For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஒரு மூலிகை நீராவி முகப்பருக்களை மாயமாக மறைய வைத்திடும்!!

முகப்பருக்களை மாயமாக மறைய வைக்க உதவும் நீராவி ஃபேஷியல் பற்றிய உபயோகமான குறிப்பு இந்த கட்டுரையில் காணலாம்.

By Ambika Saravanan
|

வெயில் காலத்தில் சருமதில் பல வித எரிச்சல் தோன்றுகிறது. கடுமையான வெயிலின் தாக்கம், புகை, தூசு, மாசு போன்றவை முகத்தில் படர்ந்து, முகத்திற்கு சோர்வை அளிக்கின்றன.

அழகு நிலையத்திற்கு சென்று முக அழகை மீட்டெடுக்காமல் வீட்டிலேயே இருந்து உங்கள் சருமத்தை மீண்டும் பொலிவடைய செய்யலாம். பருக்கள் மற்றும் சருமத்தின் எண்ணெய் பசையை போக்குவதற்கான வழிகளை இப்போது பார்ப்போம்.

Amazing steam facial for pimples and oily skin

நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறையை இப்போது பார்ப்போம்

நீராவி பேஷியல் முற்றிலும் இயற்கையானது. எளிதாக வீட்டிலேயே செய்ய கூடியது. ஆனால் இந்த முறையை அடிக்கடி பயன்படுத்தும்போது சரும சேதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிகமான பருக்கள் இருக்கும்போது வாரத்திற்கு 2 முறை இதனை மேற்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள்

லவங்க பட்டை

க்ரீ டீ

தண்ணீர்

செய்முறை:

செய்முறை:

க்ளென்சர் பயன்படுத்தி முகத்தை அழுக்கில்லாமல் கழுவி கொள்ளவும்.

1 லிட்டர் தண்ணீர் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.

கொதிக்கும் நீரில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 3 அல்லது 4 லவங்க பட்டை , 1 ஸ்பூன் க்ரீ டீ ஆகியவற்றை போடவும்.

பிறகு அடுப்பை அணைக்கவும். ஒரு ஸ்பூனால் அந்த நீரை நன்றாக கலக்கவும். கொதிக்கும் நீர் நல்ல மஞ்சள் நிறத்தில் தோன்றும்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

ஒரு கனமான போர்வை அல்லது துண்டு எடுத்து உங்களை முழுதும் போர்த்தி கொள்ளவும். இப்போது அந்த நீரில் இருந்து வரும் ஆவியை நீங்கள் நுகர தொடங்கலாம். தண்ணீர் மிக அதிகமாக கொதிக்க கூடாது. அது சருமடத்தை சேதமடைய செய்யும். ஓரளவு ஆவி வரும் அளவுக்கு கொதிக்க வைப்பது நலம்.

சென்சிடிவ் சருமமாக இருந்தால் 8-10 நிமிடங்கள் ஆவி பிடிப்பது நலம். எண்ணெய் சருமமாக இருக்கும்போது 20 நிமிடங்கள் செய்யலாம். கண்களை மூடிக்கொண்டு ஆவியை முகத்தில் நன்றாக எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிக சூடு அசௌகரியத்தை ஏற்படுத்தினால் சற்று போர்வையை விலக்கி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். . முடிந்த அளவு ஆவியை எடுத்துக்கொண்டு, போர்வையை விலக்கி முகத்தை காய விடவும். பின்பு டோனர் அல்லது மாய்ஸ்ச்சரைசேர் பயன்படுத்தலாம்.

கிரீன்டீ :

கிரீன்டீ :

க்ரீன் டீ சருமத்திற்கு பல நன்மைகளை செய்கிறது. மென்மையான , சுத்தமான பொலிவான சருமத்தை தருவது இதன் முக்கிய தன்மையாகும். சூரிய ஓளியால் ஏற்படும் சேதத்தை தவிர்த்து வீக்கத்தை தடுக்கிறது. அதிக அளவு பாலிபீனால்கள் க்ரீன் டீயில் இருப்பதால் வயது முதிர்வை தடுக்கிறது. சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.

மஞ்சள் தூள் :

மஞ்சள் தூள் :

மஞ்சளில் இருக்கு அதிக அளவு சல்பர் ஆன்டிபயாடிக் போல் செயல்பட்டு சரும தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது. பருக்கள் மறைவதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

லவங்க பட்டை:

லவங்க பட்டை:

லவங்க பட்ட இயற்கையான சரும நிவாரணி. சருமத்தை புதுப்பிக்க உதவும் ஒரு பொருள். சருமத்தின் துளைகளை திறந்து சருமத்துக்குள் ஊடுருவி சருமத்தை புதுபிக்க உதவுகிறது . இதனுடன் சேர்ந்த மூலப்பொருட்கள் சருமத்தில் நுழைந்து வேலை புரிய உதவுகிறது.

இந்த எளிய முறை நீராவி பேஷியலை செய்வதன் மூலம் பருக்கள் குறைந்து, எண்ணெய் பசை சருமம் பொலிவாக காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing steam facial for pimples and oily skin

Amazing steam facial for pimples and oily skin
Story first published: Monday, October 9, 2017, 11:31 [IST]
Desktop Bottom Promotion