For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்களை சுற்றியுள்ள சருமத்தை எப்படி பராமரிக்கலாம் எனத் தெரியுமா?

உங்கள் சராசரி சருமப் பாதுகாப்பு இதற்கு அதிகம் உதவாது. ஒரு மென்மையான ஆனால் சக்திவாய்ந்த பராமரிப்பு இந்த கண்ணை சுற்றிய பகுதியில் தேவைப்படுகிறது. அதனால் ஹான் உங்களுக்கு இதை நாம் விளக்கவேண்டியுள்ளது.

By Srinivasan P M
|

இந்த கண்ணைச் சுற்றிய பகுதி மற்ற பகுதியை விட மெலிதாகவும் எண்ணை சுரப்பிகள் குறைவாகவும் கொண்டதாக இருப்பதால் இங்குள்ள தசை நார்கள் உடைந்து கண்களைச் சுற்றிய பகுதி தளர்வாகவும் சோர்ந்து பொலிவின்றியும் காணப்படும்.

கண்களில் சுருக்கங்கள் உண்டாக காரணங்கள் எவை? முகத்தில் போடும் மேக்கப்பை கலைக்காமல் இருப்பது, புருவத்தை வாக்சிங் செய்வது கண்களை நல்ல கண்ணாடி போன்ற மறைப்புகள் இன்றி நேரடியாக சூரிய ஒளியில் படுமாறு செல்வது அல்லது இருப்பது கூட இந்த சூழ்நிலையை உருவாக்கும்.

how to care for skin around your eyes

கருவளையங்கள், தொய்வடைந்த இமைகள், கண் முடிவில் சுருக்கங்கள் போன்ற இந்த பாதிப்புகளிலிருந்து முடிந்த வரை கண்ணை சுற்றிய சருமத்தைப் பாதுகாக்க நாங்கள் தரும் பின்வரும் அறிவுரையை கேளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு நல்ல ‘ஐ’ க்ரீமை தேர்ந்தெடுங்கள்

ஒரு நல்ல ‘ஐ’ க்ரீமை தேர்ந்தெடுங்கள்

எமொலிஎன்ட்ஸ் மற்றும் நிகோடினிக் அமிலம் கொண்டுள்ள ஒரு ஐ கிரீமை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். இந்த அமிலங்கள் சருமத்தை குணப்படுத்தவும், கண்டிஷன் செய்யவும் ஊட்டமளிக்கவும் உதவும்.

சில துளிகள் இந்த க்ரீமை உள்ளங்கையில் எடுத்துக் கொண்டு உங்கள் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேய்த்து விடுங்கள். இது கண் இமைப் மற்றும் சரும அடுக்குகளில் தேங்கியுள்ள நீரைக் கரைத்து வீக்கத்தைக் குறைக்கும்.

வெள்ளரி :

வெள்ளரி :

வெள்ளரிக்காயில் நிறைய நீர்ச்சத்தும் ஆன்டிஆக்சிடெண்டுகளும் நிறைந்துள்ளன. இவை சருமத்தில் சேர்ந்துள்ள நச்சுக்களை களைந்து நீக்கி ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகின்றன.

வெள்ளரியில் இரு மெல்லிய துண்டுப்பட்டைகளை வெட்டி அதை பத்து நிமிடம் ஃபிரிட்ஜில் வைத்து பின்னர் அதை கண்கள் மீது வையுங்கள்.

இந்த குளுமை நீங்கும் வரை வைக்கவும். இதை தினமும் செய்வதால் கண்களைச் சுற்றியுள்ள சோர்வடைந்த சருமம் புத்துணர்வு பெறும்.

உருளைக் கிழங்கு :

உருளைக் கிழங்கு :

உருளைக் கிழங்கை தோலுரித்து துருவி அதை சாறாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஃபிரிட்ஜில் 10 நிமிடம் வைத்து பின்னர் அதை கண்ணை சுற்றித் தடவி மசாஜ் செய்யவும். பின்னர் ஒரு இருபது நிமிடம் கழித்து ஒரு ஈரமான துணி கொண்டு துடைத்தெடுக்கவும்.

 கிரீன் டீ பைகள்

கிரீன் டீ பைகள்

நீங்கள் தினமும் பயன்படுத்தும் இந்த க்ரீன் டீ பைகள் ஆண்டிஆக்சிடென்டுகள் மற்றும் டானின் நிறைந்து காணப்படுவதால் இவை உங்கள் தோய்ந்த கண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது இரண்டு உபயோகித்த டீ பாக்கெட்டுகளை (டீ பேக்) எடுத்து அதிலுள்ள அதிக நீரை வடித்து விடுங்கள். அதை ஃபிரிட்ஜில் பத்து நிமிடம் வைத்து பின்னர் அதை கண்கள் மீது வைத்திடுங்கள்.

அதன் குளுமை போகும் வரை வைத்து பின்னர் எடுத்து விடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மேலே சொன்னதையெல்லாம் முயற்சி செய்து பார்த்து உங்களிடம் இந்த கண்களை சுற்றிய சருமப் பராமரிப்பு தொடர்பான குறிப்புகள் உங்களிடம் இருந்தால் அதை நீங்கள் கீழே கமென்ட் பகுதியில் குறிப்பிடலாமே!

English summary

how to care for skin around your eyes

Useful tips to care of skin around your eyes,
Story first published: Monday, November 21, 2016, 16:03 [IST]
Desktop Bottom Promotion