சரும பொலிவைக் அதிகரிக்க வீட்டிலேயே எப்படி ஸ்க்ரப் தயாரிக்கலாம்?

By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

கடைகளில் வாங்கும் ஸ்க்ரப் நன்றாக இருந்தாலும் அவை தற்காலிகமாக பளபளப்பை தரும். ஆனால் அதிலுள்ள ரசாயனங்கள் உங்கள் முகத்திற்கு கேடு விளைவிக்கும்.

எனவே நீங்கள் வீட்டிலேயே இது போன்ற விஷயங்களை செய்து கொள்ளலாம்.

வீட்டில் செய்யக் கூடிய ஸ்க்ரப் பக்கவிளைவுகளைத் தராது. கூடவே குறைந்த நிமிடத்தில் செய்யலாம். நாளுக்கு நாள் உங்கள் முகத்தில் பொலிவை மட்டுமே தரும். வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

Scrubber And Mask Recipe for your beautiful skin

தேவையான பொருட்கள் :

1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடி

1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்

2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு

1 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பு மாவு

1/2 கப் தேன் அல்லது ரோஸ் வாட்டர்

1கண்ணாடி பெளல்

Scrubber And Mask Recipe for your beautiful skin

செய்முறை :

1. முதலில் உலர்ந்த ஒரு கண்ணாடி பெளலை எடுத்துக் கொள்ள வேண்டும்

2. எல்லா பவுடரையும் போட்டுக் கொள்ள வேண்டும். தேன் அல்லது ரோஸ் வாட்டரை தவிர.

3. பிறகு தேன் அல்லது ரோஸ் வாட்டரை கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன் கலக்க வேண்டும். ஸ்க்ரப் கெட்டிப் பதத்துடன் இருக்க வேண்டும். நீர்மமாக இருக்கக் கூடாது.

4. ஸ்க்ரப் ரெடியானதும் பிரஷ்யை கொண்டு உடம்பு முழுவதும் அப்ளே பண்ணி விட்டு கொஞ்சம் நேரம் உலர விட வேண்டும். நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

முறை #2 : பாடி மாஸ்க் தயாரித்தல்

பாடி மாஸ்க் தயாரிக்கும் போது சரியான பொருட்களை சரியான விகிதத்தில் எடுத்து பயன்படுத்த வேண்டும். ஏனெனில் எதாவது ஒரு பொருள் அதிக செயல்பாட்டையோ அல்லது குறைந்த செயல்பாட்டையோ காட்டி விடக் கூடாது. வீட்டிலேயே இந்த மாஸ்க் பவுடரை தயாரித்து ஒரு காற்று புகாத டப்பாக்களில் 2-3 மாதங்கள் அடைத்து வைத்து பயன்படுத்தலாம். இதை முகம் மற்றும் மேனிக்கும் பயன்படுத்தலாம்.

இப்பொழுது அதில் பயன்படும் பொருட்களின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

Scrubber And Mask Recipe for your beautiful skin

தேவையான பொருட்கள் :

1/3 கப் மைசூர் பருப்பு

1/4 கப் பச்சை பாசிப்பருப்பு

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு

1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு

5-8 பாதாம் பருப்பு

1/2 டேபிள் ஸ்பூன் சிரோங்கி

1/4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்

பால் - சிறிது

Scrubber And Mask Recipe for your beautiful skin

1. செய்முறை :

2. முதலில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் மைசூர் பருப்பு, பாசிப்பருப்பு, கடலைமாவு, அரிசி மாவு, பாதாம் பருப்பு, சிரோங்கி போன்றவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு பவுடராக அரைத்து கொள்ளவும்.

3. இதை ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து 2-3 மாதங்கள் வரை பயன்படுத்தி கொள்ளலாம்.

4. ஒரு உலர்ந்த பெளலில் இந்த பவுடரை போட்டு கொஞ்சம்(1/4அளவில்) மஞ்சள் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து கெட்டியான பேஸ்ட் ஆக்கி கொள்ளவும்.

5. இந்த பேஸ்ட்டை உடம்பில் கீழிருந்து மேல் நோக்கி தேய்க்க வேண்டும்

6. 30 நிமிடங்கள் அப்படியே உலர விட வேண்டும்

7. பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி மாய்ஸ்சரைசர் தடவிக் கொள்ளுங்கள்.

இந்த ஸ்க்ரப் மற்றும் பாடி மாஸ்க் முறையை பயன்படுத்தி உங்கள் மேனியை பள பளவென பாலிஷாக்கி அழகு பாருங்கள்.

English summary

Scrubber And Mask Recipe for your beautiful skin

Scrubber And Mask Recipe for your beautiful skin
Story first published: Wednesday, July 12, 2017, 23:00 [IST]
Subscribe Newsletter