For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரோஸ் வாட்டர் கொண்டு முகப்பருக்களை வேகமாக போக்குவது எப்படி?

By Maha
|

ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் பொதுவான சரும பிரச்சனை முகப்பரு. இந்த முகப்பருவால் நிறைய பேர் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். மேலும் இதனைப் போக்க நிறைய க்ரீம்களையும் வாங்கி பயன்படுத்தியிருப்பார்கள். இருப்பினும் அதனால் முகப்பருக்கள் அதிகமாகியிருக்குமே தவிர, குறைந்திருக்காது. ஆனால் இயற்கை வழிகளைப் பின்பற்றினால் நிச்சயம் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காணலாம்.

அதிலும் முகத்தில் உள்ள அழுக்குகளைப் போக்க பயன்படும் ரோஸ் வாட்டரை பலவாறு பயன்படுத்தி பருக்களை எளிதில் போக்க முடியும். உங்களுக்கு ரோஸ் வாட்டரைக் கொண்டு எப்படி முகப்பருக்களைப் போக்குவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு பருக்களைப் போக்கும் சில ரோஸ் வாட்டர் ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை

ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை

10 துளிகள் ரோஸ் வாட்டரில், 6 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் அவை முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் எண்ணெய்ப்பசைகளை முற்றிலும் வெளியேற்றி, பருக்களை வேகமாக போக்கும்.

ரோஸ் வாட்டர் மற்றும் ஆரஞ்சு தோல்

ரோஸ் வாட்டர் மற்றும் ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு ரோலில் பருக்களை வேகமாக நீங்க வைக்கும் வைட்டமின் சி உள்ளது. அத்தகைய ஆரஞ்சு தோலின் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, பருக்கள் நீங்கும்.

ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம்

ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம்

சந்தனப் பவுடரை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, கழுவ பருக்கள் நீங்குவதோடு, சருமத்தின் பொலிவும் அதிகரிக்கும்.

ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மெட்டி

ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மெட்டி

பொதுவாக முகப்பருவைப் போக்க முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவோம். அத்தகைய முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ, பருக்கள் விரைவில் மறையும்.

ரோஸ் வாட்டர் மற்றும் இஞ்சி

ரோஸ் வாட்டர் மற்றும் இஞ்சி

இஞ்சியில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் உள்ள கிருமிகளை அழித்து, பருக்கள், தழும்புகள் போன்றவற்றை மறையச் செய்யும். அத்தகைய இஞ்சியை சாறு எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ, முகத்தில் உள்ள பருக்கள் சீக்கிரம் போய்விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Rose Water To Treat Acne

In this article, we at Boldsky will be sharing with you some of the ways to use rose water to treat acne. Read on, try it and notice the difference by yourselves.
Desktop Bottom Promotion