வீட்டில் வெந்தயம் இருக்கா? அப்ப இதெல்லாம் செஞ்சு பாருங்க

Posted By:
Subscribe to Boldsky

வெந்தயம் உடல் ஆரோக்கியத்திற்கும் தலைமுடிக்கும் மட்டுமின்றி சருமத்தில் தோன்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

எளிதாக வீட்டிலேயே நம் சருமத்தை பராமரிக்க வெந்தயத்தை பயன்படுத்தலாம். நம் அழகை மெருகூட்ட அதிக செலவுகள் இன்றி வெந்தயத்தின் உதவியுடன் என்னென்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமத்துளைகள் :

சருமத்துளைகள் :

வெந்தையத்துடன் சிறிதளவு பால் சேர்த்து பேஸ்ட்டாக செய்து கொள்ளுங்கள். அதனை முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள் 15 நிமிடங்கள் கழித்து கழுவிடலாம். இப்படிச் செய்வதால், சருமத்துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும். இதனை தினமும் செய்திடலாம்.

சன் டேன் :

சன் டேன் :

வெந்தையத்தை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள் அதனை சருமத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து கழுவிடலாம். இதனால் சூரிய கதிர்களினால் ஏற்படும் சன் டேன் நீங்கிடும்.

மெருகேற்றும் வெந்தையம் :

மெருகேற்றும் வெந்தையம் :

வெந்தையத்தை வறுத்து பொடியக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவுங்கள். நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிடலாம். இதனை தினமும் செய்து வந்தால் சருமம் மெருகேறும்.

வெந்தயம் குளிர்ச்சியானது என்பதால் சுவாசப் பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

பருக்கள் :

பருக்கள் :

வெந்தயத்தூளுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வர பருக்கள் வருவது குறையும். இதனை தினமும் கூட செய்யலாம். சரும அலர்ஜி போன்ற பிரச்சனைகள் இருந்தால் ஆலோசனை பெறுங்கள்.

 வறட்சி :

வறட்சி :

வெந்தயத்தை நீரில் கொதிக்க வைத்திடுங்கள். பின்னர் அந்த நீர் ஆறியதும் முகம் மற்றும் கை கால்கள் கழுவி வாருங்கள். இதனால், சரும வறட்சி தவிர்க்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Beauty facts of fenugreek

Beauty facts of fenugreek
Story first published: Saturday, August 19, 2017, 11:01 [IST]
Subscribe Newsletter