For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க மஞ்சளை எப்படி பயன்படுத்துவது?

நம் சமையலறையில் உள்ள பல பொருட்கள் சருமத்தில் இருக்கும் கருமையைப் போக்கும். அதில் மருத்துவ குணம் நிறைந்த மஞ்சளும் ஒன்று. இங்கு சில மஞ்சள் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

தற்போதைய மோசமான காலநிலையால் சருமத்தில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக வெயில் கொளுத்துவதால், பலருக்கு சருமம் கருமையாகிவிடுகிறது. இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க எத்தனையோ வழிகள் உள்ளன. மேலும் நம் சமையலறையில் உள்ள பல பொருட்களும் சருமத்தில் இருக்கும் கருமையைப் போக்கும்.

Turmeric Face Pack Recipes For Festive Ready Skin!

அதில் ஒன்று தான் மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள். இந்த மஞ்சள் பல்வேறு சரும பராமரிப்பு பொருட்களிலும் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வளவு முக்கியமான பொருளை கண்ட க்ரீம்களுடன் சேர்த்து பயன்படுத்துவதற்கு பதிலாக, நேரடியாக மஞ்சளை ஒருசில பொருட்களுடன் சேர்த்து ஃபேஸ் மாஸ்க் போட்டு வருவது நல்ல பலனைத் தரும்.

சரி, இப்போது சருமத்தில் இருக்கும் கருமையைப் போக்க உதவும் சில மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்குகள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதாம் மற்றும் மஞ்சள்

பாதாம் மற்றும் மஞ்சள்

இரவில் படுக்கும் முன் 5-6 பாதாமை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, பின் அத்துடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் துடைத்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் மில்க் க்ரீம்

மஞ்சள் மற்றும் மில்க் க்ரீம்

மஞ்சள் தூள் மற்றும் மில்க் க்ரீமை சரிசம அளவில் ஒரு பௌலில் எடுத்து கலந்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள், ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம்

மஞ்சள், ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம்

2 டீஸ்பூன் மஞ்சள் மற்றும் சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, வேண்டுமானால் அத்துடன் சிறிது பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள், எலுமிச்சை சாறு மற்றும் முட்டை வெள்ளைக்கரு

மஞ்சள், எலுமிச்சை சாறு மற்றும் முட்டை வெள்ளைக்கரு

1 முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகம், கை, கால், கழுத்துப் பகுதிகளில் தடவி 30 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் கடலை மாவு

மஞ்சள் மற்றும் கடலை மாவு

மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவை சரிசம அளவில் எடுத்து, அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் முல்தானி மெட்டி

மஞ்சள் மற்றும் முல்தானி மெட்டி

2 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன் 3 டீஸ்பூன் முல்தானி மெட்டியுடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் தயிர்

மஞ்சள் மற்றும் தயிர்

தயிருடன் மஞ்சள் தூள் கலந்து, முகம், கை, கால், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்து, பிறகு கழுவ, கருமைகள் நீங்கி, சருமம் வறட்சியின்றி பொலிவோடு இருக்கும்.

தயிர், மஞ்சள் மற்றும் பால்

தயிர், மஞ்சள் மற்றும் பால்

தயிர் மற்றும் பாலை ஒன்றாக நன்கு கலந்து, அத்துடன் மஞ்சள் தூள் கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை, மஞ்சள் மற்றும் தயிர்

கற்றாழை, மஞ்சள் மற்றும் தயிர்

2 ஸ்பூன் தயிருடன், 1 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகம், கை, கால், கழுத்துப் பகுதிகளில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள், தேன் மற்றும் புதினா

மஞ்சள், தேன் மற்றும் புதினா

1 ஸ்பூன் தேனுடன் 1 ஸ்பூன் காய்ந்த புதினா இலைகள் மற்றும் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் பொலிவு அதிகரித்து, அழகாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Turmeric Face Pack Recipes For Festive Ready Skin!

Listed in this article are turmeric face mask recipes. For flawless clear skin try homemade turmeric mask.
Story first published: Monday, October 24, 2016, 12:12 [IST]
Desktop Bottom Promotion