வெளியே சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும் முகம் பிசுபிசுன்னு இருக்கா? அதைப் போக்க இதோ சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

என்ன தான் கோடைக்காலத்தை கடந்துவிட்டாலும், மாலையில் தாங்க முடியாத அளவில் மிகுந்த வெப்பத்தை உணர நேரிடுகிறது. மேலும் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், முகத்தில் எண்ணெய் வழிந்து சருமம் பிசுபிசுவென்று அசிங்கமாக இருக்கும். இந்த நிலையைப் போக்க சோப்பு அல்லது ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவலாம்.

ஆனால் பொலிவிழந்திருக்கும் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்ட முடியாது. அதற்கு ஒருசில ஃபேஸ் பேக்குகள் தான் உதவும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை பிசுபிசுவென்று இருக்கும் முகத்தை பொலிவோடு வெளிக்காட்ட உதவும் ஃபேஸ் பேக்குகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தியில் ஏராளமான சக்திவாய்ந்த உட்பொருட்கள் உள்ளன. இந்த சீமைச்சாமந்தியைக் கொண்டு டீ தயாரித்து, அத்துடன் ஓட்ஸ் பொடி, சிறிது பாதாம் எண்ணெய் மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

கிவி

கிவி

ஒரு கிவி பழத்தை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, கனிந்த பகுதியை மசித்து, அத்துடன் 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 துளிகள் சூரியகாந்தி எண்ணெய் சேர்த்து கலந்து, முகம், கை, கால் மற்றும் கழுத்தில் தடவி 2 நிமிடம் தேய்த்து, பின் கழுவ வேண்டும்.

சோள மாவு

சோள மாவு

சோள மாவு சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சும். அத்தகைய சோள மாவை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து, முகத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பட்டை மற்றும் ஜாதிக்காய்

பட்டை மற்றும் ஜாதிக்காய்

1 டீஸ்பூன் பட்டை பொடியுடன், 1 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி மற்றும் 2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை வெளியேறி, முகம் பொலிவாகும்.

அவகேடோ

அவகேடோ

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அத்துடன் அவகேடோ பழத்தை மசித்து சேர்த்து, அதோடு 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, பருக்களும், முதுமைக் கோடுகளும், சுருக்கங்களும் மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Beauty Tips: Face Packs To Tackle Oily Skin

Here are some face packs to tackle oily skin. Read on to know more...
Subscribe Newsletter