For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எண்ணெய் சருமமா? இந்த ஆவியை பிடிங்க

By Hemalatha
|

வெய்யில் காலங்கள் வந்தாலே நிறைய குறிப்பாக டீன் ஏஜ் வயது பெண்களுக்கு கவலை தரும் விஷயம் எண்ணெய் வடியும் முகம் மற்றும் முகப்பருக்கள். என்னென்னமோ ட்ரை பண்ணியிருப்பீங்க. இதையும் ட்ரை பண்ணுங்க. ஆனால் பலன் அருமையாக இருக்கும்.

Benefits of steam facial for oily skin

இந்த சிகிச்சைக்கு பின் மறு நாள் முகத்தில் எண்ணெய் வழியாது. முகப்பருக்கள் படிப்படியாக குறைந்து சருமம் பொலிவாகும். நீங்களும் ட்ரை பண்ணுங்க.

பொதுவாகவே ஆவி பிடிப்பதனால் சரும துவாரங்கள் திறந்துவிடும். இதனால் சருமத்தில் தங்கியிருக்கும் கொழுப்பு படிமங்கள், இறந்த செல்கள் அழுக்குகள் வெளியேறி விடும். இதனால் பருக்கள் வராமல், முகத்தின் துவாரங்கள் இறுகி பளிச்சென்று வைத்திருக்கும்.

இங்கு கூறப்பட்டுள்ள இந்த மூலிகை ஆவி இன்னும் சிறந்த பலனை தரும். இதற்கு தேவையான பொருட்கள் எளிதில் கிடைக்கக் கூடியவை.

தேவையானவை :

மஞ்சள் பொடி - 1 டீ ஸ்பூன்
பட்டை - சில துண்டுகள்
க்ரீன் டீ - 1 டீ ஸ்பூன்
நீர் - ஆவி பிடிக்க தேவையான அளவு

க்ரீன் டீ சருமத்திற்கு தேவையான நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது. அவை சூரியக் கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தினை சரி செய்கிறது.

மஞ்சள் சருமத்தில் ஏற்பட்டுள்ள காயங்கள் மற்றும் கிருமிகளின் தொற்றுக்களை அழிக்கிறது. சருமத்தில் உள்வரை செல்வதால் முகப்பருக்கள் வரக் காரணமான செல்களின் மேல் செயல்புரிந்து சரி செய்கிறது.

பட்டை தொய்வுகளை சரி செய்து சுருக்கங்களை போக்கும். சருமத்தில் உள்ள கருமையை குறைக்கிரது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருகிறது


செய்முறை :

முதலில் நீரினை கொதிக்க விடுங்கள். பின்னர் அதில் பட்டையையும், க்ரீன் டீத்தூளையும் சேர்க்கவேண்டும். இரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். பின்னர் மஞ்சள் பொடியை சேர்த்து ஆவி பிடிக்கவும்.
நன்றாக கன்னம், மூக்கின் மேல் பகுதிகளில் ஆவி உள்ளே பூகும்படி செய்யுங்கள். சூடு ஆறும் வரை ஆவி பிடியுங்கள்.

வாரம் இரு முறை செய்தால் முகப்பரு எண்ணெய் வடிதல், மாசு மரு, கருமை ஆகிய பிரச்சனைகள் போய்விடும். இது முகத்திற்கு பொலிவு தந்து சுருக்கங்களை போக்கும்.

English summary

Benefits of steam facial for oily skin

Benefits of steam facial for oily skin
Desktop Bottom Promotion