Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
ஆயுர்வேத மூலிகையான வேப்பிலையைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம்?
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய வேப்பிலை பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது சருமத்தில் மட்டுமின்றி, உடலில் ஏற்படும் பல நோய்களுக்கும் சிகிச்சையளிக்க ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏனெனில் வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு அழற்சி, நோயெதிர்ப்பு அழற்சி போன்றவை அதிகம் உள்ளது. எனவே இவற்றைக் கொண்டு சருமத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், பருக்கள், சுருக்கங்கள், தழும்புகள் மற்றும் இதர சரும பிரச்சனைகளைப் போக்கலாம்.
சரி, இப்போது எந்த பிரச்சனைகளுக்கு எப்படியெல்லாம் வேப்பிலையைக் கொண்டு ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போம்.

அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும்
ஒரு கையளவு வேப்பிலை மற்றும் துளசி இலையை வெயிலில் உலர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து, அதில் சிறிது சந்தனப் பொடி மற்றும் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

கரும்புள்ளி மற்றும் வெள்ளை புள்ளிகளை நீக்க...
வேப்பிலையை அரைத்து அதில் சிறிது தேன், பால் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, வாரத்திற்கு மூன்று முறை முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்துளைகள் விரிவடைந்திருந்தால் அவை சுருங்கும் மற்றும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகளின் பிரச்சனைகளில் இருந்து விடைபெறலாம்.

தழும்புகளை போக்க...
வேப்பிலையை நிழலில் உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி மசாஜ் செய்து, உல வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தில் பருக்களால் வந்த கருமையான தழும்புகளைப் போக்கலாம்.

முகப்பரு
முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், அதனைப் போக்க, கொதிக்கும் நீரில் வேப்பிலையை சேர்த்து, வேப்பிலை மென்மையானதும், அதனை எடுத்து அரைத்து, அத்துடன் தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், பருக்கள் போய்விடும்.

பொலிவான சருமத்திற்கு...
சிறிது வேப்பிலை பொடியுடன், கடலை மாவு, 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து நன்கு காய்ந்ததும், குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், நிச்சயம் பொலிவான மற்றும் மென்மையான சருமத்தைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications