For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு டைரியில் இடம் பெறட்டும்:

|

முட்டை உடலுக்கு நல்லது. அழகிற்கும் அற்புதமான பலன்களைத் தருகிறது. இது எல்லாருக்கும் தெரிகின்ற விஷயம்தான். ஆனால் முட்டை ஓடும் உங்கள் அழகினை அதிகரிக்கச் செய்யும் என்பது தெரியுமா? அதன் பயன்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Add egg shell in your skin care tips

சருமம் பளபளப்பாக இருக்க :

முட்டை ஓட்டினை பொடி செய்து கொள்ளுங்கள். அதனுடன் முட்டை வெள்ளைகருவை கலந்து முகத்தில் தேயுங்கள். காய்ந்த பின் கழுவவும். கழுவிய உடனே உங்களுக்கு வித்தியாசம் தெரியும். இதனை வாரம் ஒரு முறை செய்து பாருங்கள். எப்போதும் உங்கள் முகம் மின்னும்.

வெண்மையான பற்கள் பெற :

உங்கள் பற்கள் பஞ்சள் கறைகளுடன் அழகினை கெடுக்கிறதா? அப்படியெனில் இந்த குறிப்பு உபயோகமானதாக இருக்கும். முட்டை ஓட்டினை மிக்ஸியில் சுற்றி நன்றாக பொடித்துக் கொள்ளுங்கள்.

தினமும் பல் விளக்கியவுடன், இதனைக் கொண்டு பற்களில் தேயுங்கள். முட்டை ஓட்டில் கால்சியம் பொடாசியம் மற்றும் மினரல்கள் உள்ளன. இவை பற்களுக்கு பலம் தருகிறது. எனாமலை இறுகச் செய்கிறது. பற்களின் சிதைவை தடுக்கிறது.

சென்ஸிடிவ் சருமத்திற்கு :

சென்ஸிடிவ் சருமத்திற்கு எந்த க்ரீம் போட்டாலும் அலர்ஜியாகிவிடும். நீங்கள் இயற்கையான அழகு சாதனங்களைதான் முகத்திற்கு உபயோகப்படுத்த வேண்டும்.

அவ்வகையில் முட்டை ஓடு சென்சிடிவ் சருமத்திற்கு அற்புத பலன்களை தருகிறது. முட்டை ஓட்டினை நன்றாக பொடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து, 5 நாட்கள் ஊற விடுங்கள்.

பிறகு ஒரு பஞ்சினைக் கொண்டு இந்த கலவையில் நனைத்து, முகத்தில் தேயுங்கள். காய்ந்ததும் கழுவலாம். வாரம் 3 நாட்கள் பயன்படுத்திப்பாருங்கள். உங்கள் சருமத்தில் அற்புதமாக மேஜிக் செய்யும்.

எலும்புகள் வலிமையாக :

உங்களுக்கு கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்களா? அவற்றில் ப்ரிஸர்வேட்டிவ் இல்லாமல் மாத்திரைகளை தயாரிக்க முடியாது. போதாதற்கு அவற்றில் கெமிக்கல் கலந்திருப்பார்கள். தரமானதா எனவும் நம்மால் உறுதி படுத்த முடியாது.

கால்சியம் மாத்திரைகளை நீங்கள் ஏன் இயற்கையாகவே பயன்படுத்தக் கூடாது. மிக எளிதான செய்முறைதான்.
சில முட்டை ஓட்டினை எடுத்துக் கொள்ளுங்கள்.

350 டிகிரியில் ஒவனில் சூடு படுத்திக் கொள்ளுங்கள். பின் அதனை ஆற வைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். கால்சியம் சப்ளிமென்ட்ரி தயார். இதனை பழச் சாறு,உணவு, மற்றும் திரவ உணவுகளில் கலந்து சாப்பிடலாம்.

முட்டை ஓடு அல்சருக்கும் மிக நல்லது. முட்டை ஓட்டின் பயனைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இனிமேல் வீசி எறியாதீர்கள். அவற்றை பலவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம்.

English summary

Add egg shells in your skin care tips

Add egg shells in your skin care tips
Story first published: Sunday, May 29, 2016, 7:44 [IST]
Desktop Bottom Promotion