Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
மார்பக புற்று நோயின் அறிகுறிகள் என்ன?
சமீப காலங்களில் அதிகமாக தாக்கும் புற்று நோய், இரைப்பை புற்று நோய், மார்பகப் புற்று நோய், மற்றும் மலக் குடல் புற்று நோய்.
இவற்றில் இரைப்பை மற்றும் மலக் குடல் புற்று நோய் வருவதற்கு காரணம் நாள்பட்ட புண்கள், உண்ணும் தவறான உணவுப்பழக்கம் மற்றும் மது அருந்துதல் ஆகியற்றை சொல்லலாம்.
மார்பக புற்று நோய் பெண்களின் மத்தியில் அச்சுறுத்தும் கொடிய நோய். இளம் வயதிலிருந்து வயதானவர்கள் வரை இந்த ஆபத்து உள்ளது. இதற்கு இதுதான் குறிப்பிட்ட காரணம் என்று சொல்ல இயலாது. அதிகமாய் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

தாய்மை அடைந்த பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் தருவதினால் மார்பக புற்று நோய் வருவதன் அபாயம் குறைவாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.
மார்பக புற்று நோயின் அறிகுறிகள் ;
மார்பகத்தில் சிறு சிறு உருண்டையான கட்டிகள் வருவது சாதரணமானதுதான். மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் சில நாட்கள் வந்து உடனே மறைந்து போய்விடும். ஆனால் அது தொடர்ந்து இருந்து, அந்த கட்டிகள் வளர்ந்து பெரிதாய் இருந்தால் நிச்சயம் பரிசோதிக்க வேண்டும்.
எல்லா கட்டிகளும் புற்று நோய்க்கான அறிகுறி என்றும் சொல்லிவிட முடியாது. மூன்று விதமான கட்டிகள் ஏற்படுகின்றன. அவற்றை நிறைய பரிசோதனைகளிலும், பயாப்ஸி மூலமாகவும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
மார்பகத்தில் வழக்கத்திற்கு மாறாக வலி எரிச்சல் இருந்தால் அது கவனிக்கப்பட வேண்டியவை. காம்புகளில் வலி இருந்தால் அல்லது ரத்தம் கசித்தால் அது ஆபத்தானது. இவை புற்று நோயின் அறிகுறிகள்தான். ஆனால் அது மிகவும் அரிதான அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அடுத்ததாக மார்பகத்தில் உள்ள கட்டிகளைத் தொட்டால் அவை உடனடியாக உள்ளே சென்றால் அவை சாதரண கட்டியாக இருக்கக் கூடும். அதனை தொட்டவுடன் உள்ளே போகாமல் இருந்தாலோ, அல்லது குழி விழுவது போலிருந்தாலோ, உடனடியாக பரிசோதிக்க வேண்டும்.
மார்பக புற்று நோய்க்கு ரேடியேஷன் பயன் தராது. ஆரம்ப நிலையில் மட்டும்தான் அது கை கொடுக்கும். அறுவையில் மார்பகத்தை எடுத்துவிடுவதுதான் ஒரே வழி. ஆகவே பெண்களே எப்போது எச்சரிக்கையுடன் இருங்கள். மாதம் ஒரு முறை நீங்களே சந்தேகப்படும்படி ஏதாவது கட்டி, வலி இருக்கிறதா என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
பரிசோதிக்க எளிய வழி :
சோப்பை மார்பில் தேய்த்து அதன் பின் கைவிரல்களால் தடவிப்பாருங்கள். இதில் கட்டிகள் இருந்தால் தெளிவாக தெரியும். அது தவிர்த்து, 6 மாதம் ஒருமுறை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். வந்தபின் கவலைப்படுவதை விட, வரும் முன் காப்பது உத்தமம்.



Click it and Unblock the Notifications



