Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கிளிசரினை சருமத்திற்கு பயன்படுத்துவது எப்படி?
பொய்யான அழுகையை வரவழைக்கும் கிளிசரின் சினிமா மற்றும் தொலைக்காட்சியில் வரும் நடிகை மற்றும் நடிகர்களுக்கு மட்டும் பயன்படும் பொருள் அல்ல. கிளிசரின் பல நன்மைகளை தரக்கூடிய திரவமாகவும் உள்ளது. நமது சருமத்தை அழகுப்படுத்தும் குணங்களும் கூட கிளிசரினுக்கு உண்டு. அழகுப்படுத்துவதிலும் சருமப் பராமரிப்பிற்கும் இப்பொருள் பெருமளவு உதவுகிறது.
மேலும் சில: சருமத்தை பளபளக்க வைக்கும் சில அற்புத எண்ணெய்கள்!!!
கிளிசரின் கண்ணீர் சுரப்பியை தூண்டி பொய்யான அழுகையை வரவழைக்கிறது. அதுமட்டுமல்லாமல் நமது தோல் திசுக்களை புதுப்பிக்கவும் உதவுகின்றது. கிளிசரினை நேரடியாக சருமத்தில் தடவலாம் அல்லது வேறு ஏதேனும் பொருளுடன் சேர்க்கையாகவும் தடவரலாம். இந்த கலவையை ஃபேஸ் பேக் மற்றும் மாஸ்க்காக அணிந்து கொள்ளவும் முடியும்.

கிளிசரினின் சருமப் பராமரிப்பு முறைகளை பற்றி கீழ் வரும் பகுதியில் நாம் பார்ப்போம்:
ஈரப்பதமூட்டுதல்: கிளிசரின் சிறந்த ஈரப்பதமூட்டும் திரவமாக உள்ளது. வறண்ட மற்றும் சோர்வான சருமத்தை குறைக்க வல்லது. ஆகையால் இப்பொருள் குளிர் காலத்தில் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. இந்த திரவத்தை நேரடியாக சருமத்தில் தடவ முடியும். ஒரு பஞ்சு உருண்டையை எடுத்து அதில் கிளிசரினை நனைத்து சருமத்தில் தடவ வேண்டும். அதை போட்ட சில நொடிகளிலேயே சருமம் ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் காணப்படும். மருத்துவ குணமுள்ள கிளிசரின் சொரசொரப்பான, வறண்ட மற்றும் எரிச்சல் தரும் சருமத்தை குணமாக்க முடியும். இதனால் சருமம் மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும். கிளிசரினின் பயன்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
சுத்தம் செய்யும் திரவம்: தோலில் உள்ள அழுக்கு மற்றும் தூசி ஆகியவற்றை சுத்தம் செய்ய கிளிசரினை பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் இரண்டையும் கலந்து சுத்தப்படுத்தும் திரவமாக பயன்படுத்தலாம். இரவு தூங்கும் முன்பு இந்த கலவையை கொண்டு முகத்தை துடைத்த பின் தூங்கச் செல்லுங்கள். இதை தினந்தோறும் செய்யும் போது சிறந்த வகையில் உங்கள் தோலின் ஓட்டைகளில் இருக்கும் அழுக்குகளை அவை சுத்தப்படுத்தி மென்மையான சருமத்தை தருகின்றன. கிளிசரினின் பல பயன்களில் சுத்தம் செய்வதும் ஒரு சிறந்த குணமாக உள்ளது.
சருமத்திற்கு ஊட்டம்: சருமத்திற்கு ஊட்டத்தை அளிக்கும் திரவமாக கிளிசரின் உள்ளது. ஆகையால் பல அழகு சாதன பொருட்களில் இந்த திரவத்தை பயன்படுத்துகின்றனர். கிளிசரின் சருமத்தின் ஈரப்பதத்தை சரியான அளவில் பராமரித்து தேவையான அளவு ஊட்டத்தை கொடுக்க முற்படுகின்றது. ஊட்டம் கொடுக்கும் பொருளாக அமைவதற்கு மாய்ஸ்ட்ரைசருடன் கிளிசரினையும் சேர்த்து முகத்தில் பேஸ் பேக் மற்றும் மாஸ்க்காக பயன்படுத்தலாம். கிளிசரினின் ஊட்டமூட்டும் மற்றும் மென்மைப்படுத்தும் பயன்களால் தினசரி இதை பயன்படுத்தும் போது சருமம் ஆரோக்கியமாகவும் புத்துணர்வுடனும் காணப்படும்.
சரும பராமரிப்பு: வறண்ட மற்றும் எரிச்சல் உள்ள சருமத்தில் பயன்படுத்தும் மருந்துகளிலும் கிளிசரின் பயன்படுத்தப்படுகிறது. குளிர் மற்றும் மாசுத்தன்மையின் காரணமாக சருமத்தில் சொறி மற்றும் தேமல் ஏற்படுகிறது. அது போன்ற சமயங்களில் கிளிசரினை பயன்படுத்தினால் இந்த பிரச்சனைகளை தவிர்க்க முடியும். சரும பராமரிப்பு மருந்துகளிலும் இவை முக்கிய அங்கமாக உள்ளன. இதை நாம் தினசரி பயன்படுத்தும் போது சருமம் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றது. ஆகையால் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வித்தியாசத்தை காணுங்கள்.
கரும்புள்ளிகளை குறைத்தல்: பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் கரும்புள்ளிகளை குறைக்கும் சக்தி கிளிசரினுக்கு உள்ளது. உடனடியாக இல்லாவிட்டாலும், தினந்தோறும் இதை பயன்படுத்தும் போது சிறந்த பலனை பார்க்க முடியும். கிளிசரினை புள்ளிகள் மற்றும் பருக்கள் இருக்கும் இடத்தில் பஞ்சு கொண்டு தடவினால் அவைகள் மறைந்து விடும். ஆனால் பருக்கள் வெடித்த நிலையில் இருக்கும் போது அதிகம் பயன்படுத்த வேண்டாம். ஆகையால் மேல் கூறிய வகையில் கண்ணீரை உண்டாக்கும் திரவமாக மட்டுமல்லாமல் பல நல்ல குணங்களை கொண்டதாகவும் கிளிசரின் உள்ளது.



Click it and Unblock the Notifications
