முகப்பருக்களை மாயமாக்கும் இந்த ஃபேஸ் பேக் உபயோகிச்சுப் பாருங்க

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

முகப்பருக்களின் தொல்லைகள் இளம் பெண்களுக்கான பெரிய கவலையாக இருக்கும். சரும எரிச்சல், வலி, கடுகடுப்பு, என முகத்தில் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனைகள் முகப்பருக்களால் வரும்.

முகத்தை சரியாக கூட சிலரால கழுவ முடியாது. இதனால் இன்னும் அழுக்குகள் சேர்ந்து, எண்ணெய் பசை அதிகரித்து, முகம் முழுவதும் பருக்களாய், முகத்தையே பாழ்படுத்தும்.

Homemade scrub for Acne free skin

இதற்காக கண்டிப்பாக நீங்கள் கடைகளில் விற்கும் க்ரீம்களை உபயோகப்படுத்தக் கூடாது. பின்விளைவுகள் மிக அதிகமாகவே இருக்கும்.

இந்த முகப்பருக்களை முற்றிலும் குறைத்து, தழும்புகளும் வராத ஒரு ஃபேஸ் பேக் இருக்கு தெரியுமா? அவை இயற்கையானவை. பக்க விளைவுகளைத் தராதவை.

இந்த ஃபேஸ் பேக், சருமத்தில் ஆழமாக ஊடுருவி, அழுக்குகளை நீக்கிவிடும். இறந்த செல்களையும் போக்கிவிடும். முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் தொற்றுக்களையும் அழித்துவிடும். எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம்.

Homemade scrub for Acne free skin

தேவையானவை :

எலுமிச்சை சாறு- 2- 3 டீ ஸ்பூன்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

Homemade scrub for Acne free skin

எலுமிச்சை சாறில் சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் போல் குழைந்து கலக்கிக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் தேய்த்து, மெதுவாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

வாரம் 3 முறை செய்தால் சீக்கிரம் முகப்பருக்கள் குறைந்து, மென்மையான சருமத்தை பெறுவீர்கள்இனிமேலும் முகப்பருக்கள் வராது. அதனால் வரும் தழும்புகளும் மறைந்துவிடும்.

English summary

Homemade scrub for Acne free skin

Homemade scrub for Acne free skin
Story first published: Tuesday, July 5, 2016, 10:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter