ஆண்களே! உங்கள் முகத்தைக் கருப்பாக காட்டும் அழுக்கைப் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

தற்போது ஆண்கள் தங்கள் அழகின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். பெரும்பாலான ஆண்களின் முகம் கருப்பாக இருப்பதற்கு, அவ்வப்போது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றாமல் இருப்பது தான். இப்படி சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகளைப் போக்க கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.

This Lemon Face Mask For Men Will Keep Dirt Off & Face Fresh, Try It!

நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு அவ்வப்போது பராமரித்து வந்தாலே போதும். இங்கு சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் ஓர் அற்புத ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை குறைந்தது வாரம் ஒருமுறை ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் மேற்கொண்டு வந்தால், முகம் பிரகாசமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெப் #1

ஸ்டெப் #1

ஒரு கப் நீரை கொதிக்க வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ இலைகளைப் போட்டு, தீயை குறைத்து 5 நிமிடம் மீண்டும் கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

ஸ்டெப் #2

ஸ்டெப் #2

நன்கு கனிந்த தக்காளியை அரைத்து, பேஸ்ட் செய்து க்ரீன் டீயுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #3

ஸ்டெப் #3

பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #4

ஸ்டெப் #4

பிறகு அதில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #5

ஸ்டெப் #5

தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவும் முன், சிறிது நேரம் ஆவி பிடிக்க வேண்டும். இதனால் சருமத் துளைகள் விரிவடையும்.

ஸ்டெப் #6

ஸ்டெப் #6

பிறகு தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

ஸ்டெப் #7

ஸ்டெப் #7

முகத்தில் தடவிய மாஸ்க் காய்ந்த பின், முகத்தில் சிறிது நீரைத் தெளித்து, கையால் மென்மையாக 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி விட்டு, குளிர்ந்த நீரால் இறுதியில் முகத்தைக் கழுவ வேண்டும்.

ஸ்டெப் #8

ஸ்டெப் #8

அடுத்து துணியால் முகத்தைத் துடைத்துவிட்டு, சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்சுரைசரை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Lemon Face Mask For Men Will Keep Dirt Off & Face Fresh, Try It!

Remove skin impurities and brighten your skin with this lemon face mask for men. To remove dirt residue from skin, try this skin-clearing face pack for men.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter