For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேக்கப்பை எளிதாக அகற்ற பாதாம் எண்ணெய் பயன்படுத்துங்க!

By Hemi Kirsh
|

பாதாம் எண்ணெய் அருமையான மாய்ஸ்ரைஸர். ஆனால் அது மேக் அப்பை எளிதில் அகற்ற உதவும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? முகத்தில் மேக் அப் மற்றும் கண்களில் போடப்படும் ஐ-லைனர்,மஸ்காரா ஆகியவை எளிதில் போகாதவை .மேக் அப் ரிமூவர் கடைகளில் கிடைக்கும். ஆனால் அவற்றில் கெமிக்கல்ஸ் கலந்திருப்பதால், அவை சருமத்தில் சீக்கிரம் தொய்வை ஏற்படுத்தும். அதோடு மேக் அப் சாதனங்களும் கெமிக்கலில் செய்வதால்,ரிமூவர் உபயோகிக்கும்போது முகம் மேலும் வறட்சியாகும்.

இயற்கையான எண்ணெய்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காதவை. அதிலும் பாதாம் எண்ணைய் இதற்கு அருமையான தீர்வாகும். வறண்ட சருமம் அல்லது சரும நோய்கள் இருப்பவர்கள் மேக்அப் அகற்ற பாதாம் எண்ணெய் உபயோகிப்பது மிகவும் நல்லது. அவை சருமத்தில் உள்ள வெடிப்புகளில் ஈரப்பதத்தை அளித்து தோலினை மிருதுவாக்குகிறது.

How to remove make up by using almond oil?

எவ்வாறு பாதாம் எண்ணெய் உபயோகிக்கலாம்?

பாதாம் எண்ணைய் தேவையான அளவு எடுத்து முகத்தில் தடவ வேண்டும். முக்கியமாக கண்களிளை சுற்றி மெதுவாக மஸாஜ் செய்ய வேண்டும் ஏனெனில் கண்களில் போடப்படும் மஸ்காரா பெரும்பாலும் நீரில் கரையாதவை. பிறகு ஒரு பஞ்சில் ரோஸ் வாட்டரை நனைத்து முகம் , கண்கள் பகுதியில் தடவ வேண்டும்.

இப்போது வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் மாசின்றி இருக்கும். பாதாம் எண்ணைய், சரும துவாரத்தில் உள்ள அழுக்கு, கெமிக்கல்ஸ் அகற்றி பளிச்சிட வைக்கும். நீரில் கழுவாமல் அப்படியே விட்டாலும், பாதாம் எண்ணைய் உங்கள் முகத்தில் மேஜிக் செய்யும். அழுக்கை சேர்க்காது, பிசுபிசுப்பை தராது .ஏனெனில் அவை மற்ற எண்ணெய்கள் போல் சருமத்திலேயே தங்கி விடாது.

எனவே டியர் லேடிஸ்!! கடைகளில் கண்ட கண்ட மேக் அப் ரிமூவரை வாங்கி சருமத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பாதாம் எண்ணெய் வாங்கி உபயோகிங்கள்.இயற்கையானது... மேலானது!

Story first published: Thursday, April 28, 2016, 16:26 [IST]
Desktop Bottom Promotion