For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெத்தலை போடாமலேயே உங்களது இதழ்கள் சிவப்பு நிறமாக 7 இயற்க்கை முறைகள்.

By Viswa
|

உங்களது இதழ்கள் நல்ல சிவப்பு நிறம் பெற கண்ட கண்ட கிரீம் எல்லாம் உபயோகப்படுத்தி, சலித்து போய் விட்டீர்களா. உங்களுக்கு தெரியுமா? எந்த

ஒரு இராசாய பொருட்களால் தயாரிக்கப்பட்ட அழகு சாதன கிரீம்களினாலும் சரும கோளாறுகளுக்கு நிரந்தர தீர்வளிக்க இயலாது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் விளம்பரங்களை கண்டு ஏமாறாமல், இயற்கை முறைகளைக் கைய்யாள வேண்டும் என்பதே ஆகும்.

தற்போதைய சுற்றுப்புற சூழ்நிலையின் காரணமாக நமது சருமம் நிறைய பிரச்சனைகளுக்கு உள்ளாகிறது. வலுவான வெளிப்புற சருமமே வெடிப்பு

வறட்சி என பல சிரமங்களுக்கு உள்ளாகும் போது. நமது உடலிலேயே மிக மிருதுவான சருமம் கொண்ட பாகம் இதழ்கள். எனவே இதழ்களை பாதுகாப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்களுக்கே தெரியும் இதழ்களில் வெடிப்பு ஏற்பட்டால் சரியாக பேச கூட இயலாது, அவ்வளவு எரிச்சல் உண்டாக்கும். இதற்கெல்லாம் இயற்கை முறையில் தீர்வு காண வேண்டுமா? தெரிந்துக்கொள்ள, தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொதினா மற்றும் கொத்தமல்லி

பொதினா மற்றும் கொத்தமல்லி

உங்களது இதழ்கள் சிவப்பாக, ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் என்னவெனில், பொதினா மற்றும் கொத்தமல்லியை அரைத்து அதன் ஜூஸ் எடுத்து உங்களது இதழ்களில் தடவி வந்தால், இதழ்கள் சிவப்பாகும்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட்டின் ஜூஸ் எடுத்து இதழ்களில் தடவி வந்தால் இயற்கையாகவே உங்களது இதழ்கள் சிவப்பு நிறம் பெறும். இது மட்டும் இன்றி, உங்களது இதழ்களில் இருக்கும் கருமையை போக்கவும் பீட்ரூட் உதவுகிறது.

வெண்ணெய் மற்றும் சர்க்கரை

வெண்ணெய் மற்றும் சர்க்கரை

வெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து இதழ்களில் தடவி வந்தால் உங்களது இதழ்கள் விரைவில் கருமை நீங்கி சிவப்படையும். மற்றும் இது உங்களது இதழ்களில் வறட்சியை சரி செய்து மிருதுவாக்கிடவும் பயன் தருகிறது.

இளநீர்

இளநீர்

இளநீர், வெள்ளரி மற்றும் எலுமிச்சை ஜூஸை கலந்து இதழ்களில் உபயோகப்படுத்தி வந்தால். உங்களது இதழ்களில் இருக்கும் கருமை எளிதில் போக்கிடலாம். இது ஒரு சிறந்த நிவாரணியைக் கருதப்படுகிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை ஜூஸை கலந்து உங்களது இதழ்களில் தடவி வந்தால். உங்களது இதழ்கள் நன்கு சிவப்பு நிறம் ஆக உதவும்.

குங்குமப்பூ

குங்குமப்பூ

உங்களது இதழ்கள் நல்ல சிவப்பு நிறம் அடைய மற்றொரு சிறந்த இயற்க்கை முறை என்னவெனில், குங்குமப்பூவுடன் நெய் அல்லது வெண்ணெய்யை கலந்து உங்களது இதழ்களில் தடவி வந்தால், உங்களது இதழ்கள் நல்ல சிவப்பு நிறம் ஆகும்.

வெண்ணெய்

வெண்ணெய்

வெண்ணெய்யை இதழ்களில் தடவுவதன் மூலம், இதழ் வெடிப்பில் இருந்து நல்ல தீர்வு காண இயலும். மற்றும் இதில் உள்ள ஈரப்பதம் இதழ்களை மிருதுவாக்கிடவும் நன்கு சிவப்பாக்கிடவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Remedies For Your Reddish Lips

there are some natural remedies that cure your lips from scar and result you reddish lips
Story first published: Tuesday, February 10, 2015, 17:01 [IST]
Desktop Bottom Promotion