என்றும் இளமையாக இருக்க பாதாம் ஃபேஸியல் செய்யுங்க!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

சுருக்கங்கள் இல்லாத மாசு மருயின்றி இருக்கும் முகத்தில் தனி அழகை கொடுக்கும். எல்லா வயதிலும் சருமம் ஒரே மாதிரி இருக்குமென்று சொல்ல முடியாது. பருவ நிலைக்கு தகுந்தாற்போல், உண்ணும் உணவிற்கு தகுந்தாற்போல், வயதிற்கு தகுந்தாற்போல் மாறிக் கொண்டிருக்கும். ஆனால் நாம் வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சருமத்தை பராம்ரித்தால் என்றும் ஒரே மாதிரியான சருமத்தை பெறலாம்.

 Natural Remedies to Exfoliate your Skin

வாழைப்பழ ஃபேஸியல் :

பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் தேன் சேர்த்து , சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் வட்ட வடிவமாக ஃபேஸியல் செய்து பாருங்கள். சருமம் சுருக்கமின்றி அழகாய் மின்னும்.

 Natural Remedies to Exfoliate your Skin

கருமையை நீங்க:

புதினா ஒரு கப் எடுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவை 2 ஸ்பூன் கலந்து முகத்தில் பேக் போட்டால் வெயிலினால் உண்டாகும் கருமை அலர்ஜி ஆகிய்வை மறைந்து நிறம் பெறும்.

 Natural Remedies to Exfoliate your Skin

கரும்புள்ளி மறைய :

வேர்கடலையை அரைத்து அதனுடன் சிறிது பால் கலந்து முகத்தில் ஃபேஸியல் மாஸ்க் போல் போடுங்கள். காய்ந்ததும் கழுவவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் கரும்புள்ளி நீங்கி விடும்.

 Natural Remedies to Exfoliate your Skin

சுருக்கம் மறைய :

தேங்காய் எண்ணெய், ரோஸ் வாட்டர் மற்றும் தயிர் சம அளவு எடுத்து மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இவ்வாறு வாரம் 3 முறை செய்தால் சுருக்கங்கள் காணாமல் போகும்.

பாதாம் ஃபேஸியல் :

பாதாம் - 5

பால் - 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

கடலை மாவு - 2 ஸ்பூன்.

 Natural Remedies to Exfoliate your Skin

பாதமை ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கடலை மாவு, எலுமிச்சை சாறு பால் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி மசாஜ் 10 நிமிடங்கள் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவவும். முகம் எவ்வித மாசுவையும், இறந்த செல்களையும் அகற்றி, பளிச்சென்று வைத்திருக்கும்.

English summary

Natural Remedies to Exfoliate your Skin

Natural Remedies to Exfoliate your Skin
Story first published: Sunday, August 21, 2016, 18:25 [IST]
Subscribe Newsletter