விட்டமின் ஈ கேப்ஸ்யூலை எப்படி அழகிற்கு உபயோகிப்பது?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

அழகை எப்படி அதிகப்படுத்தலாம் என எண்ணாத பெண்கள் இல்லை. அழகை விட அறிவு முக்கியம்தான் இல்லையென்று சொல்லவில்லை. அறிவோடு அழகும் சேர்ந்தால் ஒரு தனித்துவம் மிளிரும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

அழகாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அழகுணர்ச்சி இயல்பானதுதான். அதனை மறைக்க தேவையில்லை. விட்டமின் ஈ ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தவை. கடைகளில் கிடைக்கும். சருமத்தில் மிக அவசியமானது ஒன்று. சருமத்தை இளமையாக வைப்பதில் பெரும் பங்கு கொண்டுள்ளது. அப்படி உங்களை வசீகரிக்க விட்டமின் ஈ கொண்டு எப்படி மெருகூட்டலாம். தொடர்ந்து படிங்க

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கரும்புள்ளிகள் மறைய :

கரும்புள்ளிகள் மறைய :

விட்டமின் ஈ கேப்ஸ்யூலை பிரித்து அதிலிருந்து என்ணெயை எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள் பொடியை கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். கரும்புள்ளிகள் காணாமல் போய் விடும்.

சுருக்கங்கள் மறைய :

சுருக்கங்கள் மறைய :

விட்டமின் ஈ எண்ணெயை முகத்தில் தேய்த்து இரவு முழுவதும் அப்படியே விடுங்கள். மறு நாள் காலை முகத்தை கழுவலாம். இப்படி செய்வதனால் முகத்தில் இருக்கும் சின்ன சுருக்கங்களும் மறைந்து இளமையான தோற்றத்தைப் பெறுவீர்கள்.

 கருவளையம், கண் சுருக்கம் மறைய :

கருவளையம், கண் சுருக்கம் மறைய :

கண்களின் பக்க வாட்டில் வரும் சுருக்கங்களை மறையச் செய்யும் ஆற்றல் விட்டமின் ஈ க்கு உண்டு. விட்டமின் ஈ எண்ணெயை கண்களுக்கு அடியில் தடவி அரை மணி நேரம் விடவும் அல்லது இரவில் தடவி மறு நாள் கழுவவும். கருவளையம், கண்களில் உண்டாகும் தோய்வு, சுருக்கம் எல்லாம் மறைந்துவிடும்.

வறண்ட சருமத்திற்கு :

வறண்ட சருமத்திற்கு :

வறண்ட சருமத்தில் எளிதில் சுருக்கங்கள் வந்துவிடும். மேலும் சருமமும் தொய்வடைந்து விடும். விட்டமின் ஈ எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் தினமும் செய்தால் வறண்ட சருமமும் பளிச்சிடும்.

சிவப்பான உதட்டிற்கு :

சிவப்பான உதட்டிற்கு :

சருமத்தில் ஈரப்பதம் இல்லையென்றால் எளிதில் உதடு கருப்பாகிவிடும். வெடித்து விடும். இதனை சரிப்படுத்த, உதட்டிற்கு விட்டமின் ஈ எண்ணெயை தினமும் தடவுங்கள். உதடு சிவந்த நிறத்திற்கு மென்மையாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

 மசாஜ் எண்ணெயாக :

மசாஜ் எண்ணெயாக :

வாரம் ஒருமுறை விட்டமின் ஈ எண்ணையால் முகத்தில் மசாஜ் செய்தால் எந்த வித சருமப் பிரச்சனைகளும் எட்டிப்பார்க்காது. முகப்பரு, கரும்புள்ளி, சுருக்கம் என இல்லாத இளமையான பொலிவான முகத்தை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Ways to Use Vitamin E for Skin

Best Ways to Use Vitamin E for Skin
Story first published: Thursday, September 8, 2016, 10:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter