Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
உங்களை எப்பவும் இளமையாக வைக்க இந்த 5 அரிய மூலிகைகள் முக்கியம் !!
அழகாக இருப்பதும் வயதாவதை தள்ளிப்போடுவதும் நமது மரபில் மட்டுமல்ல, அரிய மூலிகைகளிலும் இருக்கிறது. சில மூலிகைகள் உங்கள் இளமையை தக்க வைக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.
இளமையாக இருப்பது வரப்பிராசதம். இருக்கும் இளமையை தக்க வைப்பது ஒரு கலை. முதுமையும் அழகுதான். ஆனால் முதுமை 50 வயதுக்கு பின்னேதான் வர
வேண்டும் .
இன்றைய காலங்களில் 30ம்களிலேயே வருகிறது. உணவு, ரசாயன அழகு சாதனங்கள் மன அழுத்தம் இவையெல்லாம்தான் காரணம்.

உங்களை அழகை எப்போதும் பொலிவாக வைத்திருக்கும் அரிய மூலிகைகள் நம் இந்தியாவிலேயே கிடைக்கும். அவை எவையெனத் தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

ஜின்செங்க் - (குண சிங்கி)
இது ஆசியா மற்றும் அமெரிக்காவில் பரவலாக காணப்படுகிறது. இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றும்.
சரும செல்களை புதுப்பிக்கும். இது போதாதா இள்மையாக இருக்க. அதோடு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.
பளபளப்பான சுருக்கமில்லா சருமத்தையும் , உடலுக்கு பலத்தையும் தரும்.

பில்பெர்ரி :
பில்பெர்ரியில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றன. முதுமையை தடுக்கும். புதிய செல்களை உருவாக்கும். சுர்க்கம், தழும்பை மறைய வைக்கும். சாப்பிடவும், சருமத்திற்கும் உபயோகப்படுத்தலாம்.

ஜிங்கோ :
இது ஜிங்கோ என்ற மரத்திலிருந்து பெறப்படுகிறது. இது ரத்த குழாயை சுத்தப்படுத்தும் அதிக ஆக்ஸிஜன் மூளைக்கும் கண்களுக்கும் செல்ல உதவுகிறது.
முதுமைக்கு எதிராக போராடுகிறது. சருமத்திற்கு போஷாக்கு அளித்து பொலிவாக வைப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது.

வல்லாரை :
வல்லாரை மருத்துவ குணங்கள் பெற்றவை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இது அழகிற்காகவும் உபயோகபப்டுத்தப்படுகிறது.
இது சரும செல்களை புதுப்பிக்கிறது. சுருக்கங்களை தடுக்கும். அதிக ஆக்ஸிஜனை உடலில் பெற உதவும். இளமையாக இருக்க வல்லாரை மிக முக்கியமான மூலிகை.

மஞ்சள் :
நம்ம ஊர் மஞ்சள் எளிதில் கிடைத்தாலும் சாதரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அதில் அத்தனை அரிய குணங்கள் பெற்றுள்ளன.
இது மிகச் சிறந்த முதுமையை தடுக்கும் மூலிகையாகும். சிறந்த கிருமி நாசினியாகவும் உள்ளது. சுருக்கங்களை தடுக்கும்.



Click it and Unblock the Notifications
