வீட்டின் முன் தேங்கியுள்ள சாக்கடை நீரினால் சருமத்தில் ஏற்படும் அரிப்புக்களை தடுக்க சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

சருமத்தில் பூச்சிகள் கடித்தால் அல்லது வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தொற்றுக்களினால் அரிப்புக்கள் ஏற்படும். அதிலும் தற்போது கனமழை பெய்து வெள்ளம் வந்து, எங்கும் மழைநீருடன் சாக்கடை நீர் முழங்கால் அளவு தேங்கியிருப்பதால், சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படும். இப்படி சரும அரிப்புக்களை ஆரம்பத்திலேயே ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயற்சித்தால், மருத்துவரிடம் செல்லாமலயே உடனே நீக்கலாம். வெள்ள நீரினால் சரும நோய்கள் வராமல் இருக்க பெட்ரோலியம் ஜெல்லி யூஸ் பண்ணுங்க...

இங்கு தேங்கியுள்ள அழுக்கு நீரினால் சருமத்தில் ஏற்படும் அரிப்புக்களை நீக்க சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் சருமத்தில் கிருமிகளின் தாக்கத்தினால் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை

கற்றாழை

கற்றாழை மிகவும் சிறப்பான ஆன்டி-பாக்டீரியல், பூஞ்வை எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை கொண்ட பொருள். இது அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கும் உதவும். எனவே கற்றாழை ஜெல்லை அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவி வந்தால், நிச்சயம் சரிசெய்யலாம்.

வைட்டமின் ஈ ஆயில்

வைட்டமின் ஈ ஆயில்

வைட்டமின் ஈ காப்சூலை எடுத்து, அதனுள் உள்ள எண்ணெயை அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவி வந்தால், சருமத்தில் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

துளசி இலைகள்

துளசி இலைகள்

துளசி இலைகளை அரைத்து, அதில் ஆலிவ் ஆயில் சிறிது சேர்த்து, 2 பூண்டுகளை தட்டிப் போட்டு, உப்பு மற்றும் மிளகுத் தூள் ஒரு சிட்டிகை சேர்த்து ஒன்றாக கலந்து, அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவி வந்தால், பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளினால் ஏற்படும் அரிப்புக்கள் உடனே அடங்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா சரும அரிப்புக்களை சரிசெய்யும். அதற்கு பேக்கிங் சோடாவை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அரிப்பை ஏற்படுத்தும் கிருமிகள் அழிக்கப்படும்.

வினிகர் மற்றும் பூண்டு

வினிகர் மற்றும் பூண்டு

சில பூண்டு பற்களை எடுத்துக் தட்டி, 1/2 கப் வெள்ளை வினிகரில் கலந்து, அந்த கலவையைக் கொண்டு அரிப்புள்ள இடங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் பூண்டில் உள்ள நேச்சுரல் ஆன்டி-பயாடிக் அரிப்புக்களைத் தடுக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றினை காட்டனில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 8-10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும அரிப்பு குணமாகும்.

பட்டை

பட்டை

ஒரு டீஸ்பூன் பட்டை பொடியில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அரிப்புள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ, கடுமையான அரிப்புக்கள் சரியாகும்.

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கரு

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு, அதில் சோள மாவு சேர்த்து கலந்து, அதனை அரிப்பு அதிகம் உள்ள இடங்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ, சருமத்தில் ஏற்படும் அரிப்புக்கள் குணமாகும்.

தக்காளி

தக்காளி

2 தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனாலும் சரும அரிப்புக்கள் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Remedies For Skin Rash Due To Dirty Stagnant Water

Here are some natural remedies for skin rash due to dirty stagnant water. Read on to know more.
Story first published: Monday, December 7, 2015, 15:12 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter