இந்த சூப்பர் க்ளென்சர் யூஸ் பண்ணினா உங்க முகத்துல என்ன மேஜிக் நடக்கும்னு தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

கடையில காஸ்ட்லியா க்ளென்ஸர் வாங்கறது பெரிய விஷயமில்ல. அதெல்லாம் நிஜமாவே வொர்த்தான்னு நீங்க என்னைக்காவது நினைச்சிருக்கீங்களா?

உங்களுக்கு வீட்டிலேயே எளிமையா ஆனா சூப்பரா க்ளென்சர் தயாரிக்கும் முறையை இங்கே சொல்றோம். செய்வது மிக எளிது. ஒரு பக்கவிளைவும் இருக்காது.

Amazing benefits of Milk-honey cleanser for all type of skin

பாலில் லாக்டிக் அமிலமும் தேனில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டும் இருக்கிறது. கடைகளில் வாங்கும் க்ரீம்களில் ப்ளீச்சிங்க் செய்யப்படும் மூலக்கூறுகள் இருக்கும். அதனால் சரும எளிதில் வறண்டு போய் விடும். பாலும் ப்ளீச்சிங்க் செய்யும்.

ஆனால் அதனுடன் தேன் கலப்பதால் நமது சரும ஈரப்பதம் தக்கக் வைக்கப்படுகிறது. இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை உபயோகப்படுத்திப் பாருங்க. அப்புறம் சொல்லுங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயுர்வேத க்ளென்சர் :

ஆயுர்வேத க்ளென்சர் :

தேவையானவை

பால் - கால் கப்

தேன் - 2ஸ்பூன்

உபயோகிக்கும் முறை :

உபயோகிக்கும் முறை :

இரண்டையும் கலந்து முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். 10 நிமிடம் பிறகு முகத்தை கழுவ வேண்டும். இதனால் அழுக்குகள் அகன்று, முகம் பளிச்சிடும். சுருக்கங்கள் மறைந்து முகம் ஜொலிக்கும்.

பளபளப்பான முகம் :

பளபளப்பான முகம் :

இதை தினமும் பயன்ப்டுத்தினால் முகத்தில் என்றுமில்லாத புதிதாக ஒரு பளபளப்பு தோன்றும். பால் இயற்கையான ப்ளீச்சராகும். சருமத்தில் எந்தவித பாதிப்பில்லாமல் அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்யும்.

 வறண்ட உதடுகளுக்கு :

வறண்ட உதடுகளுக்கு :

சிலருக்கு உதடுகள் ஈரப்பதமின்றி கருப்பாகி காய்ந்து போய் விடும். அவர்கள் இந்த க்ளென்சரை உதட்டிற்கு தினமும் தடவினால் நாளடைவில் உதடுகள் சிவப்பாவதை காண்பார்கள்.

தழும்புகள் :

தழும்புகள் :

முகத்தில் முகப்பரு, கரும்புள்ளி, லேசான காயம் மற்றும் இன்னபிற தழும்புகளை இந்த க்ளென்சர் மறையச் செய்துவிடும். ஆகவே இதனை உபயோகப்படுத்துவது நல்லது.

 முதுமையை தடுக்கும் :

முதுமையை தடுக்கும் :

சுருக்கங்களையும் சதை தொய்வடைவதையும், இந்த பால் க்ளென்சர் தடுக்கிறது. இளமையையாகவும், மிருதுத்தன்மையையும் கொடுப்பதால் முதுமையை தள்ளிப்போடச் செய்கிறது.

முகப்பருக்கள் :

முகப்பருக்கள் :

தொடர்ந்து இந்த க்ளென்சரை உபயோகித்து வந்தால் முகப்பருக்கள் படிப்படியாக குறைந்து வருவதை காணலாம். தேன் முகப்பருக்களின் மீது செய்லாற்றும் . பாலுடன் தேன் சேரும்போது அவற்றின் செயல்கள் தீவிரமடையும். வேகமாக முக்ப்பருக்கள் மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing benefits of Milk-honey cleanser for all type of skin

Amazing benefits of Milk-honey cleanser for all type of skin
Story first published: Tuesday, May 16, 2017, 9:00 [IST]
Subscribe Newsletter