சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் ஃபேஸ் பேக்குகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உங்களுக்கு வயதாகிவிட்டால், அதனை சருமத்தைக் கொண்டே சொல்லிவிடலாம். எப்படியெனில் வயதாகிவிடால் சருமத்தில் சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், புள்ளிகள் போன்றவை வந்து, உங்களை முதுமையானவர் போன்று வெளிக்காட்டும். ஆனால் தற்போது பலருக்கும் இளமையிலேயே முதுமை தோற்றம் வருகிறது. இவை அனைத்திற்கும் பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை போன்றவை தான் காரணம்.

ஆனால் போதிய பராமரிப்புக்களை பின்பற்றினால், முதுமைத் தோற்றத்தைத் தடுக்கலாம். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகளைப் போட்டு வந்தால், சரும சுருக்கம், முதுமைக் கோடுகள் போன்றவற்றைத் தடுக்கலாம்.

சரி, இப்போது முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்களைப் போக்கும் ஃபேஸ் பேக்குகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசி மாவு மற்றும் பால் பேக்

அரிசி மாவு மற்றும் பால் பேக்

அரிசி மாவு சுருக்கமாக உள்ள சருமத்தை இறுக்கமடையச் செய்யும். எனவே அந்த அரிசி மாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சரும சுருக்கங்கள் மட்டுமின்றி இறந்த செல்களும் வெளியேறிவிடும்.

ஓட்ஸ் மற்றும் தயிர் பேக்

ஓட்ஸ் மற்றும் தயிர் பேக்

ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சரும செல்கள் ஊட்டம் பெற்று, சருமம் பொலிவோடும், இளமையோடும் காணப்படும்.

முட்டை

முட்டை

இளமையை தக்க வைக்க முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் ஊற்றி, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வாழைப்பழ ஃபேஸ் பேக்

வாழைப்பழ ஃபேஸ் பேக்

வாழைப்பழத்தை மசித்து, அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சரும சுருக்கங்கள் மட்டுமின்றி, முகமும் பொலிவோடு இருக்கும்.

பப்பாளி மற்றும் எலுமிச்சை

பப்பாளி மற்றும் எலுமிச்சை

பப்பாளியை மசித்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பிசைந்து, அதனை முகத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்திற்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் மற்றும் பாப்பைன் என்னும் நொதி சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தையும் வெளியேற்றி, சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும் பாதுகாக்கும்.

மாம்பழம் மற்றும் ரோஸ் வாட்டர்

மாம்பழம் மற்றும் ரோஸ் வாட்டர்

மாம்பழத்தை மசித்து, அதில் ரோஸ் வாட்டர் கலந்து, சருமத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால், பொலிவிழந்து காணப்பட்ட சருமம் இளமையோடும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Face Packs That Delay Skin Ageing

There are some best home remedies for younger looking skin. These are best natural ways to make skin younger. Here are some effective face mask for younger.
Story first published: Monday, August 24, 2015, 14:41 [IST]
Subscribe Newsletter