Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
முகப்பரு தழும்பை ஒரு சில நாட்களில் எப்படி மறையச் செய்யலாம்? எளிய டிப்ஸ்!!
சருமத்தில் தங்கும் முகப்பரு தழும்புகளை நீக்கும் இயற்கையான பக்கவிளைவுகளற்ற எளிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
முகப்பரு வருவதை விட வந்தபின் அது விட்டுச் செல்லும் தழும்புகள் முக அழகையே பாழ்ப்படுத்தும். தழும்புகள் வேறு எளிதில் போகாது. முகபப்ருக்களை வராமல் தடுக்க நினைப்பதை போல் முகப்பரு தழும்பை உடனடியாக மறைய நீங்கள் முயற்சி செய்தால் உடனடியாக மறைந்துவிடும்.
உங்களுக்கான எளிய விரைவில் குணம்டையக் கூடிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

டிப்ஸ் -1
முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளி யைப்போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப் பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின்
மேல் போட்டு வாருங்கள்.

டிப்ஸ்-2
சந்தனம் - 1 ஸ்பூன்
பாதாம் பருப்பு - மூன்று (நீரில்ஊறவைத்தது)
தயிர் - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

டிப்ஸ்-2
இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதிகளில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு பெறும்.

டிப்ஸ்-3
முகப்பரு என்றில்லாமல் சருமத்தில் காய்ங்களால் உண்டாகும் தழும்பை போக்குவது சற்று கடினம் . அவ்வாறு உருவாகும் தழும்புகள் மறைய, காய்ந்த அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்துகொள்ளுங்கள்.
இதனுடன் தேங்காய்எண்ணைய் கலந்து, இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறையும்.

டிப்ஸ்-4 :
கருவேப்பிலை - ஒரு கை பிடி
கசகசா -1 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் - சிறிய அளவு
மேலே சொன்னவற்றை அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால் தழும்பு மறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications