குப்பையில் போடும் வாழைப்பழத்தோலில் இவ்வளவு நன்மைகளா?

Written By:
Subscribe to Boldsky

நமது முகம் அழகாக இருந்தால், நமக்கு ஒரு புதிய தன்னம்பிக்கை பிறக்கும். முக அழகிற்காக பல க்ரீம்களை பயன்படுத்துவதால், இதில் உள்ள இரசாயணங்கள் உங்களது முகத்தை சீரழித்துவிடும். வயதான தோற்றத்தை கொடுத்துவிடும். நீங்கள் இயற்கை பொருட்களை பயன்படுத்தினால், தீர்வு வர சற்று தாமதமானலும் கூட, கிடைக்கும் தீர்வானது நிரந்தர தீர்வாக இருக்கும்.

banana skin beauty tips

நீங்கள் வீணாக தூக்கி எரியும் வாழைப்பழத்தோலை கொண்டே உங்களது சருமத்தை மின்னச்செய்யலாம். இந்த பகுதியில் வாழைப்பழத்தோலைக் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுருக்கங்களை போக்க!

சுருக்கங்களை போக்க!

முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க வாழைப்பழத்தோலின் உட்பகுதியை நன்றாக முகத்தில் தேய்த்துக்கொண்டு அரைமணி நேரம் கழித்து, முகத்தை சுத்தமான நீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

முகப்பரு மற்றும் தழும்புகள்

முகப்பரு மற்றும் தழும்புகள்

முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் மறைய வேண்டும் என்றால், வாழைப்பழத்தோலை சிறு சிறு துண்டாக வெட்டி பருக்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து சூடான தண்ணீரில் நனைக்கப்பட்ட துணியால் முகத்திற்கு ஒத்திடம் தர வேண்டும். இதனை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், தழும்புகள் மற்றும் பருக்கள் விரைவில் குணமடையும்.

கண்களுக்கு..!

கண்களுக்கு..!

கண்களில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வீக்கங்கள் குறைய வேண்டும் என்றால், வாழைப்பழத்தோலின் உட்பகுதியில் உள்ள வெள்ளை நார்ப்பகுதியை எடுத்து கற்றாளை ஜெல் உடன் கலந்து கண்களுக்கு அடியில் அப்ளை செய்ய வேண்டும்.

பளிச்சிடும் பற்களுக்கு..!

பளிச்சிடும் பற்களுக்கு..!

பளிச்சிடும் பற்களை பெற வாழைப்பழத்தோலை தினமும் பற்களில் தேய்த்து வந்தால், பற்கள் பளிச்சிடும். இது உங்களுக்கு செலவு இல்லாததும் கூட..

வலிகளை நீக்கும்!

வலிகளை நீக்கும்!

வலிகள் உள்ள இடங்களில் வாழைப்பழத்தோலை அரைமணி நேரம் வைத்திருந்தால், வலிகள் தானாக பறந்து போகும்.

கொசுக்கடிகள்

கொசுக்கடிகள்

கொசுக்கடித்த இடங்கள் வீங்கி இருக்கும். அந்த புண்களை சரி செய்ய வாழைப்பழத்தின் தோலை நன்றாக தேய்க்க வேண்டும். இதனால் சிறிது நேரத்தில் சருமம் பழைய நிலைக்கு வந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

banana skin beauty tips

banana skin beauty tips
Story first published: Friday, August 18, 2017, 17:30 [IST]
Subscribe Newsletter