முறையில் வீட்டிலேயே தயாரிக்க கூடிய சன்ஸ்கிரீன்களை பட்டியலிட்டிருக்கிறோம். படித்து பார்த்து அவற்றை தயாரிக்கும் முறையை அறிந்து உங்கள் வீட்டிலேயே சிறந்த சன்ஸ்கிரீன் தயாரிப்புகளை செய்து உபயோகியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தேவையானவை :

தேவையானவை :

ஷியா பட்டர் - 1/2 கப்

ஜிங்க் ஆச்ஸைட் - 1/2 கப்

தேங்காய் எண்ணெய் - 1 கப்

மற்றும் ½ கப் வடிகட்டிய தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.

 செய்முறை :

செய்முறை :

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு ஜாரில் ஒன்றாக கலந்து கொள்ளவும், அதை நன்கு கலக்கியவுடன், குளிர்பதமான இடத்தில் வைக்கவும். இது மிகச்சிறந்த சன்ஸ்கிரீன் தயாரிப்பாக விளங்கும்.

 ஷியா (Shea) பட்டர் :

ஷியா (Shea) பட்டர் :

ஷியா (Shea) வெண்ணெய் சூரியக்கதிர்களை தடுக்கும் வல்லமை கொண்டது. இது சிறந்த மாய்ஸ்ட்ரைஸராக இருப்பதோடு அற்புதமான சன்ஸ்கிரீனாகவும் இருக்கும்.

உங்கள் உடல் முழுவதும் இதை பூசுவதால் சூரியனின் கேடுவிளைவிக்கும் புற ஊதாக்கதிர்களின் விளைவுகள் இருக்காது. நீங்களே வீட்டில் தயாரிக்கக்கூடிய சன்ஸ்கிரீன்களில் சிறப்பான ஒன்றாக திகழும் இதை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

ஜிங்க் ஆக்ஸைட்

ஜிங்க் ஆக்ஸைட்

இது மிக விரைவாக செய்யக்கூடிய சன்ஸ்கிரீன். சிட்ரஸ் எண்ணெய் உள்ளடக்கமில்லாத இயற்கையான பாடி லோஷன் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இந்த லோஷனை இரண்டு கரண்டி ஜின்க் ஆக்ஸைடோடு கலக்கவும். இது உங்கள் சருமத்தை கேடுவிளைவிக்கும் சூரிய புறஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.

தேயிலை

தேயிலை

தேயிலை மிகச்சிறந்த சூரியக்கதிர் தடுப்பானாக இருக்கிறது. இரண்டு கரண்டி தேயிலையை எடுத்து, அரை கப் தண்ணீரில் ஓரிரவு முழுவதும் ஊறவைக்கவும்.

மறுநாள் காலையில் தேயிலை தனியாகவும் தண்ணீர் தனியாகவும் பிரித்துக்கொள்ளவும். இந்த தண்ணீர் சிறந்த புறஊதாக்கதிர்களை தடுக்கும் காவலாக இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது.

மிகச்சிறந்த வீட்டில் தயாரிக்க கூடிய சன்ஸ்கிரீன் தயாரிப்புகளில் நீங்கள் எளிதில் செய்யக்கூடியது.

 கோதுமை எண்ணெய்

கோதுமை எண்ணெய்

கோதுமை எண்ணெய் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிப்பதோடு, மிகச்சிறந்த சன்ஸ்கிரீனாகவும் செயல்படுகிறது. இது இயற்கையாகவே எஸ்.பி.எப் (SPF) அளவு 20 வரை இருக்கிறது. மேலும் இது சூரியக்கதிர்களிடம் இருந்து காக்கும் லோஷனாகவும் விளங்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

DIY Sunscreen Recipes To Protect Your Skin From The Harsh Sunlight

DIY Sunscreen Recipes To Protect Your Skin From The Harsh Sunlight
Story first published: Wednesday, August 16, 2017, 10:00 [IST]
Desktop Bottom Promotion