Latest Updates
-
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும்
முகப்பருவைப் போக்கும் ஓட்ஸ் ஸ்கரப்!!!
சருமத்தின் அழகைக் கெடுப்பதில் முதன்மையானது முகப்பரு தான். இத்தகைய முகப்பரு வந்தால், அது சருமத்தின் பொலிவை குறைத்து, அசிங்கமாக வெளிப்படுத்தும். இந்த முகப்பருவைப் போக்குவதற்கு கடைகளில் பல அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இருப்பினும் அந்த பொருட்கள் எந்த ஒரு பலனையும் தருவதில்லை.
ஆகவே அப்படிப்பட்ட பொருட்களை பணம் செலவழித்து வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை முறையில் போக்கினால் முகப்பரு நீங்குவதுடன், சருமமும் பொலிவோடு அழகாக மின்னும். அதிலும் உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸைப் பயன்படுத்தி முகப்பருவை போக்கலாம். அப்படி பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்தில் பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், பருக்கள் இருந்தால், அவை விரைவில் போய்விடும்.
சரி, இப்போது அந்த ஓட்ஸ் உடன் எவற்றையெல்லாம் சேர்த்து ஸ்கரப் செய்வது என்று பார்ப்போம். அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து வாருங்கள்.

ஓஸ்ட் மற்றும் தேன்
ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தேன் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை பின்பற்றினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்து வெளியேறி, சருமம் மென்மையாகவும், பருக்களின்றியும் இருக்கும்.

ஓட்ஸ் ஸ்கரப்
சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்ற ஓட்ஸ் மிகவும் சிறந்த பொருள். எனவே அத்தகைய ஓட்ஸை பொடி செய்து, முகத்தை கழுவி பின் ஓட்ஸ் பொடியைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓட்ஸ் மற்றும் மஞ்சள் தூள்
மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும். எனவே இந்த மஞ்சளை ஓட்ஸ் உடன் சேர்த்து ரோஸ் வாட்டர் ஊற்றி கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி சருமத்தை மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனாலும் முகப்பருக்களைப் போக்க முடியும்.

ஓட்ஸ் மற்றும் பால்
ஓட்ஸ் பொடியுடன் பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதன் மூலம் சரும அழகைக் கெடுக்கும் பருக்களை போக்க முடியும்.

ஓட்ஸ் மற்றும் பேக்கிங் சோடா
ஓட்ஸ் பொடி மற்றும் பேக்கிங் சோடாவை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதில் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து 5 நிமிடம் ஊற வைத்து நன்கு பேஸ்ட் செய்து, பின் அதனைக் கொண்டு சருமத்தை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக இந்த முறையின் போது, கலவையை கண்களுக்கு அருகில் எடுத்துச் செல்ல வேண்டாம். இறுதியில் வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications