வட இந்தியரின் பள பள சருமத்திற்கு காரணமான கடுகு எண்ணெய் குறிப்புகள் இங்கே

Posted By: Hemalatha
Subscribe to Boldsky

நம் தென்னிந்தியாவில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது போல, வட இந்தியர்கள் பிறந்தது முதல் சருமத்திற்கு கடுகு எண்ணெய் தேய்த்துதான் குளிப்பார்கள்.

காரணம் குளிர் மிக அதிகமாக உள்ள பிரதேசங்கள் அவை. இந்த கடுகு எண்ணெய் உடலுக்கு சூட்டினை தந்து, அவர்களின் உடல் வெப்ப நிலை உயரச் செய்கிறது. மேலும் கடுகு சருமத்திற்கு நிறம் அளிக்கும்.

Magic of mustard on your skin

முகப்பரு, அழுக்கு, கரும்புள்ளி ஆகியவைகள் வராமல் பளிச்சென்று சுத்தமான சருமத்தை தரும். அதனால்தான் வட இந்தியர்களின் சருமம் அழகாய் மிருதுவாய் இருக்கிறது.

அப்படி கடுகு மற்றும் கடுகு எண்ணெய்க் கொண்டு செய்யும் சில அழகுக் குறிப்புகளை இங்கு காண்போம்.

கண்களுக்கு கீழே பை தொங்குகிறதா?

சரியான தூக்கம் இல்லாமல் அல்லது, நீர் சத்து உடலில் குறையும் போதும், வயதான பின்னும், கண்களுக்கு அடியில் பை போன்று தொங்கும். இது வயதான தோற்றத்தை தரும். இதற்கு எளிய வழியை நம் கிச்சன் மாஸ்டர் கடுகு சொல்கிறது. கேளுங்கள்.

செய்முறை :

கடுகினை பொடி செய்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கண்களுக்கு அடியில் போட்டு வந்தால், தொங்கும் சதை இறுக்கமடைந்து, கண்கள் இயல்பிற்கு வரும்.

Magic of mustard on your skin

சிவப்பழகை பெற :

கருமையான முகத்தை சிவப்பாய் ஜொலிக்க வைக்கும் மந்திரம் கிச்சன் மாஸ்டரிடம் உண்டு.

செய்முறை :

கடுகு, பயித்தம் பயிறு ஆகியவற்றை தயிர் ஊற வைத்து, ஊறிய பின் அரைத்து, முகத்தில் தடவி வந்தால் சிவந்த சருமம் பெறுவீர்கள். மாசு மருவின்றி, சுத்தமாய் இருக்கும்.

Magic of mustard on your skin

முட்டியில் கருமை, சொரசொரப்பு போக :

கை கால் முட்டிகளில் சொரசொரப்பாக , கருப்பாக இருக்கிறதா? சிறிது கடுகினை நீரில் ஊறவையுங்கள். பின் அதனை அரைத்து, முட்டிகளில் போடுங்கள். வாரம் மூன்று நாட்கள் செய்தால் போதும், மற்ற இடங்கள் போலவே முட்டியும் ஒரே நிறத்தில், சொரசொரப்பின்றி இருக்கும்.

Magic of mustard on your skin

கர்ப்ப காலத்தில் உண்டாகும் வயிற்று தழும்பினை போக்க :

பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் வரிவரியாக ஏற்பட்டு அழகை குறைக்கும். இதற்கு எளிய வழி, கடுகு எண்ணெயை வெண்ணெயுடன் சரிசமமாக கலந்து, வயிற்றில் தினமும் தடவி வந்தால், பிரசவ கால தழும்புகள் போய்விடும்.

Magic of mustard on your skin

வெடிப்புகள் மறைய :

கடுகு எண்ணெயுடன் சிறிது மஞ்சளை குழைத்து, இரவில் பாதங்களில் தடவி, சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். ஒரே வாரத்தில் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும்.

Magic of mustard on your skin

எலும்பு பலமாக :

தினமும் கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி கை கால்களில் தடவி மசாஜ் செய்தால், எலும்பு பலம் பெறும்.

தலை முடி அடர்த்தியாய் வளர :

Magic of mustard on your skin

கடுகு, துவரை, வெந்தயம் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, பொடி செய்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை சீகைக்காயுடன் கலந்து தலைமுடிக்கு உபயோகப்படுத்தினால் விரைவில் முடி உதிர்தல் குறைது அடர்த்தியான முடி வளரும்.

English summary

Magic of mustard on your skin

Magic of mustard on your skin
Story first published: Sunday, June 5, 2016, 12:23 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter