For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் துணை கொடுத்த முத்தத்தால் சருமத்தில் தழும்பு விழுந்துவிட்டதா?

By Maha
|

முத்தம் கொடுத்தாலும் சிவப்பு நிறத்தில் தழும்புகள் விழும் என்பது தெரியுமா? குறிப்பாக இம்மாதிரியான நிலை திருமணமான புதுத்தம்பதியர்களுக்கு அதிகம் ஏற்படும். இத்தழும்புகளானது நீல நிறத்திலோ அல்லது சிவப்பு நிறத்திலோ மற்றும் சில நேரங்களில் வீக்கத்துடனோ இருக்கும். முத்தத்தால் ஏற்படும் தழும்புகளை எளிதில் போக்கலாம்.

இங்கு உங்கள் துணையின் முத்தத்தால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்க சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை முயற்சித்து அந்த தழும்புகளைப் போக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ்கட்டி மசாஜ்

ஐஸ்கட்டி மசாஜ்

ஐஸ்கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்தால், அவ்விடத்தில் ஏற்பட்ட இரத்தக்கட்டை நீக்கலாம். ஆனால் ஐஸ்கட்டிகளைக் கொண்டு நேரடியாக சருமத்தில் மசாஜ் செய்யக்கூடாது. இது நிலைமையை மோசமாக்கும். மாறாக ஒரு துணியில் வைத்து, பின் பாதிக்கப்பட்ட இடத்தில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத் துண்டை எடுத்து, முத்தத்தால் ஏற்பட்ட தழும்பில் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு மூன்று முறை செய்து வந்தால், விரைவில் அந்த தழும்புகள் மறையும்.

குளிர்ந்த ஸ்பூன்

குளிர்ந்த ஸ்பூன்

மற்றொரு உடனடி நிவாரணம், சில்வர் ஸ்பூனை சிறிது நேரம் ப்ரீசரில் வைத்து, பின் அதனைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் மசாஜ் செய்ய, விரைவில் சரியாகும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹாலை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர் வைத்து, உடனே மாய்சுரைசர் தடவ வேண்டும். இப்படி செய்வதால், அதில் உள்ள குளிர்ச்சி மற்றும் குணப்படுத்தும் தன்மை முத்தத்தால் ஏற்பட்ட தழும்புகளை மறைக்கும்.

வாழைப்பழத் தோல்

வாழைப்பழத் தோல்

வாழைப்பழத்தின் தோலை முத்த தழும்புகள் உள்ள இடத்தில் சிறிது நேரம் வைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்து வந்தால், ஒரே நாளில் அந்த தழும்புகளை மறைய வைக்கலாம்.

வெதுவெதுப்பான ஒத்தடம்

வெதுவெதுப்பான ஒத்தடம்

முத்த தழும்புகள் 2-3 நாட்களாக இருந்தால், அப்பகுதியில் வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுக்க சரிசெய்யலாம். அதற்கு வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து பிழிந்து, அதனைக் கொண்டு முத்தத்தால் ஏற்பட்ட இரத்தக்கட்டு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க, இரத்தக்கட்டு நீங்கி, தழும்பு மறைய ஆரம்பிக்கும்.

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட்

முத்த தழும்பு உள்ள இடத்தில் சிறிது டூத் பேஸ்ட்டை தடவி, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வர, அத்தழும்புகள் விரைவில் மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Get Rid Of Love Bites

Check out the list of Home Remedies To Get Rid Of Love Bites in this article. Read on to know more about the remedies to get rid of love bites.
Desktop Bottom Promotion